
இந்தக் கவிதை
துறத்தல் பற்றியல்ல
துறந்த பின்னும்
வாழ்தல் பற்றி.
சுமையைத் துறத்தலிலும்
சுமையைப் பகிர்தல்
பற்றி.
உறவுகளைக் கடத்தலன்றி
உறவுகளில் உறைதல்
பற்றி.
நிரம்பாத பள்ளங்கள்
பற்றியல்ல.
மேடுகளைக் கரைத்தல்
பற்றி.
அறைகளின் நிசப்தத்தை விடவும்
இலையசையும் வெளி பற்றி.
முடங்குதலின் சோர்வல்ல
கால்ப்பந்தாட்டத்தின் வியர்வை பற்றி.
துறவின் கேள்விகள் பற்றியல்ல
துறவியின் புன்னகை பற்றி.
விடைபெறுதலின் துயரம்
என்பதனினும்
வரவேற்றலின் மேன்மை
பற்றி.
20 கருத்துகள்:
வாவ் சுந்தர்ஜி !
a positive beginning ,by reading ur poem ...
துறவு தன்னைத் துறத்தலே
உலகைத் துறத்ததல்ல
நிறையச் சொல்லிப் போகிறது கவிதை
வாழ்த்துக்கள்
அருமையாகவுள்ளது..
வலைபக்க வடிவமைப்பு அழகாகவுள்ளது நண்பா
good one...
’துறவு’
பற்றிய
தங்கள்
கவிதை
எங்களுக்கு
புதிய
’வரவு’
SLOWLY AND STEADILY I FEEL YOU ARE COMING BACK TO OWN YOUR OWNSELF. BEST WISHES.
மேன்மைகளை வரவேற்பது ஒரு துறவு நிலைதான்
//முடங்குதலின் சோர்வல்ல
கால்ப்பந்தாட்டத்தின் வியர்வை பற்றிமுடங்குதலின் சோர்வல்ல
கால்ப்பந்தாட்டத்தின் வியர்வை பற்றி//
இந்த கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். இந்த கவிதையின் புரிதல் முழுக்கவும் அந்த வரிகளில் இருப்பதாக நம்புகிறேன். திரும்ப திரும்ப அசைபோடுகிறேன்.
உங்கள் முந்தைய கவிதையின் இன்னொரு முகமாக மலர்கிறது இந்த கவிதை
துர்ர்ந்துபோகாத ஒரு மனவெளியை மௌனங்களின் வாசனையோடு நிரப்புகிறது இக்கவிதை. எந்தப் படைப்பும் அதன் பிரும்மாண்டங்களைத் தாண்டிய நம்பிக்கையை அழுந்தப் பற்றியிருக்கவேண்டும். நான் உங்கள் கவிதையைப் பற்றுகிறேன். விலகிப்போதல் என்பதுவே ஒட்டியிருத்தலின் சரியான பயிற்சியில்லை என்பதுதானே. நிழலின் அடையாளம் என்பது பரந்த வெளிச்சத்தினால்தான் சாத்தியம். இவ்வாண்டின் நல்ல தொடக்கமான ஒரு ஜீவனுள்ள கவிதை சுந்தர்ஜி.
"அறைகளின் நிசப்தத்தை விடவும்
இலையசையும் வெளி பற்றி. "
Brlliant!
excellent thought, sir! a very nice take on the subject...
நன்று
anpin suntharji.
really it is a fantastic
poem.hats off.suntharji.
உறவின் எதிர்நிலையில்லை துறவு,
அதன் உயர்நிலை தான் துறவு என்பதை
இலகுவாய் புரிய வைத்துவிட்டீர்கள்.
இந்த இலகு பதத்திற்கு வர எவ்வளவு
கடினங்களைக் கடந்திருப்பீர்கள் !
Class!
இந்தப் படத்தைப் பார்த்ததும்
லிட்டில் புத்தாவும்,லாஸ்ட் எம்பரரும்
ஞாபகத்திற்கு வருகின்றன.
துறவு என்பதே துறந்தபின்னும் வாழ்வதுதானே.ஆனால் துறந்ததாகச் சொல்பவர்களெல்லாம் துறவிகளும் அல்ல !
ஓடிப் போவதல்ல துறவு.
தேடி வருவது அது.
இன்று துறவிகளிடம்
புன்னகையை பார்ப்பது
அரிதாகி விட்டது.
இறுக்கம் அல்லது
இளக்காரம்
இரண்டில் ஒன்றாய்த்தான்
இருக்கிறது
துறவிகளின் சிரிப்பு.
உங்கள் துறவியின்
புன்னகை
புதிய நம்பிக்கையை
தருகிறது.
விடைபெறாது
வரவேற்று.
இந்தத் துறவிகளோடு ஈழத்தமிழருக்கு நெருக்கம் அதிகம் சுந்தர்ஜி.
ஆசைகளைத் துறந்துவிட்டதாய் சொல்லிக்கொண்டு மஞ்சள் ஆடையில் அரசியலுக்குள்ளும் புகுந்து அநியாயம் அதிகாரம் பண்ணும்
பி(து)றவிகள் !
கருத்துரையிடுக