8.10.10

சுவடுகளின் திசை



இப்போது
புரிந்துகொள்ள எளிதாயிருக்கிறது
பேச்சைக்காட்டிலும்
நிசப்தம்.

எழுதப்பட்ட மொழியின்
இடுக்குகளில் இருந்து
எழுத இருப்பவை.

பதிந்த சுவடுகளின்
நிழலிலிருந்து
யாத்திரையின் திசை.

தோய்க்கப்படும் தூரிகையின்
வண்ணங்களிலிருந்து
வரைய இருக்கிற
சித்திரத்தின் உயிர்.

கடவுளின் மூடியிருக்கும் கைகளில்
பொதிந்திருக்கும் ரகசியமாய்
உதிப்பிற்கும் உதிர்விற்கும்
நடுவிலான நிலை.

4 கருத்துகள்:

santhanakrishnan சொன்னது…

பேச்சிலிருந்து விடுவித்துக்
கொண்டு நிசப்தத்தை
புரிந்து கொள்ளும் வித்தை
தங்களுக்கு வசப்பட்டிருக்கிறது.
நம்மை எங்கோ இட்டுச் செல்லும்
கவிதை.

சைக்கிள் சொன்னது…

//மூடியிருக்கும் கைகளில்
பொதிந்திருக்கும்
ரகசியம் போல்
உதிப்பிற்கும் உதிர்விற்கும்
நடுவிலான நிலை//
நம் வாழ்க்கை...

ஹேமா சொன்னது…

மௌனங்கள் நிறையவே விஷயங்கள் சொல்வதுபோல !

vasan சொன்னது…

முதலும், முடிவுமே க‌வனிக்க‌ப்ப‌டுகிற‌ அவ‌ச‌ர‌ அவணியில்,
இடைதான் எல்லாம், முதலும் முடிவும்(அத‌ன்)அடைப்புக்குறியின்
இருப‌க்க‌ங்க‌ள் மட்டுமே!
என் அவ‌தானிக்கும் அனுப‌வ‌ வார்த்தைக‌ள் இது, சுந்தர்ஜி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...