24.7.12

பரிவின் இசை விடைபெறுகிறது.


என்னுடைய கலை ஆர்வத்தைத் தணித்துக்கொள்ளவே இரண்டு வலைப்பூக்களை நிர்வகித்து வந்தேன்.

இரு விதமான டெம்ப்ளேட், இரு விதமான லே அவுட், ஒவ்வொரு ப்ளாகிலும் வெவ்வேறு விதமான தளம் என யோசித்துத்தான் கைகள் அள்ளிய நீர் பெருகியதும், பரிவின் இசை ஒலித்ததும்.

ஆனால் இதற்கு மேலும் -இந்த ஆர்வத்துக்காக மட்டும் - இரட்டைக் குதிரைகளை ஓட்ட முடியுமென்று தோன்றாததால்-

பரிவின் இசை விடைபெறுகிறது. 

இனி நம் கூடாரம் கைகள் அள்ளிய நீர் (www.sundargprakash.blogspot.in) மட்டுமே.

பொருத்தமாக பரிவின் இசையில் கடைசியாக ஒலித்தது ”நிசப்தத்தின் ஒலி”.

பரிவின் இசையைக் கேட்ட உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.

9 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

என் கணினியின் டாஷ் போர்டில் உங்கள் பழைய பதிவுகளின் அணிவகுப்பாகவே இருக்கிறது. பரிவின் இசையெல்லாம் கைகள் அள்ளிய நீருக்கு வந்து விட்டதா.?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டு குதிரைகளில் ஒரே சமயத்தில் பயணம் செய்வது கடினம் தான். நானும் ஆர்வத்தில் இரண்டல்ல மூன்று குதிரைகளில் ஏறி அமர்ந்து விட்டேன். ஒன்றில் தான் சுகமாக அமர முடிகிறது.... மற்ற இரண்டும் இயக்கமில்லாமல் நின்றுவிட்டது....

தொடர்ந்து அள்ளி அள்ளி பதிவு ரசம் பருக, தொடரட்டும் கைகளில் அள்ளிய நீரில் பகிர்வுகள்.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

O.K.
தகவலுக்கு நன்றி...

Ramani சொன்னது…

கொல்லிமலைத்தேனை
ஒரு குடுவையில் முழுமையாகத்
தருவதாகச் சொல்கிறீர்கள்
வாழ்த்துக்கள்

vasan சொன்னது…

ப‌ரிவின் இசை
பிரிவின் இம்சை
வ‌ழியும் விழி நீர்.
ம‌றைவா, பிரிவா?
நாளையைத்
தீர்மானிக்க‌ட்டும்
நாளை....

இர‌ட்டைக் குதிரையை
இணைத்து ஒரு தேரோட்டியாய!!

சிவகுமாரன் சொன்னது…

நானும் இரண்டு குதிரைகளில் பயணிக்கிறேன்.இரண்டுமே பந்தயக் குதிரைகள் இல்லை என்பதால் முடிகிறது. ஆங்காங்கே கட்டி, களைப்பாறி , மற்ற குதிரைகளோடு போட்டியிட முடியாவிட்டாலும் பயணம் தொடர்கிறது.- சுந்தர்ஜி பயணிக்கும் முரட்டுக் குதிரையின் வேகம் கண்டு பிரமித்துக் கொண்டே.

Matangi Mawley சொன்னது…

Photograph- Excellent! :)

நிலாமகள் சொன்னது…

ஒன்றென்ப‌ர்; சில‌ர் இர‌ண்டென்ப‌ர்; இர‌ண்டும‌ல்ல‌ வேறொன்றென்ப‌ர்; அத்வைத‌ம் துவைத‌ம் அனைத்தும் அறிந்த‌வ‌ர் ஜி தாங்க‌ள்.


வேகம் மிகுந்தது
வேகம் தளரும்.
மெல்லப் போ.
நிலைத்தது போல் மெல்ல//

என‌ தாவோ கோயிலுக்குப் போகும் வ‌ழியை அறி(வி)த்த‌வ‌ராயிற்றே...!

அப்பாதுரை சொன்னது…

understandable

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...