21.3.12

அஞ்சலி.




வானவில் மனிதன் மோகன்ஜி குறித்து எழுதுவதற்கு எப்போதுமே எனக்கு ஆசை உண்டு.

ஆனால் இம்முறை அவருடைய தாயாரின் மரணம் குறித்த செய்தியோடு இப்பதிவை எழுதுகிறேன்.

இரண்டு நாளைக்கு முன்னால்தான் அவர் அம்மா நோய்வாய்ப் பட்டிருந்ததை  நீண்ட நாட்களுக்குப் பின் மனம் கசியும் கவிதையாய் எழுதியிருந்தார்.

இதுவரை பார்த்திராத அவர் அம்மாவை அந்தக் கவிதையில் சந்தித்தேன். அதுவே கடைசி சந்திப்பாய் அமைந்துவிட்டது.

மோகன்ஜியைத் தந்துவிட்டு மறைந்துபோன அந்தத் தாயின் ஆன்மாவில் என் எழுத்துக்கள் சுமக்கும் அஞ்சலி பூக்களாய் மாறித் தூவப் படட்டும்.

உங்கள் வாழ்விற்கும் விடைபெறலுக்கும் அஞ்சலி அம்மா!

6 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மோகன்ஜியைத் தந்துவிட்டு மறைந்துபோன அந்தத் தாயின் ஆன்மாவில் எழுத்துக்கள் சுமக்கும் அஞ்சலி பூக்களாய் மாறித் தூவப் படட்டும்.

உங்கள் வாழ்விற்கும் விடைபெறலுக்கும் அஞ்சலி அம்மா!

கோவை2தில்லி சொன்னது…

மோகன் அண்ணாவுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் அந்த கடவுள் மனோதிடத்தை தரட்டும்.

என் ஆழ்ந்த இரங்கல்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மோகன் அண்ணாவின் அம்மா ஆன்மா சாந்தி அடைய நானும் பிரார்த்திக்கிறேன்....

நேற்று இரவு தான் gmail மூலம் chat செய்து கொண்டு இருந்தேன்....

அப்பாதுரை சொன்னது…

அறிவித்தமைக்கும் அஞ்சலிக்கும் நன்றி சுந்தர்ஜி.

பத்மா சொன்னது…

deep condolence

RVS சொன்னது…

நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்தேன். மனிதர் பார்ப்பதற்கு நிதானமாக இருந்தாலும் உடைந்துதான் போயிருக்கிறார். நிறைய விஷயங்கள் அம்மாவைப் பற்றி உணர்வுப்பூர்வமாக பகிர்ந்தார்.

அவர் வாயால் அம்மாவைப் பற்றி நானும், என் மனைவியும் கேட்டோம். ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். :-(

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...