28.2.12

மாயம் செய்கிறாய் ஆதிரா!


ஆதிரா கோடம்பள்ளி. 

இந்த அற்புதமான இசைக்குச் சொந்தமான பெயர் இது. 
தன் மிக இளம் வயதிலேயே இசையோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள கேரளாவின் ப்ரபலங்களான கோடம்பள்ளி கோபாலன் பிள்ளை இவர் தாத்தாவாகவும் வித்வான் கோடம்பள்ளி கோவிந்தன் பிள்ளை இவர் அப்பாவாகவும் இருக்க வேண்டியதிருக்கிறது. 
அப்பா வாய்ப்பாட்டிலும் வீணையிலும் வல்லவர். 
வீட்டில் இறைந்து கிடக்கும் வாத்தியங்களும் லயம் ஸ்ருதியால் நிறைந்த தருணங்களும் ஆதிராவை வயலினுக்கு அருகில் கொண்டுவந்திருக்கின்றன. இவரின் குழந்தைப் பருவத்தில் இவர் விளையாடிய விருப்பமான பொம்மை வயலின் தான். 
9 வயதில் முதல் கச்சேரி கேரளாவில். 
புல்லாங்குழல் ரமணியிடமும் மேற்கத்திய சங்கீதத்தை வி.எஸ்.நரசிம்மனிடமும் கற்று வருகிறார்.

இவருடைய தாத்தாவின் மறைவுக்காக திருவனந்தபுரத்தில் இவர் செலுத்திய அஞ்சலி 32 மணி நேரம் நீடித்து அது ஒரு கின்னஸ் சாதனையானது. தொடர்ச்சியாக வெவ்வேறு ராகங்கள்-கிட்டத்தட்ட 900 ராகங்களுக்கு மேலாக வாசித்ததாக ஆதிரா சொல்கிறார். 
லிம்கா சாதனையும் புரிந்து மிக முக்கியமான இளம் சாதனையாளருக்கான விருதை இந்தியாவின் எல்லா முக்கியமான ஆளுமைகளிடமும் பெற்றிருக்கிறார். 
பிஸ்மில்லாஹ் ஃகான் தொடங்கி அம்ஜத் அலி ஃகான் வரைக்கும் அப்துல் க்லாம் தொடங்கி பாலமுரளி கிருஷ்ணா - இளையராஜா வரைக்கும் எல்லோர் கண்களையும் காதுகளையும் தொட்டிருக்கிறது ஆதிராவின் வயலினும் இசையும்.

இது கோழிக்கோடில் இடம்பெற்ற ஒரு இசை நிகழ்ச்சி. 
இவரின் சாதகம் எத்தனை அசுர சாதகம் என்பது அவர் வில்லையும் வயலினையும் எத்தனை அலட்சியமாகப் பிடித்திருக்கிறார் என்பது வயலின் வாசிக்கத் தெரிந்த கைகளுக்கும் வயலின் வாசிப்பவர்களை உற்று அவதானிக்கும் கண்களுக்கும் நிச்சயம் தெரியும்.

அவர் போகவிருக்கும் பாதை மரபு ரீதியான சாஸ்த்ரீய இசையின் பாதையல்ல. உலக இசை எனும் வடிவத்தில் எல்லா இசை வடிவங்களையும் இணைத்து புதிய அவதாரத்தோடு நம்மை உலுக்க இசையை மேலும் மேலும் கற்றுவருகிறார். 

மாயங்கள் செய் ஆதிரா. 
எங்கள் காதுகள் கொடுத்து வைத்தவை.

2 கருத்துகள்:

bandhu சொன்னது…

அறிமுகத்திற்கு நன்றி.. என்ன ஒரு தெயவானுக்ராஹமும் கடின உழைப்பும் இருக்க வேண்டும் இது போன்ற வாசிப்புக்கு!

சிவகுமாரன் சொன்னது…

பிறவி மேதை.
எனக்கு எப்போதுமே இசை வல்லுனர்கள் தெய்வத்திடமிருந்து வரம் பெற்று நேரே இறங்கி வந்ததைப் போல ஓர் எண்ணம் உண்டு. அது நிச்சயமாகியிருக்கிறது,
நன்றி
நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...