8.10.11

தூஸ் போன்டெஷ்


தூஸ் போன்டெஷ் (Dulce Pontes). இது போர்ச்சுக்கீஸின் இசை உலகத்துக்கு மிக முக்கியமான பெயர். இசையமைப்பாளர்-பாடலாசிரியை-பாடகி-நடிகை. 1969ல் பிறந்து 1990களில் போர்ச்சுக்கீஸின் நவீன இசை மறுமலர்ச்சிக்குக் காரணமான ஃபேடோ (http://www.youtube.com/watch? v=Ui2zIM8FWS4&feature=results_main&playnext=1&list=PLB0BDDA8E30FEA01C)என்கிற இயக்கத்தின்அடித்தளத்துக்குக் காரணமான இசைக்குயில்.

சாஸ்த்ரீய இசை-நாட்டுப்புற இசை-பாப் இசை மூன்றிலும் தேர்ச்சிபெற்ற போன்டெஷ் அடிப்படையில் பியானோ இசைக்கக் கற்றுக்கொண்டார். 1991ல் Lusitana Paixão (என்னிடம் சொல்) http://www.youtube.com/watch?v=iFqr-ykMwi8 என்ற பாடலுக்காக  தேசீய அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தாலும் ஈரோவிஷன் இசைப் போட்டியில் போர்ச்சுக்கீஸின் சார்பில் பங்கேற்று எட்டாவது இடம் பெற்றார். (ஆனாலும் இதுவரைக்கும் இதுதான் போர்ச்சுக்கீஸின் பாடகர்களுக்கு நான்காவது சிறப்பான இடம்).

Canção do Mar (கடலின் இசை)  இவரின் பாடல்களில் அவருக்கு மிகப் பெரிய ப்ரபலத்தைக் கொடுத்தது. இதை பிரபல ஹாலிவுட் சினிமாவான ப்ரைமல் ஃபியர் (Primal Fear) என்கிற படத்தில் உபயோகித்துக் கொண்டார்கள். இதன் இசையின் 30 நொடி வடிவத்தை SOUTHLAND என்கிற NBC போலீஸ் நாடகத்தில் பயன்படுத்தினார்கள்.இந்த கடலின் இசையைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவலை இடுகையின் முடிவில் வைத்திருக்கிறேன்.

துவக்கத்தில் ஒரு பாப் பாடகியாகத் தன் பயணத்தைத் துவக்கிய போன்டெஷ் போகப்போக உலக இசைக்கான அடையாளங்களைத் தேடத் துவங்கினார்.மறந்து போயிருந்த பல பாரம்பரியமான இசை வடிவங்களையும் இசைக்கருவிகளையும் அவர் தேடியெடுத்து மறு உயிர் அளிக்கத் துவங்கினார்.

தன் படைப்புக்களில் ஐபேரிய( iberian) தீபகற்பத்தின் இசைப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தார். அது மட்டுமில்லாமல் அவரது படைப்புக்களை அரேபிய ஆஃப்ரிக்க பல்கேரிய பிரேசிலிய இசை மரபுகளும் அவரை ஈர்த்தது.

பெரும்பாலும் போர்த்துக்கீஸில் மட்டும் பாடினாலும் ஸ்பானிஷ் கலீசியன் மிராண்டீஸ் இத்தாலியன் ஆங்கிலம் அரேபிய கிரேக்க மொழிகளிலும் பாடிவருகிறார்.

2006 ஜூனில் O Coração Tem Três Portas (இதயத்துக்கு மூன்று கதவுகள்) http://www.youtube.com/watch?v=_pFPYbFcwBE என்கிற ஆல்பத்தை பார்வையாளர்கள் ரசிகர்களின்றி தோமாரில் உள்ள ஒரு தேவாலயத்திலும் ஒபிடோஸில் உள்ள தூய மேரி தேவாலயத்திலும் இசையமைத்தார். இவர் மனதுக்கு இன்று வரை மிக நெருக்கமான ஆல்பமாக இசையாக இது இருக்கிறது. இதை 2006 டிசம்பரில் வெளியிட்டார். 

2009ல் Momentos என்கிற தலைப்பில் தன் 20 ஆண்டு கால வெளிவந்த வெளிவராத இசைப்படைப்புகளின் தொகுப்பாய் இதைக் கொண்டுவந்தார். 

சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய பாடல்களின் தொகுப்பாய் Nudez என்கிற ஆல்பத்தைத் தயாரிக்கும் பணியில் இவர் மும்முரமாய் இருக்கிறார்.

போன்டெஷின் இசை புதிய புதிய கதவுகளைத் திறக்கிறது. கதவுகளுக்கு வெளியே என் சலனமற்ற குளத்தில் சிறிய ஓட்டாஞ்சில்லை எறிந்து மூழ்க வைக்கிறது. அலையின் சலனம் மொக்குகள் மலரக் காத்திருக்கும் தாமரைகளைத் தொட்டு சமனப்பட மீண்டும் குளம் ஆசை கொள்கிறது மற்றொரு கல்லெறிக்காக. அலை தயாராகிறது தாமரையின் தொடலுக்காக. 

இவை தேனின் சுவையை சொட்டுக்களில் சுவைக்கத் தந்திருக்கிறேன். மேலும் படிக்க புதிய இசை கேட்கத் துடிப்பவர்களுக்கு உபயோகப்படலாம். போன்டெஷின் வலைத்தளம். http://www.dulcepontes.net   

போன்டெஷின் கடலின் இசை(Canção do Mar) தேவாவுக்கு மிக நெருக்கமானது. இதைக் கேட்டு விட்டு இந்த வாரப் புதிருக்கு விடை சொல்லுங்கள் தேவாவின் வழியாக.

2 கருத்துகள்:

Matangi Mawley சொன்னது…

இது நிறையா பேரால சொல்ல முடியும்-னு தோணறது. தேவா original ஆ என்ன போட்டுருக்கார்-னு தான் question கேட்டா யாருக்கும் தெரியாது! பழைய ஹிந்தி பாட்டுகள்லேர்ந்து/தமிழ் பாட்டுகள்லேர்ந்து-ன்னு/ஒரு சில சமயம் அவர் பாட்டுகள்லேர்ந்தும் கூட!

சரி- இந்த பாட்டு- "ஓ வெண்ணிலா என்மேல் கோபம் ஏன்"- குஷி (lyrics not sure...)

இத தவிர ஒரு பிரபலமான ஹிந்தி பாட்டும் இருக்கு- அதுவும் இந்த பாட்டுலேர்ந்து "inspire" ஆன பாட்டு தான்...

"Aye Ajnabee teri pehli nazar"- Deewaangee ங்கற படம். (http://www.youtube.com/watch?v=hQRLoresKR0) Sunidhi Chauhaan குரல் ரொம்பவே நன்னா இருக்கும் இந்த tune கு... வேற என்ன சொல்ல முடியும்? Copy அடிக்கறாங்க-ன்னு தெரியும். அத கொஞ்சம் அந்த tune கு ஏத்தா மாதிரியான குரலையாவது use பண்ணனும். தமிழ் ல original ல இருக்கற "Attitude" துளி கூட இல்ல!

எனக்கு Canção do Mar and Dulce Pontes ரொம்பவே நல்ல அறிமுகம்!

Thanks, sirji...

இரசிகை சொன்னது…

kushi song...
but,kushiya solla mudiyala.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...