23.10.11

மற்றொரு முன்னறிவிப்பு


நாளை அக்டோபர்24ம் தேதி திங்கள் கிழமை இரவு 09.30 மணிக்கு என் அபிமான தொலைக்காட்சிகளில் முதன்மையான பொதிகை தொலைக்காட்சியில்”கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சியில் இசைக்கவி.திரு.ரமணனுடன் ஆங்கிலப்பேராசிரியை திருமதி.சித்ராவும் நானும் பங்கு பெற்ற ஒரு அரட்டை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

9.30 மணிக்கெல்லாம் தொலைக்காட்சியை அணைத்துவிடுவதற்கு நாளைக்கு இன்னொரு காரணமும் கிடைத்திருக்கிறது இதைப் படிக்க வாய்ப்பவர்களுக்கு.

16 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முதன்மையான பொதிகை தொலைக்காட்சியில்”கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சியில் இசைக்கவி.திரு.ரமணனுடனும் ஆங்கிலப்பேராசிரியை திருமதி.சித்ரா வெங்கியுடனும் நானும் பங்கு பெற்ற ஒரு அரட்டை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது./

அருமையான அறிவிப்புக்கு நன்றி. பார்க்கிறோம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அட...சூப்பர்.. நிச்சயம் பார்ப்பேன்..எனக்கு பிடித்த நிகழ்ச்சி அது!
இப்போது எனக்கு பிடித்த நபருடன்!!

வாழ்த்துக்கள்,

Matangi Mawley சொன்னது…

:) ... தோ! Alarm வெச்சாச்சு....

ரிஷபன் சொன்னது…

ஹா.. ஹா..
பொதிகை பார்த்தே ரொம்ப நாளாச்சு.. உங்களால் மீண்டும்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாவ்.. கண்டிப்பாக இரவு 09.25க்கே பொதிகையில் இன்புற வந்துவிடுகிறேன்...

நிலாமகள் சொன்னது…

ச‌ந்தோஷ‌மும் வ‌ருத்த‌மும்!

த‌ங்க‌ளுக்கான‌ வாய்ப்புக்கு ச‌ந்தோஷ‌ம்; அதைக் காண‌ வாய்ப்ப‌ற்ற‌மையால் வ‌ருத்த‌ம்!
வாழ்த்துக‌ள் ஜி!

நிலாமகள் சொன்னது…

காணொளியாக‌ உங்க‌ள் அடுத்த‌ ப‌திவில் பார்த்துவிட‌ முடியாதா என்ன‌...?!

Matangi Mawley சொன்னது…

ரொம்ப அழகான நிகழ்ச்சி!

ஆடம்பரமில்லாத ஆழம்.

"Addaa" ன்னு ஒரு concept Bengal ல உண்டு. Formal ஆ நடக்கற இடங்கள்-ல பொதுவான, அறிவுக்கு பயன்படக்கூடிய விஷயங்கள், literature, இசை, கவிதைகள்-னு பல விஷயங்கள பத்தி மணிக்கணக்குல பேசுவாங்க- ஒத்த மனம் கொண்ட நண்பர்கள் ஒன்று கூடி... (களி மண் cup ல ஒரு tea - அது தீர்ந்த அப்புறம்- அதே cup ash tray ...) அத போல ஒரு அழகான சங்கம்!
நிகழ்ச்சி ல ரொம்பவே பிடித்த விஷயம் ஒண்ணு--- 'இது' ன்னு எதுவும் இல்லாதது! conversation கு ஒரு spark தான் வேணும்... மீதி- அந்த spark ஓட ஒளியே சங்கத்த வழி நடத்தி கொண்டு போகும்-ங்கற மாதிரி-- ஒரு அழகான 'flow'... progressive flow ... :)

"It 's better to travel than to arrive" ங்கற R .L . Stevenson ஓட வாக்யத்த(அப்பா-கு ரொம்ப பிடிச்ச quote ) தான் நினைவு படுத்தித்து!

அந்த "progressive flow" வையே ஒத்து...

"Thamaso maa Jyotir Gamaya"

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Harani சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி...

நேற்று இரவு பொதிகை தொலைக்காட்சி பார்த்தேன். உங்களின் நிமிர்ந்த உட்காரல் கம்பீரமாக இருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக இசைக்கவியின் ரமணனின் பாடல் மனசை நெகிழச் செய்துவிட்டது. நிகழ்ச்சி முழுக்க அருமையாக அமைந்திருந்தது. இருப்பினும் சிலவற்றைக் கூற ஆசைப்படுகிறேன். நிகழ்ச்சியின் முதன்மையாக ரமணன் மனசை அப்படியே ஈர்த்துக்கொண்டார். உங்களின் கவிதை ஏற்கெனவே படித்தது என்றாலும் உங்களின் நிதானமாக குரலில் கேட்க பரவசமாக இருந்தது. உங்களோடு பழகியவர்களுக்கு உங்களின் இயல்பும் நடவடிக்கையும் தெரியும். ஆனால் தொலைக்காட்சியில் அளவுக்கதிகமான நிதானமாக உங்கள் இயக்கம் இருந்தது சற்று செயற்கையாக இருப்பதாக எனக்குப் பட்டது.ஒருவேளை தொலைக்காட்சிக்காக அப்படி செய்தீர்களா? ரமணன் இயல்பாக இருந்தார். ஆங்கிலப் பேராசிரியை சித்ராவும் இயல்பாக இருந்தார். உங்கள் பேச்சில் ரொம்பவும் இடைவெளி இருப்பதாகப் பட்டது. சித்ரா பேசும்போது ரயில் ஓடுவதுபோல இருந்தது. கேஷ்வலாக இருந்தது. ரமணன் எல்லாவற்றையும் வெகு நேர்த்தியாக தொடர்புடுத்தியதோடு அவர் பேசிய செய்திகள் முற்றிலும் பல்வகைத் தளங்களில் இருந்தது. உங்கள் பேச்சுதான் குறைந்துவிட்டது. நிறைய செய்திகள் இருந்தும் ஏன் இரு கவிதைகள் கொஞ்சம் பேச்சு என நிறுத்திக்கொண்டீர்க்ள சுந்தர்ஜி. ஜெயகாந்தன் சொன்ன செய்திகள் ரமணனின் வித்தியாசமான பாடல்கள் (இதுவரை கேட்காத பாடல்கள்) மனசெல்லாம் சாமிய நிரப்பு மத்தது அவன் பொறுப்பு எத்தனை பெரிய விஷயம் எவ்வளவு எளிமையாக..பாரதி சொன்னது உயர்ந்த கவிதையின் சூட்சுமமே எளிமைதான்போலும்..அவர் 17 வயதில் பெற்ற ஞானம் இது நைஞ்ச துணி..இங்க தச்சா அங்க கிழியும் அங்க தச்சா இன்னொரு இடத்தில் கிழியும். இறப்பது சிரமமில்லை. வாழ்வதுதான் சிரம்ம. அனுபவித்த நிகழ்ச்சி சுந்தர்ஜி. இன்னும் பல நிகழ்ச்சிகள் நீங்கள் செய்யவேண்டும். அன்பான வேண்டுகோள் என்னவென்றால் இந்த வாரம் யானை பற்றிய கவிதை படித்தேன். மிகமிகமிக எளிமையான சொற்களில் ஞானத்தின் ஆழத்தைக் காட்டியுள்ளீர்கள். அதுபோன்ற கவிதைகளைத்தான் நான் தனிப்பட்ட முறையில் என்னுடைய விருப்பமாகக் கேட்கிறேன். வாழத்துக்கள் சுந்தர்ஜி.

இரசிகை சொன்னது…

paarkkiren.
santhoshamum vaazhthukalum.

மிருணா சொன்னது…

மின்வெட்டால் உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்க இயலாமல் போனது. என்றாலும் வாழ்த்துக்கள்.

ரெவெரி சொன்னது…

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..

Ramani சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam சொன்னது…

பொதிகையில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். வலையில் பார்த்த ஃபோடோவை விட வசீகரமாகத் தெரிந்தீர்கள். உங்கள் கவிதை ஏற்கனவே வலையில் படித்து கருத்தும் கூறிடிருந்ததாக நினைவு, ரமணனின் சில நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். நிகழ்ச்சி நடக்கும்போது உங்களைப் பற்றி என் மனைவி , மற்றும் குடும்பத்தாருடன் பல செய்திகளை பகிர்ந்து கொண்டேன். நிகழ்ச்சி எடிட் செய்யப் பட்டதா,?அது உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுமா.?மேலும் மேலும் புகழும் கீர்த்தியும் அடைய இறைவனை வேண்டுகிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

சே.
தவறவிட்டு விட்டேனே .
என் தாமதப் புத்தியை எதால் அடிப்பது?

அப்பாதுரை சொன்னது…

:)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...