3.10.11

ராகம் தானம் பல்லவி
இசையை ரசிக்கத் தெரியவில்லை. உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. சங்கீதத்தைப் பற்றி நீங்கள் எழுதுவதும் பேசுவதும் மலைப்பாக இருக்கிறது.

மேலே கண்ட வார்த்தைகளைத் தனக்கு சங்கீதம் தெரியாது என்று சொல்லிக் கொள்பவர்களும் சங்கீதம் கேட்க ஆசை.ஆனால் எதுவும் தெரியாமல் கேட்க பயமாயிருக்கிறது என்று நினைப்பவர்களும் உதிர்க்கும் வார்த்தைகள்.

அந்த இரண்டு பத்திகளையும் மறந்துவிடுங்கள். ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு பிறந்ததில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டதாய் நினைக்கும்-தேர்ச்சி பெற்றதாய் நினைக்கும் விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள்.

அது சமையலோ கவிதையோ மொழியோ பேச்சோ எதுவானாலும் இருக்கட்டும். அதன் துவக்க நாட்களில் இருந்து இன்று வரை நிகழ்ந்த பயணத்தின் பாதையை அசை போட்டுப்பாருங்கள்.

இன்றும் கற்றுக் கொள்ளவும் ரசிக்கவும் கற்றவரையில் உங்கள் தேர்ச்சியை வெளிக்காட்டவும் தயக்கம் இருந்ததில்லை. பலரிடம் பகிர்ந்து கொள்ளவும் பயமில்லை. அடிப்படை என்னவென்றால் நாம் கற்றுத் தேர்ந்ததாய் நினைக்கும் எல்லாமே இன்னும் கற்கத் தேவையானதாகவும் முடிவுறாத பயணத்துக்கு இட்டுச் செல்வதாயும் இருப்பது கண்ணுக்குத் தெரியும்.

இசையும் அப்படிப்பட்டதாய்த்தான் இருக்கமுடியும். அதன் அடிப்படை இலக்கணங்கள் தெரிந்திருக்கத் தேவையில்லை.ரசிக்கப் பொறுமையும் திறந்த மனதும் இருந்தாலே போதும். இன்னும் சொல்லப் போனால் இலக்கணம் எந்த ஒரு கல்விக்குமே அடிப்படையானதாக இருக்கமுடியாது.அதன் மேல் நாம் கொள்ளும் ஈடுபாடுதான் அதை நமக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. அதன் பின் நம்மை அறியாமலே அந்தந்தக் கல்விக்கு ஏற்றது போல இலக்கணங்கள் தானாய் ஒரு வேலி அமைக்கின்றன.

இசையைப் பொறுத்தவரை அது கர்நாடக சங்கீதமோ-ஹிந்துஸ்தானி இசையோ-மேற்கத்திய சங்கீதமோ அதன் ரசனை அது என்ன ராகம் என்பதிலிருந்தோஅல்லது அதன் கட்டமைப்புக் குறித்த இலக்கணங்களிலிருந்தோ துவக்கம் கொள்வதில்லை.

மிகச் சிறிய வயதிலிருந்து இசையை ரசிக்கத் துவங்கும் பலரின் வாழ்க்கை எந்தத் தருணத்திலிருந்தும் இனிமையானதாகவே இருந்து வந்திருக்கிறது.அவர்களும் வாழ்வின் துயர்களில் சிக்காமல் தப்பியதில்லை. ஆனாலும் அவர்கள் அத் துயரிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் உபாயங்களை இசையுடன் சேர்த்து கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

கேட்கக் கேட்க அந்த இசையே உங்களுக்குச் சாயல்களைக் கற்றுக் கொடுத்து விடும். ஒரே மாதிரியான ராகத்தின் சாயல்கள் சினிமாப் பாடல்களிலிருந்து சாஸ்த்ரீய சங்கீதத்தின் மாளிகைக்கு உங்களைக் கூட்டிப் போய்விடும்.அதற்கு மொழி ஒரு கூடுதலான சுவையே தவிர நல்ல இசைக்கு மொழியே தேவையில்லை என்பதும் என் கட்சி.

எந்த ஒரு அடிப்படை இலக்கணமும் தெரியாத- எந்த ஒரு பிரபல இசை அமைப்பாளரின் தொடர்பும் இல்லாத -ஒரு இசை ரசிகரை நான் வெகு நாட்களாக அறிவேன்.

1988லேயே ஹரிஹரனின் குரலைப் பலருக்கு அவரின் கஸல்கள் மூலம் அறிமுகப் படுத்தி இவர் பெரிய ஆளாக வருவார் என்று சத்தியம் செய்தவர்.

சஞ்சீவ் அபயங்கர்-ரஷீத் கான் போன்ற ஹிந்துஸ்தானி இசை மேதைகளையும் முன்கூட்டியே கணித்தவர்.

தன் இருபது வயதுகளுக்குள் ( அப்போது இணையதளம் எதுவுமற்ற பொட்டல்வெளி. எல்.பி.யும் ஒலிநாடாக்களும் டூ.இன்.ஒன். களுமே கதி.)  ஜாக்கி ஷெராஃபும் மீனாக்ஷி சேஷாத்ரியும் அறிமுகமான ஹீரோ என்கிற சினிமாவில் ரேஷ்மா பாடிய லம்பி ஜுதாயி என்கிற சூஃபி வடிவ கஸல் மூலம் நஸ்ரத் பஃடே அலிகாஃனின் பல சூஃபி இசைப் பாடல்களையும் தேடி பலருக்கும் அறிமுகப்படுத்தியவர்.

ஆ ஊ என்றால் ஒரு பக்கம் நௌஷாத்தையும் மன்னா தேயையும் சலீல் சௌத்ரியையும் பற்றி எம்.எஸ்.வி. ,ஜி.ராமநாதன் மற்றும் இளையராஜா பற்றியும் மறு பக்கம் பண்டிட் ரவிஷங்கர்-பீம்சென் ஜோஷி-கிஷோரி அமோன்கர் பற்றியும் பேச ஆரம்பித்துவிடுவார்.

மொகலே ஆஸம் பாடல்கள் கேட்டால் ஜன கண மன அளவுக்கு மரியாதை செலுத்த நின்று விடுவார்.

போதும் அவர் அறிமுகம். விஷயத்துக்கு வரவும் என்கிற உங்கள் கோஷம் காதுகளைத் தொடுவதால் இத்தோடு . வைக்கிறேன்.

அவர் இனி வாரம் ஒரு பாடலை அறிமுகப் படுத்தி அதே சாயலில் உள்ள தமிழ்ப் பாடல் எது என்று கேட்கும் கேள்விக்கு பின்னூட்டத்தில் பதில் கூறினால் அவரை விரைவில் அறிமுகப்படுத்துவேன்.

இந்த வாரம் இது. ஸாஸோங் கி மாலா பே- இந்தக் கவ்வாலிப் பாடல் சமீபத்தில் வந்த பிரபலமான தமிழ் சினிமாப் பாடல்-

16 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

இசை தெரியவில்லையே எனும் என்னுடைய தாழ்வு மனப்பான்மைக்கு இந்த் பதிவு பரிகாரம் தேடவைக்கிறது... நூல் பிடித்து உங்கள் பதிவுகளை படித்து வந்தால் அடிப்படையை சீக்கிரம் நெருங்கலாம் எனும் நம்பிக்கை வந்துள்ளது....

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
நன்றி.

Ramani சொன்னது…

பதமனாபன் அவர்களின் கருத்தே என் கருத்தும்
என்னால் தமிழ் பாடலை அடையாளம் காண முடியவில்லை
ஏதோ ஒரு திட்டவட்டமான நோக்கத்தோடு இந்தப்
பதிவைக் துவங்கியிிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
தொடர்ந்தால் மகிழ்வோம்.பயனும்பெறுவோம்
என நினைக்கிறேன்

G.M Balasubramaniam சொன்னது…

இசையை ரசிக்கத் தெரியும். ஆனால் பகுத்துப் பிரித்து ஆராயத் தெரியாது. தெரிந்த மொழியில் புரிந்து கொள்ளும் பாடலாயிருந்தால் இன்னும் நலம். சுருங்கச் சொல்வதானால் மோனோ இசைக்கும் ஸ்டீரியோ இசைக்கும் வித்தியாசம் தெரியாதவன் எவ்வளவுதான் ரசிக்க முடியும்.?அந்தக் காலத்தில் என் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபிறகு கர்நாடக சங்கீதம் அறிமுகப்படுத்தி உற்சாகப் படுத்தினவன். எனக்கு சங்கீதம் அறியாத தாழ்வு மனப்பான்மை இன்னும் உண்டு. நீங்கள் மற்றும் மாதங்கி அவர்கள் சங்கீதம் பற்றி எழுதும் போது பொறாமைப்பட்டதுண்டு.

இரசிகை சொன்னது…

aamaa,sir........naangalum therinjukurom.
katruth thaarungal..:)

Vel Kannan சொன்னது…

அருமையான பதிவு சுந்தர் ஜி ஒரு நல்ல இசையை போல. நன்றி

RVS சொன்னது…

வாகை சூட வா படத்தில் வரும் ”சரி சரி சாரக் காத்து..” மாதிரி இருக்கு ஜி! ராகம் ஒன்னுதான்னு நினைக்கிறேன்.

அமர்க்களமான ஆரம்பம். :-)

ரம்மி சொன்னது…

அருமையான பதிவு

ரிஷபன் சொன்னது…

மிக அருமையான ஆரம்பம்.. நல்ல இசையைப் போல..
நீங்கள் காட்டப் போவது ஒரு புது ராகம்..

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! இசை இல்லாத வாழ்க்கையை நினைத்துபார்க்கக் கூட முடியவில்லை. ஒவ்வொரு முறை ஒரு புது இசை கேட்கும் போதும் புது குளுமை நெஞ்சுக்குள் படரும்.. தொடருங்கள் உங்கள் இசை வேள்வியை.. விசிலடிக்க நானாச்சு!

rajasundararajan சொன்னது…

"என் சுவாசங்களின் மணிமாலையில்
உன் பெயரை தியானம் செய்வேன்"
(சாசோன் கி மாலா பெ சிம்ரூன் மே தேரா நாம்...)

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் நுஸ்ரத் அவர்கள் பாடிய ஒரு சூபி பாடலின் ஆரம்ப வரி இது. ஒரு இறைக்காதலனின் உணர்வுகளை லௌகீகக் காதலின் தளத்திற்கும் பொருந்தும்படியான மெட்டில் வெளிப்படுத்தும் பக்திப்பாடல் அது.

இந்தப் பாடலின் மெட்டினை அப்படியே சுட்டு ஒரு தமிழ்த் திரைப்படத்தில் போட்டிருந்தார்கள். "கத்தாழ கண்ணால..." என்று தொடங்கும் அந்தப் பாடல் சினிமாவுக்கே உரிய மேலோட்டமான, சாரமற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்த கலைஞனின் தளத்திற்கு நுஸ்ரத்தின் மெட்டு இறக்கப்பட்டுவிட்டது. அவ்வளவுதான். அந்த இசைக்கலைஞனைக் கேட்டால் 'நுஸ்ரத்தின் பாடலால் இன்ஸ்பயர் ஆகி இதைப் போட்டேன்' என்று கூறுவான்.

- ரமீஸ் பிலாலி http://pirapanjakkudil.blogspot.com/2010/09/blog-post.html

Matangi Mawley சொன்னது…

has anyone else answered????


I KNOW!!!!!!!!!!


:) :) :) :) :) ... என்ன பாட்டு இது! ச... நான் இத்தன நாள் யோசிக்கவே இல்லையே!!!

"கத்தாழ கண்ணால குத்தாதே"-- அஞ்சாதே

அட்டசல் அதே tune !!! இத்தன நாளா நான் connect ஏ பண்ணி பாத்ததில்ல!! chance ஏ இல்ல sirji ... நல்ல brain excercise ...

சுந்தர்ஜி சொன்னது…

இந்த வார சரியான பதில் சொன்ன மாதங்கிக்கு ஒரு அப்ளாஸ்.

rajasundararajan சொன்னது…

இது என்ன அரசியல்?!

எனது பின்னூட்டம் rajasundararajan Oct 5, 2011 07:26 PM

மாதங்கியின் பின்னூட்டம் Matangi Mawley Oct 5, 2011 10:07 PM

இதே ரசனையில் இன்னொருவர் முன்பே பதிவிட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்டவும்; அதனால் இதில் விடுகதையை விடுவிக்க ஒன்றுமில்லை என்று ஒதுங்கிக் கொள்ளவும்தான் நான் பின்னூட்டம் இட்டேன். எனது பின்னூட்டத்தை நீங்கள் மட்டுறுத்தி வெளியிடுவதற்கு முன்பே மாதங்கி எழுதியிருப்பார் என்று எடித்துக்கொள்ளலாம், ஆனால் ரமீஸ் பிலாலியின் பதிவை வாசித்திருக்கமாட்டார் என்று எப்படி எடுத்துக் கொள்வது?

அப்படியெல்லாம் நடந்திருக்காது என்று நம்பி நானும் மாதங்கியை வாழ்த்தி அமைகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

இதில் ஒரு அரசியலும் இல்லை ராஜு அண்ணா.

நீங்கள் குறிப்பிட்ட ரமீஸ் பிலாலியின் பதிவை நீங்கள் குறிப்பிட்ட பின்னரே நானும் வாசித்தேன்.அதற்கு முன் வாசித்ததில்லை.

தவிர நஸ்ரத்தின் சாஸோங் கி மாலா பே பாடலை நானும் என் மகனும் அஞ்சாதே வந்த புதிதில் ஒப்பிட்டுக் கண்டுகொண்டோம்
என்றாலும் எழுத இப்போதுதான் நேரம் வாய்த்தது என்பதும் இசையைக் கேட்கவும் ஒப்பிட்டுப் பார்க்கவும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் நினைத்த ஒரு சிறு முயற்சிதானே அன்றி அதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை.

நீங்கள் வெட்டி ஒட்டியிருந்ததால் அதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையே தவிர உங்களின் இசை ஆர்வம் நான்றிவேன்.

கேட்ட பின் வெளியிட்ட ஆச்சர்யம் மாதங்கியின் எழுத்துக்களில் இருந்ததால் அதற்குப் பாராட்டுத் தெரிவித்தேன்.அவ்வளவுதான்.

இதுவும் என் நோக்கம் தவறாகப் புரிந்துகொள்ளப் படக்கூடாதே என்பதற்காகத்தான் எழுதினேன்.

சுந்தர்ஜி சொன்னது…

இது விடுபட்டுப் போனது. உங்களுடையதைப் போலவே மாதங்கியின் இசை ஆர்வத்தையும் நான் நன்கறிவேன் ராஜு அண்ணா.

நான் வலியுறுத்த விரும்புவது படித்து ஒப்பிடுவதை அல்ல கேட்டு ஒப்பிடுவதை.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator