
அவரவரின்
மொழியில்
உருப்பெறுகிறது
கவிதை.
சிலருக்குக்
கோர்க்கப்பட்ட
எழுத்துக்களின்
பள்ள்ங்களில்
பருகக் காத்திருக்கிறது
கோர்க்கப்பட்ட
எழுத்துக்களின்
பள்ள்ங்களில்
பருகக் காத்திருக்கிறது
கவிதையின் லாகிரி.
வடிவமைக்கும்
சவப்பெட்டியிலேயோ
ஆடைகளின்
பின்னல்களிலேயோ
பின்னல்களிலேயோ
பிறருக்கு.
அசையும் காற்றின்
வெவ்வேறு
வெவ்வேறு
கோர்வைகளில்
உயிருறுகிறது இசை.
உனக்கு
வாய்க்கிறது
கடவுளின் சங்கீதம்.
எனக்குக்
கீரைவிற்பவளின் குரலாகவோ.
வானொலி அறிவிப்பாளனின்
விடாத பேச்சாகவோ.
அதிர்வின்
ஒவ்வொரு ஜதியிலும்
ஒவ்வொரு ஜதியிலும்
வடிவுறுகிறது நடனம்.
அவளுக்கு
அடவிலும் முத்திரையிலும்.
அடவிலும் முத்திரையிலும்.
இவனுக்கு
சாலைக்காவலனின்
லாவகத்திலேயோ.
சாணைக்காரனின்
கூரேற்றும் இயக்கத்திலேயோ.
அவரவரின்
மொழி அவரவர்க்கு.
அவரவரின் வேலியும்.
13 கருத்துகள்:
எங்கள் அளவுகளை நாங்களே சரிசெய்துகொள்கிறோம்.
அமைதியான, நிதானமான கவனிப்பை, நிலைகளைப் பேசும் கவிதை. நன்றி.
m........avaravarin paarvai avaravarkku..!!
vaazhthukal sundarji...:)
எல்லாவற்றிலும் இசையையும் கவிதையையும் தேடும் ஒருவனால் தான் அவரவர்க்கு அது என கூறவும் இயலும் ..
எங்கும் எதிலும் கலை
அது காணும், சுக நிலை
//அவரவரின்
மொழி அவரவர்க்கு.
அவரவரின் வேலியும்//
அழகா சொல்லிட்டீங்க ஜி! உங்களிடம் கற்கவும், சரிசெய்துகொள்ளவும் நிறைய இருக்கு எங்களுக்கு.
வேலி தாண்டும் மொழி
உங்களுடையது சுந்தர்ஜி.
கடவுள் கீரை விற்பவளின்
குரலாயும் வெளிப்படலாம்.
உங்கள் கவிதைக்கு வேலி உண்டா என்ன.? சுந்தர்ஜி உங்கள் பழைய பதிவுகளில் ஒரு ரௌண்ட் போய் வந்தால் தெரிகிறது, எத்தனை எத்தனை தலைப்புகள் , என்னென்ன உணர்வுகள். சிம்ப்லி குட். !
அவரவரின்
மொழி அவரவர்க்கு.
அவரவரின் வேலியும்.
Classic
எல்லாத்தையும் கவிதையாகிறீங்க சுந்தர் நீங்க...நிச்சயம் இது வரம்தான்.
அடடா ... நீங்கள் சொல்லும் இந்த கவிதையை நடையிலும் ஒரு தனி மொழி தெரிகிறது ஜி
கவிதையின் மொழி பற்றிச் சிலாகிக்கும் கவிதைமொழியில் ரசித்துக் குளிர்ந்தேன். என் கவிதை மொழி என்னவாயிருக்குமென்ற யோசனை இப்போது என் மொழியின் வேலிக்குள் சுழன்றுகொண்டிருக்கிறது.
மிக அழகான மொழிபேசும் கவிதைக்கு நன்றி.
அவரவரின்
மொழி அவரவர்க்கு.
அவரவரின் வேலியும்
- இது மீள் பதிவு -
என்றாலும் அதே வெளிச்சம்.
இருக்கும் தானே ,
சுடரில் என்ன
பழசு, புதுசு....
கருத்துரையிடுக