22.9.12

மனிதர்களின் வேடிக்கையான குணம் - பாவ்லோ கோயெலோ- 1-


பாவ்லோ கோயெலோ. ( Paulo Koelho ) 

ப்ரஸில் நாட்டில் பிறந்து ’ரியோ-ஜி-ஜனையோ’ வில் வசிக்கும் போர்ச்சுக்கீசிய மொழியில் சாகசங்கள் புரியும் அற்புதமான எழுத்தாளர். என் எழுத்தின் வேர்களை இவரிடமும் நான் பெற்றதுண்டு. இவரின் இடது கண் லேசான கவர்ச்சி.

அவரின் ”அல்கெமிஸ்ட்” உலகத்தையே இவர் பக்கம் திருப்பியது. வாசிக்காதவர்கள் தயவு செய்து வாசிக்கவும். தமிழில் "ரசவாதி" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுதும் அதிகம் பேர்களால் வாசிக்கப்படும் எழுத்தாளர் நல்ல எழுத்தை எழுதுபவராக இருக்க முடியாது என்ற சூத்திரத்தை மறுபடியும் உடைத்த மற்றுமொரு எழுத்தாளர்.

இவரின் மற்ற புத்தகங்கள்- The Pilgrimage, The Valkyries, By the River Piedra I Sat Down and Wept, The Fifth Mountain, Veronika Decides to Die, The Devil and Miss Prym, Manual of theWarrior of Light, Eleven minutes, The Zakir.

அவரின் ”நீந்தும் நதியைப் போல” ( Like the Flowing River ) என் தினசரிக் கொறித்தலுக்கு கையெட்டும் தொலைவிலேயே வைத்திருக்கும் ஒரு புத்தகம். இதன் வடிவம் எனக்கு மிகவும் பிடித்தமானது. நான் ஃபிக்‌ஷனல் உரைநடை என் விருப்பங்களில் ஒன்று.

இனி அவரின் “நீந்தும் நதியைப் போல” தரும் அனுபவங்களை உங்களுக்காக மொழிபெயர்க்கலாம் என்று தோன்றியது.

நேரம் வாய்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு தலைப்பு.

மனிதர்களின் வேடிக்கையான குணம்:

ஒரு மனிதன் என் நண்பன் ஜேம் கோஹெனிடம் கேட்டான்:

“மனிதர்களின் குணாதிசயங்களிலேயே விசித்ரமானது எது?”

கோஹென் சொன்னான்:

“ நம்முடைய முரண்பாடுகள்தான்.

சின்ன வயதில் வளர மிகவும் அவசரப்படுவோம்.

வளர்ந்தபின், இழந்துபோன பிள்ளைப் ப்ராயத்தை நினைத்து ஏங்குவோம்.

பணம் சம்பாதிக்க நமது நலத்தை வருத்திக்கொள்வோம்.

சம்பாதித்தபின் அது முழுவதையும் நம் உடல்நலத்தைச் சரி செய்து கொள்வதற்காகச் செலவிடுவோம்.

சதாகாலமும் எதிர்காலத்தைப் பற்றியே யோசித்து நிகழ்காலத்தைத் துறந்து விடுவோம்.

ஆக நமக்கு நிகழ் காலமும் தெரியாது. எதிர்காலமும் புரியாது.

வாழும்போது ஒருபோதும் இறக்கப் போவதில்லை என்பது போல வாழ்கிறோம்.

சாகும்போதோ ஒரு நாளும் வாழாதிருந்து விட்டது போல செத்துப் போகிறோம்.”

6 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

நல்ல புத்தகம், தமிழில் வந்துவிட்டதா? எப்படி பெயர்த்திருக்கிறார்கள் பார்க்க வேண்டும்.

சுந்தர்ஜி சொன்னது…

தெரியவில்லை அப்பாதுரை.

இது என்னுடைய மொழிபெயர்ப்பு.முழுவதுமாய் பெயர்க்க ஆசை.

இந்த புத்தகத்தின் முன்னுரை ரொம்ப ஸ்பெஷல். குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது.

G.M Balasubramaniam சொன்னது…


ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல்க் கொடுத்திருக்கிறீர்கள். நன்றாகவே இருக்கிற்து.சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

வாழும்போது ஒருபோதும் இறக்கப் போவதில்லை என்பது போல வாழ்வோம்.

சாகும்போதோ ஒரு நாளும் வாழாதிருந்து விட்டது போல சாகிறோம்.”

படிக்கணுமே

Nagasubramanian சொன்னது…

எங்கோ நானும் இந்த முரணைப் படித்திருக்கிறேன். அதை எனது டைரியிலும் குறிப்பெடுத்து வைத்திருந்தேன்.

சக்தி சொன்னது…

ஆஹா அற்புதமான தொடக்கம் ...தொடருங்கள் காத்திருக்கிறேன்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...