20.5.13

நிர்வாண ஷட்கம் - ஆதிசங்கரர்வீட்டைத் துறந்து தன் குருவைத் தேடிப் பயணித்த இளம் சங்கரன், இமாலயத்தின் அடியில் பத்ரிநாத்தை அடைந்தபோது எட்டே வயது பாலகன். 

ஆச்சார்யர் கோவிந்தபாதரைச் சந்தித்த சங்கரன் அவர் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து தன் பணிவைச் சமர்ப்பித்தபோது “நீ யாரப்பா?” என்று கேட்ட ஒரு கேள்விக்கு, அந்தச் சீடனே ஒரு குருவோ என்ற தோற்ற மயக்கத்தை உண்டாக்கிய அந்த ஆறு ச்லோகங்களும் “நிர்வாண ஷட்கம்” என்று பெயர் பெற்றன.

ஆறு ச்லோகங்களும் ஒரு துள்ளும் இளங்கன்றின் வேகத்துடனும், முதிர் ஞானம் பெற்ற ஒரு துறவியின் ஆழத்தோடும், ஓடும் நதியாய்ப் பெருக்கெடுத்துச் செல்கிறது.   

நிர்வாண ஷட்கத்தை இதற்கு முந்தைய தலைமுறையினர் கோயில்களில் பாடக் கேட்டிருக்கலாம். வீடுகளில் பாடப்பட்டன. பிறகு இசைக் கருவிகள் பாடின. இப்போதோ நிர்வாண ஷட்கம் இயற்றப்படுவதற்கு முந்தைய பெருத்த நிசப்தம் நம் ஆலயங்களை,வீடுகளைப் பீடித்திருக்கின்றன. 

பற்றையும், பற்றின்மையையும் போதனையாய் ஒருங்கே நினைவுறுத்தும் இந்தப் பொக்கிஷத்தை நம் வீடுகளில் ஒலிக்கச் செய்வோம். குழந்தைகளின் காதுகளில் இவை ஒலிக்கட்டும். இவற்றின் பரிச்சயம் அவர்களின் செவிகளுக்கு உண்டானால், அதன் பொருளை எதிர்காலத்தில் தெரிந்து கொள்வார்கள்.

இனி நிர்வாண ஷட்கம்:

1.
மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,
ந ச வ்யோம பூமிர், ந தேஜோ நவாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு
கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;
வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

2.
ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு: 
ந வாக் சப்த தாதுர், ந வா பஞ்சகோச: 
ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு: 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை; 
எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை; 
கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை; 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

3.  
ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ, 
மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ:  
ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ:  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;  
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;  
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

4.  
ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்!  
ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞ:  
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா,  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;  
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;  
உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!   
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

5.  
ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத:  
பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா  
ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்யா:  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;  
தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

6.  
அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ,  
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்  
நச சங்கடம் நைவ, முக்திர் ந மேயா  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;  
எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;  
தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

“நிர்வாண ஷட்கம்” விளக்கத்துடன் அருமை...

நன்றிகள் பல...

வாழ்த்துக்கள்...

V Mawley சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று ..மாலி

G.M Balasubramaniam சொன்னது…

நீ யாரப்பா என்ற கேள்விக்கான பதிலா இந்த நிர்வாண ஷட்கம்? சம்ஸ்கிருத மொழி கற்றவரா நீங்கள் சுந்தர்ஜி.? என்ன சொல்ல. நம் துரதிர்ஷ்டம் தான் இந்த மொழி வழக்கில் இல்லாதது. பல விஷயங்கள் உங்கள் இடுகைகளைப் படிப்பதில் கற்கிறேன் நான். நன்றி மட்டுமே சொல்ல முடியும்.

அப்பாதுரை சொன்னது…

எத்தனை ஆழம்! இதை என் இளமையில் வீட்டிலோ வெளியிலோ எங்கேயுமே கேட்டதில்லை.
GMB அவர்கள் சொன்னதே எனக்கும் தோன்றியது.

kashyapan சொன்னது…

சுந்தர்ஜி அவர்களே! மிக உயர்ந்த தளத்தில் உள்ளோருக்கான தத்துவ விசாரனை! சமணர்களிடையே ஒரு தர்க்கவியல் போக்கு உண்டு! ஒரு பொருளை விளக்குவதற்கு அது எதெல்லம் இல்லை என்று கூறி அது எது என்பதை விளக்குவார்கள்! ஆதி சங்கரர் அதே யுக்தியை பயன்படுத்தி உள்ளது வியப்பக உள்ளது!---காஸ்யபன்.

சிவகுமாரன் சொன்னது…

என்னைப் போன்ற சாமான்யர்களுக்கும் இந்த ஸ்லோகங்களை சேர்ப்பித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator