2.10.12

ஆந்தை அலறும் பாலத்தில் ஒரு நிகழ்வு



1962ல் வெளியான ஆந்தை அலறும் பாலத்தில் ஓர் நிகழ்வு ( An Occurence at Owl Creek Bridge) ஃப்ரென்ச் இயக்குனர் ராபெர்ட் என்ரிகோ (Robert Enrico)வால் இயக்கப்பட்டு, கான் சர்வதேசத் திரைப்பட விழா விருதையும், அகாதமி விருதையும் வென்றது.

ஒற்றைக் கழுகின் அலறல் - அந்த ராணுவ வீரர்களின் எந்திர கதியிலான உத்தரவுகள் எதிரொலிக்கும் பின்னணியில் 30 நிமிடங்களும் ஒரு யுகமாய் நீளும் அந்தக் கைதியின் இறுதி நொடிகள். 

பாலத்துக்குக் குண்டு வைத்த புரட்சியாளர்களில் ஒருவன் என்று குற்றம் சுமத்தப்பட்டவனின் உயிரின் பரிதவிப்பு கண்களையும் , மனதையும் கலங்கச் செய்கிறது.

தூக்குக் கயிறு அறுந்து தப்பிச் செல்லும் நிமிடங்களில் அந்தக் கைதியாக நம் ஒவ்வொருவரையும் மாறச் செய்து பதைபதைக்க வைக்கிறது ஹோஜே ஷாத்தேவின் ( Roger Jacquet ) நடிப்பும், இயக்குனரின் கலை நேர்த்தியும்.

கண்ணுக்குக் கண் என்னும் செய்கை இந்த உலகத்தையே குருடாக்கி விடும் என்ற மஹாத்மா காந்தியின் குரலும், மரண தண்டனைக்கு எதிராக எழும் குரல்கள் வெளிப்படுத்தும் ஜீவகாருண்யமும், நேயமும் இந்தக் குறும்படம் வெளியாகி ஐம்பது ஆண்டுகளாகியும் வெறுமனே காற்றில் கரைந்தபடி இருக்கிறது. 

இன்றைய தினத்தை அர்த்தப்படுத்தும் இக்குறும்படம், நிச்சயமாக நாளைய தினத்தில்  குற்றங்களுக்கான தண்டனையின் தடத்தை மாற்றி அமைக்கும்.

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக்க நன்றி ஐயா... (மின்சாரம் போனதால் பாதி தான் பார்க்க முடிந்தது... பிறகு பார்க்கிறேன்...)

kashyapan சொன்னது…

1980மாண்டுபுனே திரைப்படக் கல்லுரி நடத்திய திரைப்பட ரசனை வகுப்பில் பார்த்துள்ளேன்.கணத்தில் மனதில் ஓடும் நினவோடை உக்தியை காட்சிப்படுத்தும் அற்புதமான படம். பக்கம் பக்கமாக பெசவும் எழுதவும் வேண்டிய படம் இது.எல்லாராலும் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று---காஸ்யபன்.

அப்பாதுரை சொன்னது…

what a movie!
ஏழாவது நிமிடம் பதட்டம் என்றால் இருபத்தாறாவது - அதிர்ச்சி.
மரணத்தை இப்படியும் சொல்ல முடியுமா என்று சிந்திக்க வைத்தக் காட்சியமைப்பு.
கொஞ்சம் கூடக் கோழைத்தனமில்லாத முடிவை, பார்க்கும் ரசிகர்களின் கோழையாக்கிக் காண்பித்திருக்கும் இயக்கம். art of cinema வகுப்பில் வைக்கப்பட வேண்டிய படம்.
நன்றி சுந்தர்ஜி.
ப்ரெஞ்சு/பிரிடிஷ் எம்பெசி நூலகங்களில் இது போல் நிறைய படங்கள் இருந்தன. பழைய நினைவுகள்...!

vasan சொன்னது…

மாத‌வ‌ராஜ் ப‌திவில்,அறிமுக‌ம் செய்து சில ஆண்டுக‌ளுக்கு முன்பு பார்த்த குறு(குறு)ம்ப‌ட‌ம்.
அவ‌ன‌து க‌ட்ட‌விழ‌ந்து, நீந்தி, பாம்பைத் தாண்டி, ம‌ண்ணில் குண்டுக‌ளுக்குத் தப்பி, விழுந்து, மூச்சிறைக்க, மூச்சுவாங்க‌ ஓடி...ஓடி ம‌ணைவியைத்.. தொட,,, டுமீல். இற‌ந்து தொங்கும் அப்..பாவியின்... (உங்க‌ள் ப‌திவைப் படிக்காம‌ல், பார்க்காம‌ல், நினைவிலிருந்து இந்தப் பின்னோட்ட‌ம்.

மீனாக்ஷி சொன்னது…

Fantastic movie! மனதை உறையவைத்து விட்டது. கைதி தண்ணீருக்குள் மூழ்கும்போது நான் மூச்சு திணறுவது போல் உணர்ந்தேன். உயிர் பிழைத்தான் என்று எண்ணியபோது முடிவு மனதை உறைய வைத்து விட்டது. அப்பா! எப்பேற்பட்ட படம். சான்ஸே இல்லை! பகிர்ந்து கொண்டதற்கு மிகுந்த நன்றி சுந்தர்ஜி.


தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...