8.3.12

கனவின் நகல்



இதற்குமுன்
ஒருபோதும்
சென்றிருக்காத
ஏதோவொரு
அயல்நாட்டின்

ஒரு வெறுமையான
தெருவிலிருந்து
துவங்குகிறது
அந்தக் கனவு.

நகரவாசிகளின்
புதிரான மொழி
குறித்தோ-

பாஸ்போர்ட்
விசா தொடர்பான
ஆபத்துக்கள்
குறித்தோ
நீளும் என் கனவுக்குக்
கவலையில்லை.

திடுதிப்பென்று
இப்படி அயல்நாடு
வந்தால்
எங்கே தங்குவதென்பது
பற்றியோ

குறைந்த பட்சம்
காலை உணவு குறித்தோ
கொஞ்சமும்
அக்கறையில்லை.

குளிருக்குச் சற்றும்
பொருத்தமில்லாத
போர்வையுடனும்

கால்களுக்குச்
சப்பாத்துக்களுமின்றி
எத்தனை தூரம்தான்
இன்னும்
கூட்டிச்செல்லுமோ
என நடுக்கமுற்று நிற்க-

நல்லவேளை
அந்தக் கனவின்
அடுத்த தெருவிலேயே
தென்பட்ட
என் வீட்டின்
படுக்கையறைக்குள்
புகுந்து போர்த்திக்கொள்ள

எனைத் தேடி
அயல்தேசத்தின்
அடுத்த தெருவிலேயே
காத்திருக்கக்கூடும்
அந்தக் கனவு.


-நன்றி- ஆனந்தவிகடன் - 14.03.2012

24 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

முன்பே படித்த நினைவு.இருந்தாலும் படிக்கப் படிக்க தெவிட்டாத கவிதை.

அப்பாதுரை சொன்னது…

முறுவல் :)

கீதமஞ்சரி சொன்னது…

கனவின் கைகளை உதறி அதை நிர்க்கதியாய் அந்நிய தேசத்தில் விட்டு வந்த உங்களைத் தேடி அலைந்தும் அழுதும் கொண்டிருக்கலாம் அக்கனவு. தேச வரையறையற்று திரிந்தலையும் இக்கவிதை வாயிலேனும் அதன் கவலை தீர்த்தமைக்கு நன்றி. மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள்.

இரசிகை சொன்னது…

nallaayirukku.

vasan சொன்னது…

க‌னவு நின்ற‌தும்
கால்க‌ள் நின்ற‌தா?

கால்க‌ள் நின்ற‌தால்
க‌னவு காத்திருக்கிற‌தா?

ம‌னம் ஒரு குர‌ங்கெனில்
க‌னவு ஒரு ப‌ற‌வைதானோ?

சக்தி சொன்னது…

அலைக்கழிக்கும் கனவுகள் மத்தியில் அலைக்கழிக்கா நற் கனவு

A.R.ராஜகோபாலன் சொன்னது…

சிலீரன்ற வார்த்தைகளின் துணையே
சிறகுகள் கொடுத்து
வானில்
வலம்
வரவைக்கும்
விந்தை உங்களுக்கே
வாய்க்கும் சுந்தர்ஜி.
விசாலம் .......................

எல்.கே. சொன்னது…

எனக்குப் பல மோசமானக் கனவுகள் வருவதுண்டு

சமுத்ரா சொன்னது…

good

ஹேமா சொன்னது…

சிரிச்சிட்டேன் சுந்தர்ஜி.எனக்கெல்லாம் இப்ப ஊருக்குப் போறமாதிரியும் அங்க பனிமழை கொட்டுற மாதிரியும் கனவு வருது !

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நான் தூங்கும்போது விழித்திருப்பதுபோலக் கனவு கண்டேன்.
விழித்துப்பார்த்தால் தூங்கிக்கொண்டிருந்தேன்.

இது எப்படியிருக்கு சுந்தர்ஜி, சார் !

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நாம் நம் வீட்டை விட்டு, நம் படுக்கையை விட்டு, நம் AC ரூமை விட்டு, நம் PC ஐ விட்டு எங்கும் செல்ல விரும்பாதபோதும், நம்மை சமயத்தில் எங்கெங்கோ அழைத்துச்சென்று, சிக்கலில் மாட்டிவிடும் இந்தப்பொல்லாத கனவுகள்.

ஒருசில சமயங்களில் மட்டும் இன்பக்கனாக்கள் வருவதுண்டு. அதை முழுவதும் அனுபவிக்கவிடாமல், மனைவி, செல்போன், அலாரம், காலிங்பெல், அழையா விருந்தாளி போன்ற தொல்லைகள் குறுக்கிட்டு எழுப்பிவிட்டு, கனவைக்கலைத்து விடுவதும் உண்டு.

நல்ல கவிதை இன்பக்கனா போலவே.

ரிஷபன் சொன்னது…

இதைத்தான் காலங்காலமாக தமிழ் சினிமாக்களில் காட்டுகிறார்கள்.. ஒரு பாடல் காட்சிக்கு வெளிதேசம் போய் ஆடிவிட்டு மறுபடி ரெங்கநாதன் தெருவில் வில்லனின் ஆட்களோடு சண்டை போட வந்துவ்டும் ஹீரோ!

சும்மா கலாட்டா பண்ணேன் சுந்தர்ஜி!
எனைத் தேடி
அடுத்த தெருவின்
அயல்தேசத்திலேயே
காத்திருக்கக்கூடும்
அந்தக் கனவு.
இந்த முத்தாய்ப்பான வரியில் அழகாகி விடுகிறது உங்கள் கவிதை.

ரமணி சொன்னது…

கனவு குறித்த தங்கள் பதிவு அருமை
நினைவு மனத்திற்குக் கூட
சில வரையரை சில லாஜிக் எல்லாம் உண்டு
கனவுகளுக்கு ஏது எல்லைக்கோடு
பாஸ்போட் விசாதொந்தரவு
நீங்கள் சொல்வது போல
அயல் தேசத்தில் அடுத்த தெருவில்
உறுதியாக நம் வீடு இருக்கும்
கனவில் அது குறித்த குழப்பமும் இருக்கும்
முழிப்பு வந்தால் குழப்பம் தீரக்கூடும்
ஆனால் அப்போது தவராமல்
எதையோ இழந்தது போன்ற ஏக்கம் நிச்சயம்இருக்கும்
கனவு குறித்த நல்ல நினைவு
தொடர வாழ்த்துக்கள்

மாதங்கி மாலி சொன்னது…

Dreams are strange, indeed... i tried reading Freud's "interpretation of dreams"... couldn't get past 50 pages! i decided that that moment-- dreams are like the concept- God... best enjoyed when one doesn't understand it...

There's a subtle, feel-good beauty in innocence. It’s a pity that the beauty in innocence is only realized after losing it...

Beautiful poetry!!!

ப.தியாகு சொன்னது…

அதானே பார்த்தேன்,
ஒரே கனவு எப்படி (வரி பிசகாமல்) திரும்பத்திரும்ப வர வாய்ப்பென்று
கலவரமடைந்தேன் போங்கள்!
கனவின் நகலை பத்திரபடுத்துகிறேன் சுந்தர்ஜி சார்.

சக்தி சொன்னது…

அலைக்கழிக்கும் கனவுகள் மத்தியில் அலைக்கழிக்கா நற் கனவு
அன்னிக்கு ஒருபேச்சு இன்னிக்கு ஒரு பேச்சில்ல

வேல்கண்ணன் சொன்னது…

ஆனந்த விகடனில் அயல்தேசக் கனவுக்கு வாழ்த்துக்கள்.

நாணற்காடன் சொன்னது…

அயல்தேசக் கனவு அழகு.

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

விகடன் கவிதை அருமையாயும் வித்தியாசமாயும்.

சிவகுமாரன் சொன்னது…

நானும் அடிக்கடி காணும் கனவு தான் இது - கண்ணைத் திறந்து கொண்டே.
( ஹ்ம் --- நானும் தான் ஆனந்த விகடனுக்கு அனுப்பிக் கிட்டேயிருக்கேன் !!!!)
வாழ்த்துக்கள் சுந்தர்ஜி

சிவகுமாரன் சொன்னது…

அந்த க்ரீன்ப்ளை விளம்பரம் பார்த்து சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்.
பீப்பி (?!) ஊதும் அந்த தாத்தா படம் ... (ஒருவேளை உண்மையான வித்வானாய் இருந்தால் அடிக்க வராதீர்கள் சுந்தர்ஜி)
எங்கு பிடிக்கிறீர்கள் இதையெல்லாம் ? சரியான ரசனைக்காரர் அய்யா நீங்கள் .

எஸ்.ராஜகுமாரன் சொன்னது…

சொல்வனத்தில் கவிதை நன்று. தொடர்க.

தனலக்ஷ்மி பாஸ்கரன், திருச்சி சொன்னது…

அயல் தேசத்தில் மிதந்த புளகாங்கிதம் “தொப்பென்று” உள்ளூர் சயன அறையில் போட்டதும் “சப்பென்று” ஆகிவிட்டது.ஒரு சூப்பர் கனவு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...