10.10.11

இசை மேதை கார்த்திக் நாராயணன்


இசையின் வாசம் இன்னும் தொடருகிறது.

நேற்று மாலை வெங்கடநாராயணா சாலையின் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்து வெங்கடேசப் பெருமாளை தரிசித்துவிட்டு எதேச்சையாக அதனருகிலுள்ள இசை அரங்கத்தில் ஸ்ருதி கூட்டப்படும் ஒலி கேட்டு உள்ளே நுழைந்தேன்.

பொதிகை தொலைக்காட்சியைப் போல் புதியவர்களை அறிமுகப் படுத்தும் தொலைக்காட்சி வேறெதுவும் இருக்கமுடியாது. எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் எரிந்து கொண்டிருக்கும் கவனிப்பாரற்ற கோயிலின் தீபம் போன்றது அவர்களது சேவை. தூர்தர்ஷன் பொதிகையைத் துவங்கும் முன்பிருந்தே அவர்களின் ஹிந்தி நிகழ்ச்சிகளோடு வளர்ந்தவன் நான். அவர்களின் விளம்பரக்குறுக்கீடு இல்லாத-இரைச்சல் அற்ற-நிகழ்ச்சிகள் எல்லோரையும் கவர்வதில்லை. அவர்களின் குறைகள் அநேகமாக தொழில்நுட்பமும் கற்பனைவளக் குறைவும் சார்ந்தவை.அவற்றை ஜீரணித்துக்கொண்டால் பல பொக்கிஷங்களை அள்ளலாம்.

சரி. விஷயத்துக்குப் போவோம்.

ஸ்ருதி கூட்டிக்கொண்டிருந்தது மாஸ்டர்.கார்த்திக் நாராயணன் எனும் இளம் பாடகன்தான். இந்த வாரத்திலேயே பொதிகையின் இசை நிகழ்ச்சிகளில் இருமுறை கேட்க நேர்ந்த பதினெட்டு வயது இளைஞன்அதே கார்த்திக்தான் இன்று எனக்குக் கிடைத்த புதையல்.

முதல் பாட்டிலிருந்தே கச்சேரி களைகட்டிவிட்டது.மிகக் குறைவான பார்வையாளர்கள் இருந்ததும் கேட்கும் அனுபவத்துக்குப் பேருதவியாக இருந்தது. வயதுக்கு மீறிய முதிர்வான குரலும் அபாரமான கற்பனை நிரம்பிய ஸ்வர ஆலாபனைகளும் என்னை அசத்தின. இள்வயதுக்குரிய தைரியமான சஞ்சாரம் அவருடைய கச்சேரியை தூக்கிப் பிடித்தது.

பல இடங்களில் மதுரை மணிஅய்யரும் யேசுதாஸும் டி.எம்.க்ருஷ்ணாவும் கலந்த ஒரு சாயலை உணர்ந்தேன்.  அங்கிருந்த ஒரு மணிநேரத்துக்கும் சற்றுக்குறைவான நேரத்திலேயே அங்கிருந்த அனுபவத்தை சுகானுபவமாக மாற்றியமைத்தது.ஒன்றை மட்டும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

கார்த்திக் நாராயணன் எதிர்காலத்தின் மிகப் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகராவது சத்தியம்.

ஏழரை மணிக்கே கிளம்ப வேண்டிய சூழ்நிலையால் பாதியிலேயே எழுந்து சென்று கார்த்திக்கை தமிழ்நாட்டின் எதிர்காலம் நீதான் என்று மனதார ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பினேன்.

கிடைத்தது வைஷ்ணவா கல்லூரியில் பாடிய இந்த மூன்று வீடியோக்கள்தான் .ப்ளீஸ். கேட்டுப்பாருங்களேன்.இப்பாடல்களில் இருக்கும் கட்டமைப்பையும் மெருகையும் விட இன்னும் இன்னும் மெருகேறி இருக்கிறது கார்த்திக்கின் சங்கீதம்.




பி.கு:  தலைப்பின் கீழே இருக்கும் கார்த்திக் நாராயணன் போலவும் அவ்வப்போது டீ ஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டும் பாட கண்ணுக்குத் தெரியாத அந்த விதிகளைத் தளர்த்தினால் மேடை இன்னும் களை கட்டும். குர்தா-ஜிப்பாவையே பார்த்துப் பார்த்துக் கண்கள் செருகுகின்றன.அப்படித்தானே?

5 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

படித்துக் கொண்டு வருகிறேன். முன்பே கூறியதுபோல் கருத்துக் கூறும் தகுதி எனக்கில்லை. வாழ்த்துக்கள்.

ரிஷபன் சொன்னது…

கிடைத்தது வைஷ்ணவா கல்லூரியில் பாடிய இந்த மூன்று வீடியோக்கள்தான் .ப்ளீஸ். கேட்டுப்பாருங்களேன்.இப்பாடல்களில் இருக்கும் கட்டமைப்பையும் மெருகையும் விட இன்னும் இன்னும் மெருகேறி இருக்கிறது கார்த்திக்கின் சங்கீதம்.
கேட்கணும்..
ஆனா ஆபிஸ்ல அரையாண்டு கணக்கு முடிப்பு.. எப்படியும் கேட்டுருவேன்

சிவகுமாரன் சொன்னது…

நலமா சுந்தர்ஜி?
கார்த்திக் நன்றாக பாடுகிறார். விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அவ்வளவாய் இசை ஞானம் இல்லை.

விமலன் சொன்னது…

மனதை மயக்கும் இசை,நம்மை இனிமையாக்கி விரியச்செய்து விடுகிறதுதான்.

மதுரை சரவணன் சொன்னது…

karththick nalla arimukam...vaalththukkal

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...