18.5.11

உரைகல்















தோ-ழர்/ழி-களே!

ஒரு முக்கியமான கட்டமாய் இதை நினைக்கிறேன்.

ஒரு இருபது வருட இடைவெளிக்குப்பின் கடந்த மார்ச் 2010 முதல் கைகளில் அள்ளிய நீரில் எழுதிவருகிறேன். இந்த எழுத்துக்கு நீங்கள் உடனுக்குடன் தந்து வரும் உற்சாகமான எதிர்வினைகளே என் பல படைப்புக்களுக்கும் ஆதார சக்தியென்பதை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தூங்காமல் இருக்கும்போது கேட்டாலும் ஒப்புக்கொள்வேன்.

எனக்குக் கவிதைகளின் மேல் தனித்த ஒரு காதல் துவக்கத்திலிருந்தே உண்டு. நீ யார் என்று என்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு நான் ஒரு கவிஞன் என்றே பதிலளிக்க விரும்புகிறேன்.

ஆனால் அந்த பதிலுக்குப் பொருத்தமானவனாக நான் இருக்கிறேனா? நான் கடந்த தொலைவு என்ன? என் இடம் எதுவாக இருக்கும்? அல்லது என் எழுத்தின் அடிநாதமும், பலமும் பலவீனமும் என்ன? என்றுணரவும் எனக்கு ஆசை இருக்கிறது.

என் தளத்தின் வடிவமைப்பு குறித்தும்-நிறங்களின் தேர்வு குறித்தும்-நான் எழுதியுள்ள பல்வேறு லேபில்களில் எது உங்களின் விருப்பமாக இருக்கிறது? என்றும் விரிவான உங்களின் பின்னூட்டங்களின்  மூலம் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ளவும் பட்டை தீட்டிக்கொள்ளவும் எனக்கு தாகம் இருக்கிறது.

உதவுங்கள் நான் மேலும் பயணிக்க.

25 கருத்துகள்:

ரம்மி சொன்னது…

எளிதில் புரியும்படி, எளிய சொற்களைக் கையாளவும்! சிறு சிறு பத்திகள் தேவை - வரிகளை ருசிக்க!

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

எப்பொழுதும் உடன் வருகிறோம் உங்களின் நிழலென . தொடருந்து எழுதுங்கள்

எல் கே சொன்னது…

முதலில் வாழ்த்துக்கள் . எளிய வார்த்தைகளில் இருந்தால் அனைவரும் விரும்புவர்

A.R.RAJAGOPALAN சொன்னது…

மீன்குஞ்சு நான், நீந்த கற்றுத்தா என்பது மாதிரி இருக்கிறது அண்ணா

நம் எழுத்துக்கள் மற்றவர்களின் விமர்சனகளைவிட நமக்கு மனநிறைவை தருவது மிக முக்கியம், அதை தரும் எந்த படைப்பும் படைப்பாளிக்கு பொக்கிஷம் தான் அண்ணா .
உங்களின் குழந்தை மீது பாசம் பொழிய யார் சிபாரிசு தேவைபடுகிறது உங்களுக்கு ??
நிறைவாய் இருக்கிறது , நிறைய எழுதுங்கள்

Matangi Mawley சொன்னது…

Sir-ji,

This is one of those few rare blogs that I admire so much! When I am amidst an abundant space filled with time, I go back to read some of your older posts. Sometimes I feel guilty that I am not able to comment on each and every one of your posts. Some of them- they just leave me tongue-tied! Some of your works- leave me with no choice- but silently marvel to myself about the deapth and the thought-process that cocoons your post!
As about the posts-- I am not sure I'm qualified enough to comment about the way you write. But I can say this- what you have been doing now- is the way I like it.
May I add that not only that you write poems/lyrics but your writing itself is poetical/lyrical. I'm haunted still by one of your posts- 'பாழ்'(May- 2010)! I'll look forward to you constantly excelling yourself in every post to come...

Thanks,
Matangi

PS: I like paintings better. Would like to see more paintings in place of photographs- for I just felt that some of your poetry go better with paintings than photographs. But that's just my view... - MM

ரிஷபன் சொன்னது…

சட்டென்று ஒதுங்கிப் போக முடியாத பகுதி உங்கள் பதிவுகள். அதன் ஆழம், அர்த்தச் செறிவு, உங்க்கள் எழுத்துக்களில் உங்களின் நேர்மை இவையெல்லாம் தனிச் கிறப்புக்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் புகைப்படங்கள் மீதுகூட நான் காதலாகிறேன். நகைச்சுவையும் உங்களுக்கு வெகு இயல்பாய் வருகிறது என்பது சில பதிவுகளில் புலனானது. மாதங்கி சொல்வது போல யூ ஆர் யுனீக்.. காத்திருக்கிறோம்.. உங்களை வழி நடத்தும் சக்தி நிச்சயம் உங்கள் மூலம் சிறப்பான அனுபவத்திற்கு எங்களை கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கையுடன்..

மிருணா சொன்னது…

மிக சிறப்பாக எழுதும் நீங்கள் தொடர்ந்து நீங்களாகவே - மொழி மற்றும் உள்ளடக்கம் குறித்த கவனத்தோடு எழுதுங்கள். நீங்கள் நன்றாகவும், பல்வேறு தளங்கள் குறித்தும் எளிதாக எழுதுகிறீர்கள். மற்றவர்களை ஊக்கப்படுத்துவதில் இருக்கும் openmindedness ஒரு அரிய குணம். மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுகிற உங்கள் blog இன் ஆரம்ப கவிதைகள் போல இன்னும் செழுமையாக எழுத இருக்கிற உங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தங்கள் கவிதைகளைப் படித்துப்பார்ப்பதே ஏதோ ஓரளவுக்காவது நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறதா என்று என்னை நானே பரிசோதனை செய்து கொள்ள மட்டுமே.

சிலவற்றைப் புரிந்து கொள்ள எனக்கு நெடுநேரம் ஆனதும் உண்டு.

பிறர் பின்னூட்டங்களைப் படித்துப்பார்த்து நான் சரியாகப்புரிந்துகொண்டேனா என்று சுய பரிசோதனை செய்து பார்ப்பதும் உண்டு.

இவையெல்லாம் இங்கு நான் குறிப்பிட்டுள்ளது, கவிதை விஷயத்தில் எனக்குள்ள ஞானம் மிகக்குறைவு என்பதை ஒப்புக்கொள்ள மட்டுமே.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன் vgk

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி.....என்றும் உங்கள் கவிதைகளோடுதான் !

அப்பாதுரை சொன்னது…

நன்றாக எழுதுகிறீர்கள். அவ்வப்போது படிக்க வருகிறேனே தவிர அதிகம் படிக்க வராதது என் பிழை. படித்தது பிடித்துள்ளது.

அப்பாதுரை சொன்னது…

ஓ... இதுக்கு முந்தைய வடிவில் எளிமை இருந்தது.

மோகன்ஜி சொன்னது…

இருக்கிறபடியே இரும். திவ்யமாக இருக்கிறது, அதது இருக்கிற விதத்தில். அடுத்த கவிதையை யோசியும்.

G.M Balasubramaniam சொன்னது…

வடிவமைப்பு பற்றி ஏதும் கூற விரும்பவில்லை. அது உங்கள் ரசனை மற்றும் தொழில்நுட்பங்களை கையாளுவதில் உங்கள் திறமை பொறுத்தது. கவிதை எழுதுவதை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்றுமொழியின் மீதுள்ள ஆளுமையை வெளிப்படுத்த. இரண்டு எண்ணங்களை எளிதில் கடத்தி வாசிப்பவரையும் அதில் லயிக்க வைக்க. உங்களது கவிதைகளில் சில சமயம் abstract ஆக எண்ணங்கள் வெளிப்படும்போது புரிந்து கொள்வது கடினமாய் இருக்கிறது. நீங்கள் கேட்டீர்கள் நான் மனதில் பட்டதைக் கூறினேன்.

Vel Kannan சொன்னது…

1. மெல்லிய சரடு அசைந்து கொண்டிருக்கும் உங்களின் கவிதை படித்த பிறகு....
2. பல கவிதைகளில் அதன் கருப்பொருளில் ஆழம் நோக்கி செல்ல சொல்லும்
3. கவிதைக்குள ஒரு லயம் - நல்ல இசை கேட்டும் போதும் ஏற்படும் லயம் - இருக்கும்
4. சில கவிதைகளில் ஒரு விசாரணை எழும்பும் ஒரு தத்துவம் விரகத்தியற்ற தத்துவம்)
5. என்னையெல்லாம் மதிச்சு பாராட்டியதற்கு உங்களுக்கு நன்றி சொல்லிகிட்டே இருக்கலாம்.
6. இந்த குணம் எல்லோர்க்கும்
வராது/வரல
_______________
(இனிதான்டி....... விமர்சனம் )
சில கவிதைகளில தெளிவாகவோ/ஆழமாக சொல்லவே மாட்டிங்க, மிக மேலோட்டமாக
அது இருக்கும். அந்த சமயத்தில் எனக்கு வருத்தமாக வரும். சரி ஏதோ வேலையா இருந்திர்ப்பார் போல ..
என்று நினைத்து கொள்வேன். இந்த ஒரு வருத்தம் தான் எனக்கு
மற்றபடி சுந்தர் ஜி க்கு பெரிய ஒஒஒ தான் போடணும்
(மேலே சொன்ன கருத்துகள் அனைத்தும் எனது பார்வையே - சிறுபிள்ளை தனமாகவும்/நிற குறைபாடும் இருக்கலாம் )

காமராஜ் சொன்னது…

என்னாச்சு சுந்தர்ஜீ....
எல்லாம் அழகாகவே இருக்கிறது.
எல்லா எழுத்தும் தரமான எழுத்துக்கள் தான் இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு.தொடருங்கள்.

Ramani சொன்னது…

உங்கள் படைப்புகள் அனைத்தும் தரமானவைகளாக
இருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை
ஆனாலும் ஒரு பிம்பம் குறித்தோ அல்லதுஒரு பொருள் குறித்தோ
விளக்க முற்பட்ட கவிதைகளில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை
ஒரு செய்தி ஒரு உண்ர்வு ஒரு நிகழ்வு ஒரு கருத்து இப்படி
ஏதேனும் ஒன்றுடன் உங்களிடம் நிறைந்து கிடக்கிற கவித்துவத்தை
வெளிப்படுத்துவதையே நான் அதிகம் விரும்புகிறேன்
நான் தொடர்கிற பதிவுகளில் முதன்மையானது
தங்கள் பதிவு எனச் சொல்லிக் கொள்வதில் நான்
பெருமை கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களின் பல கவிதைகளின் தாக்கம் என்னுள் நீண்ட நேரம் இருக்கும். சில கவிதைகளின் வெளிப்படையாய் தெரிவது போல தெரியும் ஆனாலும் வேறு எதாவது உட்பொருள் இருக்குமோ என்றும் தோன்றும். நல்ல கவிதைகள் எப்போதும் போலவே உங்களிடம் இருந்து வெளிப்படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது ஜி! கவிதைக்கேற்ற உங்கள் படங்களும் என்னை மிகவும் கவர்ந்தவை.

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

வாத்தியார் நீங்க! உங்களின் அணுபவமும், வாசிப்பும் உங்களை ஒரு தரத்திற்கு மேல் நிறுத்துகிறது

ஆழ்ந்த, தேர்ந்த,விரிந்த வாசிப்பு உங்களுடையது சுந்தர்ஜி... உங்களோட வெர்சடாலிட்டி ஆச்சரியமான விஷயம் எனக்கு...

உங்களின் இசை பற்றிய அறிவும், ஆழ்ந்த ரசனையும் உங்கள் எழுத்துக்களில் தெறிப்பது இயல்பாய் இருக்கும்.

உங்கள் கவிதைகளின் பாடுபொருளாய் எதுவும் இருப்பது, அதற்கு தகுந்தாற்போன்ற படங்களின் தெரிவு இதுவெல்லாம் எனக்கு உங்கள் மேல் பொறாமையே வரவைக்கிற விஷயங்கள்...

கவிதைகளில் எனக்குத் தெரிந்தது... சில இடங்களில் நீங்க அதிகம் சொல்லிவிடுவது... subtle..ஆ சொல்ல வேண்டியதை அல்லது சொல்லாமல் விடவேண்டியதை சில சமயம் எழுதும் ஆர்வத்தில் சொல்லிவிடுவீர்கள்...

தத்வார்த்தமான கவிதைகளின் செரிவு நிறைய இடங்களில் அது அதிகப்படியான வார்த்தை பிரயோகங்களால் அதன் சாரத்தை இழந்து விடுவது போல தோன்றும்... உங்கள் கணையாழியின் கவிதைகள் அழகானவை, வாசிக்க வேண்டியவை... ஆனால் அதன் நீட்சி இடைவேளையின் காரணமாகவோ என்னவோ... கொஞ்சம் நீர்த்தது மாதிரி எனக்கு படுகிறது...

தினமும் ஒன்று எழுதவேண்டும் என்ற உந்துதல் நல்ல விஷயம் தான் இருந்தாலும், உங்கள் கவிதை நீங்கள் திரும்ப எழுதிப்பார்ப்பது அவசியம் என்று படுகிறது எனக்கு.

பேரன்புடன்
ராகவன்

சிவகுமாரன் சொன்னது…

தவறாக நினைக்க வேண்டாம் சுந்தர் ஜி. என்னால் அடிக்கடி வலைப்பக்கம் வர முடிவதில்லை. வேலைப்பளு அதிகம். இடைவெளி விட்டு வந்து பார்த்தால் எழுதித் தள்ளி விடுகிறீர்கள். எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் இட முடியாவிட்டாலும் ஒன்று விடாமல் படித்து விடுகிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

உங்கள் கவிதைகளுக்கு பின்னூட்டம் இடவே எனக்குப் பயமாக இருக்கும். நீங்கள் என்னவென்றால் ஆலோசனை கேட்கிறீர்கள். யாராவது உங்களை விட ஜீனியஸ் இருந்தால் போய்க் கேளுங்கள். நான் கை தட்ட ரெடி.

சுந்தர்ஜி சொன்னது…

ஹாய்! வணக்கம் எல்லாருக்கும். நன்றிகளும்.

வந்த பின்னூட்டங்களில் இருந்து எனக்குத் தெரிந்து இப்படி வகைப்படுத்த நினைக்கிறேன்.

1. இன்னமும் எளிமையாக எழுத வேண்டும்.

2. இன்னொரு முறை எழுதிப்பார்க்கப்படவேண்டும்.

3. ஒருவருக்கு இன்னும் கொஞ்சம் ஆழமாய் எழுதப்பட வேண்டியது மற்றொருவருக்கு சொல்லப்படாத வெற்றிடங்களை விரும்ப வைக்கிறது.

4. பலருக்கு இதுவே சரியெனத் தோன்றுகிறது.

இவற்றிலிருந்து நான் நிறைய சமிக்ஞைகளைப் பெற்றுக்கொண்டேன்.

எளிமையாக எல்லோரும் உபயோகிக்கும் மொழியில் சிலவற்றைச் சொல்லியும் சிலவற்றைச் சொல்லாமலும் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்த்தும் எழுதவேண்டும் என்பதை ஒட்டு மொத்தக் கருத்தாக எடுத்துக்கொள்கிறேன்.

ஆனாலும் ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

வாசிப்பின் வீச்சு இணையத்தின் பரப்பைத் தாண்டியும் புத்தகங்களில் நீள்கிறது.வெறும் இணையத்தை மட்டும் மேய்தல் நம் மொழிக்கு பலம் சேர்க்க வாய்ப்பில்லை.இந்த நிமிடம் வரை என் மொழியை மிகவும் எளிமையானதாகவும் குழப்பமின்றியுமே கையாள்கிறேன். இதில் கொஞ்சமும் எனக்குக் குழப்பமில்லை.

நன்றிகள் பல
-ரம்மி.
-பனித்துளி சங்கர்.
-எல்.கே.
-ராஜூ.
-மாதங்கி.
-ரிஷபன்.
-மிருணா.
-கோபு சார்.
-ஹேமா.
-அப்பாதுரை.
-மோஹன்ஜி.
-பாலு சார்.
-வேல்கண்ணன்.
-காமராஜ்.
-ரமணி.
-வெங்கட்.
-ராகவன்.
-சிவகுமாரன்.

ஓவியங்கள் கிடைக்காதபோதுதான் அந்த இடத்தை நிழற்படங்கள் எடுத்துக் கொள்கின்றன மாதங்கி.

vasan சொன்னது…

எஸ்.ரா ம‌லையை விவ‌ரிக்கும் போது, அது ஒவ்வொருவ‌ருக்கும், ஒவ்வொரு பொழுதும் வேறு வேறாய்த் தோன்றும். அத‌ன் நிற‌ம் இருளிலும், அதிகாலையிலும், உச்சி வெயிலிலும், சூரிய‌னின் ஒவ்வொரு ஏற்ற‌ இறக்க‌த்திலும் அது விதவித‌மாய் மாறும். அத‌ன் மீதான ம‌ர‌ங்க‌ளும், செடி கொடிக‌ளும், வில‌ங்குக‌ளும், ம‌ற்ற‌ உயிர‌ன‌ங்க‌ளும், நீரூற்றும், அருவியும் அதனுட‌ன் பிண‌ந்தும் த‌னித்தும் அலையும் என்ற்ய் வ‌ருணித்துக் கொண்டேயிருப்பார். ஜெமோவின் காடுக‌ளில் அலைந்து திரிவ‌தும் அது மாதிரியான ஒரு அனுமானிக்க‌ முடியாத‌ அனுப‌வ‌மாய் இருக்கும்.

அது போல‌வே உங்க‌ளின் ப‌டைப்புக்க‌ள் (க‌விதை, எக‌தாள‌ம், எள்ள‌ல்,எழுச்சி, ஏக்க‌ம், க‌ட்டுரை, சுய‌த‌ரிச‌னம், மொழி பெய‌ர்ப்பு, இள‌மை, வாழ்க்கை, விய‌ப்பு, விழிம்பு)எனக்கு ப‌ல ப‌ரிமாண‌ங்க‌ளில் மாம‌லையாயும், பெருங்காடாயும்.

நிலாமகள் சொன்னது…

-ரம்மி,
-பனித்துளி சங்கர்,
-எல்.கே,
-ராஜூ,
-மாதங்கி,
-ரிஷபன்,
-மிருணா,
-கோபு சார்,
-ஹேமா,
-அப்பாதுரை,
-மோஹன்ஜி,
-பாலு சார்,
-வேல்கண்ணன்,
-காமராஜ்,
-ரமணி,
-வெங்கட்,
-ராகவன்,
-சிவகுமாரன்,
-வாசன்....
ஆகியோர் துல்லியமான கருத்துக் கணிப்பு செய்திருப்பதால் (அதற்கான தங்கள் மறுமொழியும் பூரணமாய் இருப்பதால்) விடுபட்ட ஒன்றை மட்டும் இச்சிறு அணில் சொல்ல விழைகிறது...
வலையேற்றும் ஆர்வம் மிகுந்துள்ள தாங்கள், படைப்புகளை தாளில் அச்சேற்றி புத்தகமாக்குவதில் ஏன் அக்கறைப்படுவதில்லை...? வலைவாசல் வராதவர்களுக்கும் சென்றடைய ஒரு வழியாய் இருக்குமல்லவா? ஆலோசிக்கவும்.
மற்றபடி வலைப்பூ நிர்வகிப்பிலோ செறிவான பதிவுகளிலோ முன்னணிதான் எப்போதும் உங்களுக்கு. 'செய்நேர்த்தி'யின் மறுபெயர் சுந்தர்ஜி!

Harani சொன்னது…

அன்பு சுந்தர்ஜி...

என்னுடைய கருத்தாகவே இதனை வைக்கிறேன்.

நீங்கள் எழுதிக்கொண்டே யிருங்கள். காலம் தீர்மாணித்துவிடும். சமயங்களில் உரைகல்லால் சில போதைகள் சேர்ந்துவிட்டால் அப்புறம் இன்னும் தெளிவாக செல்லுகிற பாதையில் இருள் கோர்த்துவிடும்.

நம்முடைய படைப்புக்களில் எப்போதும் மனிதநேயமும் மனிதனை வாசிக்கும் பொறுப்புணர்ச்சியும் சமூகத்தின் வடிவமைப்பிலான கவனமும் இருந்தால் போதும். அது ஏராளமாகவும் கவனமாகவும் உங்களது படைப்புக்களில் கையாளப்படுகிறது.

வேடிக்கை மனிதரல்ல நாம். வீழ்ந்துவிடப்போவதும் இல்லை. ஆனாலும் கவிதை, சிறுகதைகளைத் தர்ண்டிய ஏதேனும் ஒரு புதுவடிவத்தை பிளாக்கர்கள் அனைவரும் சிந்தனை கொண்டு பார்க்கலாம்.

எதுவாயினும் தனித்துவமும் எளிமையும் புரிதலும் மிகமிக அவசியம்.

நீங்கள் வெரைட்டி தருவதில் அத்தனையும் வெகு தரமாக உள்ளன. இருப்பினும் அதன் தேவை என்பது குறித்து நான் சிந்தனை செய்கிறேன் வெகுவாக. சில சமயங்களில் உங்களின் இடைவெளியிலான படைப்புக்களில் ஒத்தப் பொருண்மை வெவ்வேறு வடிவங்களைப் பெற்றுவிடுகிறது. இது தரமான எல்லாப் படைப்பாளிக்ளுக்கும் உள்ள பிரச்சினைதான். அல்லது அதன் முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லையோ எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.

பிளாக்கர்கள் ஏதேனும் ஒரு ஒட்டுமொத்த நிலையில் சாதிக்கவேண்டும். இதனைதான் மனது ஆசைப்படுகிறது. அது கணிப்பொறியைத் தாண்டி வெளியுலகிற்கு சென்று இன்னும் கவனத்தைப் பெறவேண்டும். இது அவசியம் என நினைக்கிறேன்.

என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். இடைவெளிகள் அவசியம் ஒரு பதிவிற்கும் இன்னொரு பதிவிற்கும் ஆனால் அது மிக அதிக நீட்சியைக் கொடுத்துவிடக்கூடாது.

எளிய பதம், எளிய சந்தம், மக்கள் விரும்பும் மெட்டு இவைகளிலே எவனொருவன் புதிய காவியம் ஒன்றைப் படைத்துத் தருகின்றானோ அவன் தமிழுக்கு உயிர் கொடுத்தவன் ஆகிறான் என்று பாஞ்சாலி சபத முன்னுரையில் பாரதி எழுதுகிறான்.

இதனை எல்லாத் தளங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

இன்னொன்றையும் மறுக்கமுடியாது. தொடர்ந்து எழுதுவதின் மூலமே புதிய வடிவத்தைக் கண்டடைய முடியும்.

உங்கள் படைப்புக்களில் எனக்கு திருப்தி இருக்கிறது. மனம் நிறைவாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் ஏதோ ஒரு வலுவான விளைவையும் நான் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

இது முழுக்க என்னுடைய நண்பனுக்கு (உங்களுக்கு) நான் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள். இதற்கு நானே பொறுப்பு.

எழுதுங்கள் சுந்தர்ஜி.

இரசிகை சொன்னது…

neengal neengalaahave iruppathil.yenakku sammatham sundarji.

sollungal thirunthik kolkiren yenum yelimai yeppothum vellum.

vaazhthukal....sundarji:)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...