
ஒரு காரை ஓட்டுவது பற்றி
அவனும் நானும்
பேசிக்கொண்டிருந்தோம்.
சாலை விதிகளை
மதிப்பது குறித்தும்-
வேகக் கட்டுப்பாடு
குறித்தும்-
எரிபொருள் சிக்கனம்
பற்றியும்-
நீள் அரை வட்டமடிக்காமல்
திருப்புவது பற்றியும்-
எதிரில் வருபவனின்
மனநிலை குறித்தும்-
தேவையான இடங்களிலும்
ஒலி எழுப்பாமலேயே
சேருமிடம் அடைதல்
பற்றியும்-
பேச்சு வளர்ந்தது.
உயரத்தையெட்ட
விசையை மாற்றுதல்
பற்றியும்-
நெருக்கடி மிகும்போது
தனக்கான சந்தர்ப்பம்
வரும்வரை காத்திருப்பது
பற்றியும் தொடர்ந்தது.
மனதுக்குள் ஓடிக்
கொண்டிருந்த காரை
நிறுத்தி இறங்கியபடியே-
ஒரே பாதையானாலும்
ஓட்டத் துவங்கிய
ஒவ்வொருவருக்கும்
ஒரு பாதையை
உருவாக்குகிறது பயணம்
என்றேன்.
இயங்குவதில்தான்
இருக்கிறது எல்லா
சூட்சுமங்களும் என்றான்.
2 கருத்துகள்:
எப்படி வாழ்வை
(ஃவால்வோ அல்ல)
ஓட்டுவதென
தெ(ளி)ரிந்து விட்டது
கூகுள் க்ரோமின் வழியாகவந்தால் தெரியாத பதிவு இண்டெர்னெட் எக்ஸ்ப்லோரர் மூலம் வரும்போது தெரிகிறது. இதுவும் ப்ரிண்டர் கவிதையும் முன்பே படித்ததுபோல் நினைவு. ப்ரிண்டர் கவிதையில் என் பழைய பின்னூட்டம் இருக்கிறது. எதுவுமே சரியாக பிடிபடுவதில்லை. சில பதிவுகளில் பின்னூட்டம் எழுதினால் எடுத்துக் கொள்ளப் படுவது இல்லை. மாற்றி மாற்றி வந்தால்தான் சரியாகும் போல் தெரிகிறது.
கருத்துரையிடுக