24.8.13

பாராட்டுக்கள் கதிர்பாரதி.

வாழ்த்துக்கள் கதிர்பாரதி. இந்த விருது  எதிர்பார்த்ததும், எதிர்பாராததும்.   

கடந்த ஆண்டு கதிர்பாரதி எழுதிக்கொண்டிருந்த கவிதைகளைக் கையெட்டும் தொலைவில் பார்த்தும், எல்லோருக்கும் முன் அவற்றைச் சிலாகித்துக் கொண்டுமிருந்தவன் நான். வியப்பான வடிவத்திலும், மொழியிலும் அமைந்திருந்தன அவை.

"மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" என்ற கவிதைத் தொகுதியையும் உடனே வெளியிட்டு அதை எல்லா வட்டங்களிலும் பரவலான பார்வை பெறவும் கடும் முயற்சிகள் செய்தார்.

அந்தப் பரபரப்புகள் ஓய்ந்து அடங்கு முன் அவரின் முயற்சிகளுக்கு இந்திய அரசின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான சாஹித்ய அகாதமியின் "யுவ புரஸ்கார் விருது" கதிர் பாரதிக்கு அவர் எழுதிய முதல் நூலுக்குக் கிடைத்திருக்கிறது.

முத்துவீரக்  கண்டியன்பட்டி எனும் ஒரு பின்னடைந்த தஞ்சையின் கிராமத்திலிருந்து தலைநகரத்தில் அமர்ந்து விடாப்பிடியான உத்வேகத்துடன் அருமையான கவிதைகள் எழுதிய கைகளுக்கு குர் ஆனில் சொல்லியபடி வியர்வை காயும் முன் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்.

இந்தப் பரிசுக்குத் தேர்வு செய்த நடுவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

இந்த விருது கதிருக்கு ஒரு பற்று கோல். இன்னும் அதிகமான தொலைவுகளையும், விருதுகளையும் கடக்க அவருக்கு இது உற்சாகம் அளிக்கட்டும். அவர் போன்ற இளைஞர்களுக்கும் இது ஓர் வழிகாட்டியாக இருக்கட்டும். 

3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கதிர்பாரதிக்கு வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//முத்துவீரக் கண்டியன்பட்டி எனும் ஒரு பின்னடைந்த தஞ்சையின் கிராமத்திலிருந்து தலைநகரத்தில் அமர்ந்து விடாப்பிடியான உத்வேகத்துடன் அருமையான கவிதைகள் எழுதிய கைகளுக்கு குர் ஆனில் சொல்லியபடி வியர்வை காயும் முன் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்.//

திரு. க்திர்பாரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

தங்களின் பகிர்வுக்கு ந்ன்றிகள்.

நிலாமகள் சொன்னது…

மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் (மறுபடி மறுபடி) மகிழ்ச்சி ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...