6.10.10

உடைமுள்


நினைக்க மறந்தேன்
துவக்கத்தின் இருளில்.
மறக்க நினைத்தேன்
இடைவெளியின் சுடரில்.
நினைத்தது மறந்தும்
மறந்தது நினைத்தும்
சுற்றித் திரிகிறேன்
அந்தியின் நிழலில்.
நிரந்தரமாய்
உயிர் குடிக்கிறது
நினைவும் மறதியும்
வேர்விட்ட வாழ்வின் உடைமுள்.

7 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

உடைமுள்ளை மீறத்தான் கலை.எழுத்து கொடுக்கும் சமாதானம்...என யோசிக்க வைக்கிறது வரிகள்

Vel Kannan சொன்னது…

துவக்கத்தின் இருள்
இடைவெளியின் சுடர்
அந்தியின் நிழல் இவைகளும்
வாழ்வின் உடைமுள்.
சரி தானே ஜி.
உங்களிடம் பெற்ற தெளிவு உங்களுக்கே

பத்மா சொன்னது…

உடை முள் ...இதை கொஞ்சம் விளக்கனும் எனக்கு சுந்தர்ஜி

பத்மா சொன்னது…

துவக்கத்தில் இருளாகவும் ,பின் இடையில் சுடர்விட்டும்,அந்தியில் நிழலாகவும் இருப்பது வாழ்வா ,ஞாபகமா. ?

ரிஷபன் சொன்னது…

நினைவும் மறதியும் பிரிக்க இயலாதவை. அதன் கீறல்களால் வாழ்க்கை ஓலையின் எழுத்து

ஹேமா சொன்னது…

நினைவுகள் வேதனையானால் முள்தான் !

கமலேஷ் சொன்னது…

வாசகனை வேலை வாங்கும் அருமையானதொரு படைப்பு சுந்தரண்ணா

வேறு வேறு தளங்களில் வேறு வேறு படு பொருளில் வாசிக்கும் கண்ணுக்கு தகுந்தது போல் தன்னை பொருத்திக் கொள்கிறது.
கலைடாஸ்கோப்பில் இட்ட வளையல் துண்டுகளென, வரிகளை கலைக்க கலைக்க வேறு வேறு வர்ணங்கள்.

எனக்கு இப்படி பார்க்க பிடித்திருக்கிறது.

/// துவக்கத்தின் இருள்
இடைவேளையின் சுடர்.
அந்தின் நிழல். ///

- இந்த மூன்றையும் காலம் அல்லது வயது என்பதாய் பார்த்தேன்.

/// நினைத்தது மறந்தும்
மறந்தது நினைத்தும்
சுற்றித் திரிகிறேன் ///

- தொலைத்தாலும், தவித்தாலும் ஒன்றாய் வந்தேரியதாய் உணர்கிறேன் என்றால் அவை
உயிர் குடிக்கும்தான்.

மேலும் முள் என்பது இங்கு முள் அல்ல தானே.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...