2.10.11

நன்மதி கொடு இறைவா!

















யாரொருவர் 
தன்வாழ்க்கையின்
ரகசியங்களைத்
திறந்த புத்தகமாக்கத்
துணிந்தாரோ-
துணிவாரோ-
யாரொருவர் தன்
சொல்லையும்
செயலையும்
ஒன்றாய்
இணைத்தாரோ-
இணைப்பாரோ-
யாரொருவரின்
சுவடுகள்
யாரொருவரும் செல்லாத
அடர்வனங்களில்
இறுதிவரை பயணித்ததோ-
பயணிக்குமோ-
யாரொருவர்
இலக்கை அடைந்ததன்
பின்னுள்ள காலத்தை
முன்கூட்டியே
கண்டறிந்து
சொன்னாரோ-சொல்வாரோ-
யாரொருவர்
யாராலும் தொடமுடியாத
உயரத்தை
விட்டுச் சென்றாரோ-
செல்வாரோ-
யாரொருவரை
இனிவரும் காலங்கள்
தாகித்துத் தேடியலையுமோ-
தேடிக்கண்டடையுமோ-
அவருக்குப் பெயர்
காந்தி என்பதாய் இருக்கும்-

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதா ராம்
ஈஸ்வர் அல்லா தேரே நாம்
ஸப்கோ ஷன்மதி தே பகவான்.

(காந்தியின் பிறந்த தினத்துக்காக ஒரு மீள் பதிவு இது. என் மனதின் ஆழத்திலிருந்து ஒரு நினைவாஞ்சலி)

9 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மீள் பதிவு எனினும் நல்ல பதிவு...

ரிஷபன் சொன்னது…

யாரொருவரை
இனிவரும் காலங்கள்
தாகித்துத் தேடியலையுமோ-
தேடிக்கண்டடையுமோ-
அவருக்குப் பெயர்
காந்தி என்பதாய் இருக்கும்-

ஹே ராம்!

இன்றைய நிலையில் பாதி காந்தி அளவுக்கு ஒருவர் வந்தால் கூட போதும்.

G.M Balasubramaniam சொன்னது…

மீள் பதிவாயிருந்தால் என்ன.?மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள வேண்டிய விஷயம்தானே. சில நேரங்களில் பலரால் அவருடைய பெயர் கொச்சைப் படுத்தப் படும்போது மனம் சங்கடம் அடைகிறது.

இரசிகை சொன்னது…

samarppanam....

RVS சொன்னது…

அட்டகாசம் சுந்தர்ஜி!! :-)

மோகன்ஜி சொன்னது…

உங்கள் பதிவு மீண்டும் வந்தது போல் பாபூவும் மீண்டும் வந்தால்... ஓ! கேள்வியே பயமுறுத்துகிறது அல்லவா?

கவிதை புண்ணியனுக்கு தக்க புகழாஞ்சலி சுந்தர்ஜி!

பத்மநாபன் சொன்னது…

சத்திய புருஷராக , கர்ம வீரராக, எதற்கும் அஞ்சாதவராக , தீர்க்கதரிசியாக,உயர்ந்த உத்தமர் மகாத்மாவுக்கு சிறப்பான கவிதாஞ்சலி....

Ramani சொன்னது…

"எவர் ஒருவருக்கு என் வாழ்க்கையே
உலகுக்கான செய்தி என்ச் சொல்லும்
தைரியம் இருந்ததோ "
எனவும் சேர்த்துக் கொள்ளலாம்
அருமையான பதிவு

Anonymous சொன்னது…

அய்யா..மிக விரைவில் உமது கவிதைகள் நல்ல நூல் வடிவம் பெறக் கடக...எஸ்.ரா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...