25.2.11

நிழல்



I
போய்வருகிறேன்
என்று ஒவ்வொரு முறை
சொல்லும்போதும்
உயிர் பெறுகிறது
மரணத்தின் நிழல் தோய்ந்த
முகம்.

II

நிழற்படங்களில் சிரிக்கும்
யாரும்
அறிய முடிந்ததில்லை
எந்தப் படம்
தங்கள் மறைவுச்செய்தியில்
சிரிக்கக் கூடும்
என்பதை.

25 கருத்துகள்:

malini சொன்னது…

6-1-14-20-1-19-9-3.

open this puzzle and take out this gift for your cute poems, if you can.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

திருச்சியிலுள்ள என் நண்பர் கவிஞர் சேது மாதவன் எழுதிய கவிதையை ஞாபகப்படுத்தியது உங்கள் ’நிழல்’:

அந்தக் கவிதை:

//திண்ணையிலேயே இருந்த அப்பா
வீட்டுக்குள் வந்தார் புகைப்படமாக//

G.M Balasubramaniam சொன்னது…

இருந்தாலும் போய் வருகிறேன் என்று சொல்வது நேர்மறை எண்ணம்தானே. நாமே போன பிறகு நம் எந்தப் படம் சிரித்தால் என்ன அழுதால் என்ன. LET US THINK POSITIVE, SUNTHARJI.

பா.ராஜாராம் சொன்னது…

இரண்டுமே ரொம்ப நல்லாருக்கு சுந்தர்ஜி!

' நல்லாருக்கு' என்று சொல்லிப் பார்த்தால்
மரணம் கூட நல்லாத்தான் இருக்கும் போலயே
சுந்தர்ஜி! :-)

Nagasubramanian சொன்னது…

//நிழற்படங்களில்
சிரிக்கும் யாரும்
அறிய முடிந்ததில்லை
எந்தப் படம்
தங்கள்
மறைவுச்செய்தியில்
சிரிக்கக் கூடும்
என்பதை.//
fantastic

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி மாலினி!

நீங்க யூக்கிக்க வைத்த வார்த்தையும் நாகசுப்ரமணியன் சொன்னதும் ஒரே வார்த்தை.

சரிதானா? நன்றி கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்த வெச்சதுக்கு.

அடிக்’கடி’ வாங்க.

சுந்தர்ஜி சொன்னது…

நான் சொன்னதுக்கு நெருக்கமாக இருந்தாலும் நான் சொல்ல வந்தது வேற.

எனிவே, நன்றிகள் பல கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

ஒரு கலைஞன் பல பார்வைகளில் பார்க்கிறான். எல்லாமே அவனுடைய குணாதிசயத்தை ஒத்ததாக இருக்கவேண்டிய அவசியமில்லை பாலு சார்.

தவிர நிலையாமையைப் பற்றி எழுதிய வ்ள்ளுவரையும் நெகடிவ் ஆசாமியா லிஸ்ட் பண்ணிடுவீங்க போல இருக்கே?

நான் ரொம்ப ரொம்ப பாசிடிவ்வான ஆளு சார்.நேர்ல ஒரு தடவை சீக்கிரம் சந்திப்போம்.ஓக்கே.

சுந்தர்ஜி சொன்னது…

சரியாச் சொன்னீங்க பா.ரா.

மரணம் நமக்குத் தெரியாத பல விஷயங்கள்ல ஒண்ணுதான்.

ஆனா நாமளே இருக்கமாட்டோம்ங்கறதச் சொல்ற விஷயம்.

அதையும் நேசிச்சா மரணம் கசக்காதுதான்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நாகசுப்ரமணியன் உங்கள் பாராட்டுக்கும் மாலினியின் புதிரை அவிழ்க்க உதவியதற்கும்.

ஆனந்தி.. சொன்னது…

//நிழற்படங்களில்
சிரிக்கும் யாரும்
அறிய முடிந்ததில்லை
எந்தப் படம்
தங்கள்
மறைவுச்செய்தியில்
சிரிக்கக் கூடும்
என்பதை.//

ஆமாம் சுந்தர்ஜி...இதை படிச்ச பிறகு தான் கொஞ்சம் ஆழமாய் யோசிச்சு பார்த்தேன்..எதுக்கும் ரொம்பவே அழகான ஒரு புகைப்படம் எடுத்து வச்சுக்கணும்....:)))

ரிஷபன் சொன்னது…

முதலில் அழுத்தம்.. அடுத்ததில் ஒரு காமெடி கலந்த இரங்கல்..

சுந்தர்ஜி சொன்னது…

வாங்க ஆனந்தி! முதல் வருகை இனிதாகுக.

இளையராஜா பற்றி நீங்களிட்ட பதிவில் நான் கேட்கச் சொன்ன இடாலியன் கான்செர்ட்டைக் கேட்டீர்களா?

மரணத்தை ஜஸ்ட் லைக் தேட்னு எடுத்துக்கற பக்குவத்தை ரசிக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன்.

ப்ளாக் ஹ்யூமர் எப்பவுமே சோகத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.அப்படித்தானே ரிஷபன்.

நிலாமகள் சொன்னது…

எதிர்பாரா திடீர் சாவு ஒன்றிற்கு சென்று திரும்பிய கையோடு படித்த தங்கள் கவிதைகள் தன் பரிமாணத்தை மிக அடர்த்தியாக்கி விட்டன...

நிலாமகள் சொன்னது…

மாலினியின் cute வருகையும் தங்கள் கூர்மையும் வியப்பு... ரசிப்பு.

பத்மா சொன்னது…

ம்ஹும் நான் ஒண்ணும் சொல்ல போவதில்லை

சுந்தர்ஜி சொன்னது…

நான் புரிந்து கொள்ள முயலுகிறேன் பத்மா.

vasan சொன்னது…

குஷ்வ‌த்சிங்கின் ச‌மீப‌த்திய‌ பேட்டியும் அவரின் க‌ண்க‌ளும்
நினைவில் ம‌றுப‌டியும்.

ம‌ரண‌ச் செய்தியைப் பார்த்த‌வரில் யாரேனும்
சிறிதாய் சிரித்திடாத‌ வ‌ரை........
வாழ்க்கையில் ம‌ர‌ணமில்லை சுந்த்ர்ஜி.

சிவகுமாரன் சொன்னது…

வாழ்கையை ரசிக்கத் தேர்ந்த யாரும் யாரும் மரணத்தை வெறுப்பதில்லை அது தானே வரும் வரை.

சிவகுமாரன் சொன்னது…

தெரிந்த என்று டைப் செய்ய நினைத்தேன் தேர்ந்த ஆகிவிட்டது.
அதுவும் சரிதானோ ?

மாலினி சொன்னது…

அது 6-1-14-20-19-20-9-3 ன்னு இருந்திருக்கணும். அவசரத்துல 20ஐ விட்டுட்டாலும் கரெக்டா கண்டுபிடிச்ச புத்திசாலிக் க்யூட் கவிஞனுக்கு ஒரு
20-8-1-14-11-19.

சுந்தர்ஜி சொன்னது…

நானும் படித்தேன் வாசன்.குஷ்வந்சிங்கின் வார்த்தைகள் மாறவில்லை.கவிஞர் இக்பாலின் கவிதை வரிகளில் தன்னை வெளிப்படுத்திய விதம் மனதைத் தொட்டது.

சரிதான். உடலுக்கன்றோ மரணம்.வாழ்வுக்கன்று.

சுந்தர்ஜி சொன்னது…

அதுவாய் வரும்போதும் அதை வெறுக்கும் நிலை வருமா எனத் தெரியவில்லை சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

இதுக்கெல்லாம் எதுக்கு மாலினி தேங்ஸ்?

அடிக்கடி வாங்க. ஏதாவது குறும்பு பண்ணுங்க.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...