4.10.11

வை.கோ.வும் திருவாசகமும்


















என்னை மிகவும் ஈர்ப்பது அற்புதமாகப் பேசக்கூடியவர்களின் பேச்சும் அவர்களது நினைவுத் திறனும்.

எழுதும் ஆர்வமுள்ள அதே அளவுக்கு மூச்சுவிடாமல் சுவாரஸ்யமாக நான்ஸ்டாப் உரையாடலிலும் நேரம் காலம் பார்க்காமல் பாடுவதிலும் எனக்கு இணையில்லாத ஆர்வமுண்டு. ஆனால் சுட்டுப்போட்டாலும் மேடைப்பேச்சு அதிலும் அனைவரையும் வசீகரிக்கக்கூடிய பேச்சு என்பது நினைத்தும் பார்க்க முடியாதது.

நான் சமீபத்தில் பார்த்த விடியோக் காட்சிகளில் இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி வடிவ இசைக் குறுந்தகட்டு வெளியீட்டு விழாவில் வை.கோ. நிகழ்த்திய உரையைக் கண்டு அசந்து போனேன். தேன். தேன்.மெய் சிலிர்த்தேன்.

http://www.youtube.com/watch?v=db4-IgGuRXg&feature=related
http://www.youtube.com/watch?v=PFe_I4zvpN8&feature=related
http://www.youtube.com/watch?v=kRPHzTwoRsc&feature=related
http://www.youtube.com/watch?v=UQJXEeS3u_0&feature=related

(மேற்குறிப்பிட்ட சுட்டிகளை தடவிறக்கம் செய்யாது போனதால் இந்த இடுகையிட்ட சில காலத்துக்குப் பின் காபிரைட் விதிமுறையால் இதை இனிமேலும் காண வாய்ப்பில்லை. வருந்துகிறேன்.)

அதிக மக்களின் கவனத்துக்குப் போகாத தலைப்பில் உரையாற்ற எத்தனை தயாரிப்போடு வந்திருக்கிறார் என்கிற ஒழுங்கு மிக ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது.எந்த ஒரு குறிப்பும் கையில் வைக்காது விவரங்களையும் பெயர்களையும் எடுத்து வீசும் சாதுர்யத்தை அத்தனை சாதாரணமான சாதனையாகக் கருத இயலவில்லை.

இளையராஜாவின் இசையின் மேலுள்ள மேதைமைக்குச் சமமானதாகச் சொல்ல வைக்கிறது வை.கோ.வின் பேச்சுத் திறன். இவர் வெகு விரைவில் கட்சியில் தன் இடத்தை மிக அனாயாசமாகக் கடந்து விடுவார் என்பதில் முளைவிட்ட பயம் கருணாநிதியை இவர் மேல் வீண்பழி சுமத்தி கட்சியை விட்டு நீக்க வைத்தது. அதற்குப் பின் அவருக்கு இணையான பேச்சாற்றலும் நேர்மையும் கொண்ட ஒரு தலைவர் தி.மு.க.வில் உருவாகவில்லை.

தனக்கென்று பொதுவாழ்வில் நாகரீகமான இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் வை.கோ இதுநாள் வரைக்கும் எந்த ஒரு தனிமனித நிந்தனையிலும் ஈடுபடடதில்லை. பிறருக்கு உரிய மரியாதை அளித்து-மிக எளிமையான-எல்லோராலும் அணுக முடிந்தவராக-இத்தனை நாள் பொதுவாழ்விலும் ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காத அரசியல்வாதியாக- வை.கோ.வின் இடம் தமிழக அரசியலில் பெருத்த வியப்பானது.

எனக்கு எப்போதுமே இவருக்கு முன்னால்-அண்ணாத்துரை உட்பட- இத்தனை தமிழ்ப் புலமையும் நேர்மையும் கொண்ட ஒரு தலைவர் இருந்ததாக நினைவில்லை.

இவருக்கு எல்லாத் துறையிலும் முன்னோடி என்று பார்க்கும்போது ஹிந்திக் கவிதைகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் கொடிகட்டிப்பறந்த இன்னொரு கண்ணியமிக்க தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமே தட்டுப்படுகிறார்.

வை.கோ. நமக்கு ஒரு வரம் என்றால் வை.கோ.வின் துரதிர்ஷ்டம் நமது சாபம்.

11 கருத்துகள்:

Nagasubramanian சொன்னது…

//வை.கோ. நமக்கு ஒரு வரம் என்றால் வை.கோ.வின் துரதிர்ஷ்டம் நமது சாபம்.//
உண்மை

RVS சொன்னது…

கடைசி வரி... நிதர்சனம்!! :-))

Harani சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி...

அருமையான பதிவு. கிட்டத்தட்ட 50 க்கு மேற்பட்ட அவரின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இன்னும் சலிக்கவில்லை. அவரின் ஆங்கிலப்பேச்சும் ஆழமும் அர்த்தமும் அதிகம் கொண்டது. திருவாசகம் ஏற்கெனவே கேட்டிருந்தாலும் மறுபடியும் உங்கள் பதிவின்வழியாக ஒருமுறை முழுக்கக் கேட்டேன். நன்றி. தஞ்சை வந்த வாய்ப்பில் தங்களைச் சந்திக்கமுடியாத சூழலுக்கு வருந்துகிறேன். நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//வை.கோ. நமக்கு ஒரு வரம் என்றால் வை.கோ.வின் துரதிர்ஷ்டம் நமது சாபம்.//

மிகச்சரியாக ஒரே வரியில் சொல்லிவிட்டீர்கள். திரு. வை.கோ அவர்களின் பேச்சாற்றலும், பொது வாழ்வில் கண்ணியமாக நடந்து கொள்வதும், மிகவும் பாராட்டத்தக்க அம்சங்களே!

ரம்மி சொன்னது…

வைகோவின் அதீத ஈழப்பாசம், அவரை அந்நியப்படுத்துகிறது!

பத்மநாபன் சொன்னது…

இந்த பேச்சு முடிவில் கூச்சம் பார்க்காமல் சூப்பர் ஸ்டார் நீண்ட விசில் அடித்ததை பார்த்திருக்கிறேன் ... சிலிர்ப்பான உரை
சில பிடிவாதங்களை தவிர்த்து நிதர்சனங்களை உள்வாங்கினால் தமிழ் நாட்டிற்கு ஓரு நம்பிக்கைக்குரிய தலைவர் கிடைப்பார் ...
சுற்றியுள்ள தலைவர்கள் எல்லாம் ,விட்டால் அவர் பல உச்சிகளை தொட்டுவிடுவாரோ என்று அமுக்கி கொண்டே இருக்கிறார்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வை.கோ.வின் பேச்சாற்றல் பற்றிய தங்களது கருத்து தான் என் கருத்தும்....

மோகன்ஜி சொன்னது…

வை.கோவின் மேடைப் பேச்சை நான் சிலமுறை கேட்டு சொக்கியதுண்டு. அதில் தரும் புள்ளிவிவரங்களும்,விவரிக்கும் சர்வதேச நிகழ்வுகளையும் நான் ஆச்சர்யத்தோடு கேட்டிருக்கிறேன். இவரின் புலமையையும் பேச்சாற்றலையும் வெளிப்படுத்தும் இந்த திருவாசக உரை அவரின் மேதைமையைக் காட்டுகிறது. எப்படி இருக்க வேண்டியவர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. காலம் பதில் சொல்லும் தானே?

G.M Balasubramaniam சொன்னது…

தான் கொண்டுள்ள கொள்கைகளில் பிடிப்புள்ளவர். தமிழில் பற்று உடையவர். அவர் இருந்திருக்க வேண்டிய இடமே வேறு. அவருக்கு ஒரு ராசி. கூடக்கூடாத இடங்களில் கூடி நிறையவே பழித்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.

சிவகுமாரன் சொன்னது…

வீணடிக்கப் பட்ட தலைவர் அவர்.
உலக யுத்தங்களைப் பற்றிய அவரின் பேச்சுக்கள் வியக்க வைப்பவை.

nilaamaghal சொன்னது…

இவர் வெகு விரைவில் கட்சியில் தன் இடத்தை மிக அனாயாசமாகக் கடந்து விடுவார் என்பதில் முளைவிட்ட பயம் கருணாநிதியை இவர் மேல் வீண்பழி சுமத்தி கட்சியை விட்டு நீக்க வைத்தது. அதற்குப் பின் அவருக்கு இணையான பேச்சாற்றலும் நேர்மையும் கொண்ட ஒரு தலைவர் தி.மு.க.வில் உருவாகவில்லை.

எப்படி இருக்க வேண்டியவர் ...!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...