7.5.11

பொய்யுரு


ஒரு
நிலைக்கண்ணாடியின்
முன்னே

அரைக் கோணலாய்த்
தலை சாய்த்து
வகிடெடுத்து
வாரிக்கொள்ளும்போது

பின்புற நாட்காட்டியில்
ல்ரப்ஏ என்று
மாதமிருப்பதாயும்-

அவசர அவசரமாய்
இடதுகையால் அப்பா
சாப்பிடுவதாயும்-

ஊஞ்சலில் ஆடும்
அம்மா காஃபியை
இடது கை மேலிருக்க
ஆற்றிக்குடிப்பதாயும்

மாற்றிக்காட்டும்
தோற்றப்பிழை
குறித்த இந்தக் கவிதை

தலை வாரி முடித்தபின்
சிறு சிரிப்புடன்
நிறைவு கொள்கிறது.

15 கருத்துகள்:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

கண்ணாடியின் சிறிது நேர ரசனை அழகாய் கவிதையில் . அருமை

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பொய்யுரு, கவிதையின் படமும், பருவமும், கண்ணடிப்பிரதிபலிப்பும் கூட கவிதை போலவே சிறு சிரிப்புடன் என் மனதை மயக்கி நிறைவு கொள்ள வைத்தது. பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

கவிதை பிறக்க நேரம் காலம் எதுவும் தேவையில்லை உங்களுக்கு. நிலைகண்ணாடி முன் நிற்கும்போதும், கணினியின் பிரிண்டர் வேலை செய்யாதபோதும், எப்போது வேண்டுமானாலும் கவிதை பிறக்கலாம். எங்கிருந்துதான் இந்த உத்திகள் கிடைக்கிறதோ, உங்கள் மேல் பொறாமை ஏற்படுகிறது, சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

ஆஹா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

IDA MAARU THOORRA PIZHAI!!!!!!

manichudar சொன்னது…

காட்சிப் பிழை நல்ல அழகான கவித்துவம் கொண்டது உங்கள் கவிதையில்

கலாநேசன் சொன்னது…

ரொம்ப ரொம்ப நல்லாருக்குங்க....

மிருணா சொன்னது…

இரு வேறு உலகங்களின் தோற்ற மயக்கமும், புன்னகை - ஒன்றின் வாசலில் இருந்து இன்னொன்றுக்குப் போகும் மின்னல் வெளிச்சமாகவும். fine.

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

சில சமயங்களில் தோற்றப்பிழைகளும் மகிழ்ச்சியை தருகின்றன..நல்ல கவிதை
(தள பின்புலத்தின் முகப்பு படமும் அருமை)

இரசிகை சொன்னது…

:)

nallaayirukku sundarji...

RVS சொன்னது…

!ஜி ஸ்ளாகி ஏ

A.R.ராஜகோபாலன் சொன்னது…

நிலைக்கண்ணாடியின்
நிலையை
நியாயமாய்
நிதானமாய்
நிலை
நிறுத்திய ஆளுமை
அசரடிக்கிறது

Vel Kannan சொன்னது…

அழகு ஜி

santhanakrishnan சொன்னது…

வசீகரம் சுந்தர்ஜி.

பத்மா சொன்னது…

மாயையில் சிக்கி கொள்ளும் கணம் தான் இனிமையானவை இல்லையா ? கண்ணாடி முன் இதை சோதிக்காதவர்கள் மிகவும் கம்மி ...முடிந்த பின் வரும் புன்னகை தான் கிளாஸ்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...