1.2.11

கோணம்


I
ஒரு பணக்கார அப்பா தன் பையனுக்கு வறுமையென்றால் என்னவென்று தெரியட்டும் என்ற நினைப்பில் ஒரு குக்கிராமத்துக்குக் கூட்டிப்போனார். எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் திரும்பும்போது கேட்டார்:

இப்பப் புரிஞ்சுக்கிட்டியா வறுமைன்னா என்னன்னு?

நம்ம கிட்ட ஒரு நாய். இங்க எல்லார் கிட்டயும் நாலு.
நம்ம கிட்ட ஒரு தொட்டித் தண்ணி. இங்க ஒரு பெரிய நதியே இருக்கு.
நம்ம கிட்ட விளக்குதான் இருக்கு.இவங்களுக்கோ கோடிக்கணக்குல நட்சத்திரம்.
நம்ம கிட்ட ஒரு சின்னத் துண்டு நிலம்.இவங்களோ பெரிய பெரிய வயலோட இருக்காங்க.
நாம சாப்பிடறதை விலைக்கு வாங்குறோம். ஆனா இவங்க தானே பயிரிட்டு தானே சாப்டுக்கறாங்க.

பையன் இன்னும் அடுக்கிக் கொண்டே போக அப்பா மயங்கிவிழுந்தார்

ரொம்ப தேங்ஸ்பா. இவங்களைப் பாத்தப்புறம்தான் தெரியுது நாம எவ்வளவு ஏழைன்னு.

II
ஒரு ஏழைச்சிறுவன் தன் விலையுயர்ந்த காரையே உற்றுப்பார்ப்பதைக் கண்ட அவன் அந்தச் சிறுவனை ஏற்றிக்கொண்டு ஒரு ரௌண்ட் அடித்தான்.

எப்படி இருந்தது சவாரி?
அட்டகாசம். என்ன விலை இருக்கும் இந்தக் கார்?
யாருக்குத் தெரியும்? என்னோட அண்ணா எனக்குப் பரிசாகக் கொடுத்தான்.
ரொம்ப நல்ல விஷயம்.
ஒனக்கு இப்படி ஒரு அண்ணா இல்லையேன்னு வருத்தமா இருக்கா?
இல்லை.நான் அப்படி ஒரு அண்ணாவா இல்லையேன்னு வருத்தமா இருக்கு.

III
தன்னிடம் இல்லாததைத்தான் இரு சிறார்களும் கண்டுகொண்டார்கள். ஆனால் பணக்காரச் சிறுவனின் அனுபவத்தில் எத்தனை வறுமை? ஏழைச் சிறுவனின் அனுபவத்தில் எத்தனை செல்வம்?

ஒவ்வொருவரும் எப்படி ஒரு விஷயத்தைப் பார்க்கிறோம்-யூகிக்கிறோம்-ஏற்றுக்கொள்கிறோம் என்பதை இந்த இரு குட்டிக் கதைகளும் சொல்கின்றன.

வர்ட்டா?

32 கருத்துகள்:

RVS சொன்னது…

அண்ணா!!! அருமை... இரண்டும் இரண்டு இரத்தினங்கள். ;-)

Nagasubramanian சொன்னது…

true:)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டுமே இரண்டு விதமான கோணங்களை நமக்குச் சொல்கிறது.

நல்ல பகிர்வுக்கு நன்றி.

ஹேமா சொன்னது…

வாழ்வில் இத்தனை அனுபவங்களுக்குப் பிறகும் இந்தக் கதைகள் கதை சொல்கிறது சுந்தர்ஜி !

இராமசாமி சொன்னது…

பாஸிட்டிவ் சிந்தனைகள் :)

Samudra சொன்னது…

nice

G.M Balasubramaniam சொன்னது…

கலக்கிட்டீங்க சுந்தர்ஜி. புதிய கோணங்கள் புதிய பரிமாணங்கள் என்று ஜொலிக்கிறீர்கள் கீப் இட் அப்.

வித்யாஷ‌ங்கர் சொன்னது…

good very intersting

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

முக் ‘கோணத்தில்’ ஒன்று ஏற்கனவே கேள்விப்பட்டது.

இரண்டாவது இன்று தான் கேள்விப்படுவது.

மூன்றாவதான தங்கள் விளக்கம் தான், முக்கோணத்தின் அடித்தளமாக அமைந்துள்ளதோடு, அனைவரும் உணர வேண்டியது.

Harani சொன்னது…

இழைந்தோடுகிறது மகிழ்ச்சி. மனதுக்குப் பாந்தமான பதிவு சுந்தர்ஜி. பயணத்தில் இருக்கிறேன். விரைவில் தளர்வாய் வருகிறேன்.

Ramani சொன்னது…

இரண்டு சிறுகதைகளும் சிறந்த கதைகள்
இதுபோன்ற கதைகளுடன் அடிக்கடி வாருங்கள்
ஆவலுடன் காத்திருக்கிறோம்.வாழ்துக்களுடன்...

பா.ராஜாராம் சொன்னது…

நிறைய எழுதி இருக்கீங்க போல சுந்தர்ஜி!

நிறைய வாசித்தும் போயிருக்கிறேன். வாசிக்கவும் இருக்கு.

சிம்ப்ளி, "செம ப்ளாக்கர் பாஸ்!"

காமராஜ் சொன்னது…

ஆஹா ஆஹா வழிந்தோடுகிறது அன்பும் பூரிப்பும்.சின்னமா,க்யூட்டா,அர்த்தச்செறிவோடு. கிராமத்துக்குப் போனவனை தகப்பன் சாமியாக்கிட்டீங்க.கைகுடுங்க சுந்தர்ஜீ....

kasthurirajam சொன்னது…

wow....beautiful!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சுந்தர்ஜி சூப்பர்!!!

சிவகுமாரன் சொன்னது…

ஏழ்மையும் வறுமையும் நம் மனங்களில் தான் இருக்கின்றன என்பதை மிக அழகாக சொல்லும் கதைகள். பெரும்பாலான பிள்ளைகள் அல்ல பெரியவர்களே இன்று அந்த முதலாம் வகையினராகத்தான் இருக்கின்றனர்.
மன்னிக்க வேண்டும் ஜீ. என்னால் உடனுக்குடன் பின்னோட்டம் இட முடியவில்லை. காரணம் என்னை வலை மேய விடாமல் கட்டிப் போட்டு விடுகிறார்கள். அறுத்துக் கொண்டு தான் ஒடி வர வேண்டியிருக்கிறது உங்கள் புல்வெளிக்கு. என்ன செய்வது தவிடும் புண்ணாக்கும் என் பசியைத் தீர்ப்பதில்லை.

சுந்தர்ஜி சொன்னது…

ரெண்டும் உங்களுக்குத்தான் ஆர்.வி.எஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

உண்மையைப் புன்னகையுடன் உஅரைத்த நாக்ஸ்க்கு நன்றியும் :))

சுந்தர்ஜி சொன்னது…

இரு கோணங்களையும் ஒரே இடத்தில் நின்று பார்த்த வெங்கட் க்ரேட்.

சுந்தர்ஜி சொன்னது…

ஆத்யந்தமில்லா சுரங்கமல்லவா நம் வாழ்க்கை.

எந்த அனுபவம் முடிவுற்றதாய் நினைக்கிறோமோ அது அடுத்த அனுபவத்துக்கான படியல்லவோ ஹேமா?

சுந்தர்ஜி சொன்னது…

என்னவே ராம்ஸ் ஒத்த வரீல தப்புதீரு.பொறகு கவனிச்சுக்கிடுதேன் ஒம்ம.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சமுத்ரா.

சுந்தர்ஜி சொன்னது…

எல்லாம் பெரியவங்க உங்களோட ஆசீர்வாதம்தான் பாலு சார்.நீங்க போன பாதைல தானே நாங்க வந்துக்கிட்டிருக்கோம்.

சுந்தர்ஜி சொன்னது…

விதயாஷங்கரின் தமிழ் எத்தனை உசத்தி என்று ஏங்க வைக்கிறது தமிழ் கிடைக்க வழியற்ற உங்கள் வெள்ளைக்காரன் மொழி. நன்றி வித்யாஷங்கர்.

சுந்தர்ஜி சொன்னது…

நான் சொன்னதை எடுத்துச் சொன்ன உங்க ஆழம் அலாதியானது கோபு சார்.

நேசிக்கிறேன் உங்களை.

சுந்தர்ஜி சொன்னது…

ஹரணி!முடிச்சுட்டு வாங்கப்பு ப்ரயாணத்த!ஏங்கிக்கிட்டு இருக்கோமுல்ல பயபுள்ளைங்க.தளர்வெல்லாங் கெடயாது.சும்மா வெறப்பா கெத்தா வாங்கப்பு.

சுந்தர்ஜி சொன்னது…

எனக்குமே ரொம்பப் பிடித்த பாணி இது ரமணி சார்.ஆலோசனைக்கு நன்றி.சீக்கிரமே அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நெறைய எழுதி என்ன பண்ண பா.ரா?

சுருக்கமா எழுதியும் எழுதாமலும் வார்த்தைக்கு நடூல இடைவெளிய உண்டுபண்ணத் தெரியல்லியே ராசா!கத்துக் குடுங்க.கத்துக்கிட்டு இருக்கேன்.

சுந்தர்ஜி சொன்னது…

காமராஜ்.அன்புக்கு ரொம்ப நன்றி.நீங்கள் காட்டும் கிராமங்களில்தான் நான் வாழ்கிறேன்.என் தகப்பன் சாமி நீங்கதான்.

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி கஸ்தூரிராஜம்.

உங்க ப்ளாகும் வித்யாசமான விஷயங்களோட இருக்கறதப் பார்த்தேன். சீக்கிரம் மேய வருவேன்.

நீங்களும் அடிக்கடி வாங்க.

சுந்தர்ஜி சொன்னது…

ரொம்ப நன்றி ஆர்.ஆர்.ஆர்.சார்.

பொண்ணு கம்யூட்டர் வேணும்னு ஒத்த மௌஸ்ல நின்னாளோ?

ஒரே வார்த்தையில விடையளிச்சுட்டு தப்பிச்சுட்டேளே ந்யாயமா ஸ்வாமி?

சுந்தர்ஜி சொன்னது…

நம்ம கதையும் அதேதான் சிவா.எல்லாத்துலயிருந்தும் அறுத்துக்கிட்டு வந்துதான் கட்டமுடியுது வார்த்தைகளை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...