3.2.12

அமெரிக்கா போகும் ரயில்


ரயில்
எந்த ஊருக்குப்
போகுது?

அமெரிக்காவுக்கு.
நீ வரியா?

டிக்கெட் எவ்ளோ?

நெறைய ரூவா.

எப்போ போகும்?

ம்ம்..நேத்திக்கு.

சரி. எனக்கு டிக்கெட் தா

கூழாங்கல்லை
நீட்டியது குழந்தை.

இலையைக் கிழித்துக்
கொடுத்தது
மற்றது.

ரயில் புறப்பட்டது
அமெரிக்காவுக்கு.

அமெரிக்கா
போய்க்கொண்டிருக்கும்
பாதி வழியிலேயே
அம்மா கூப்பிட்டாள்
சாப்பிட.

’ரயில் இங்கியே
நிக்கட்டும்.
சாப்ட்டு வந்து
அமெரிக்கா போலாம்’.

கூழாங்கல்லோடும்
இலையோடும்
குட்டிகள்
ஓடிப் போக

ஏக்கத்துடன்
காத்து நின்றது
ரயிலும்
அமெரிக்காவும்.

7 கருத்துகள்:

க ரா சொன்னது…

அருமை சுந்தர்ஜி :)))

Vel Kannan சொன்னது…

அட ... போடவைக்கிறது இறுதி வரி
குழந்தை என்றால் குல தெய்வமும் காத்திருக்க வேண்டியது தான்.

ப.தியாகு சொன்னது…

//எப்போ போகும்?

ம்ம்..நேத்திக்கு//
வேறென்ன வேண்டும் சுகம்!
குழந்தைகளின் பாஷையே அலாதிதான்.
நைஸ் சுந்தர்ஜி சார்.

manichudar சொன்னது…

கணிணி உலகில் வாழும் சமர்த்துக் குழந்தைகளிடையே மறைந்துப் போன குழந்தைமையை ரசிக்க வாய்த்த கவிதை.

சக்தி சொன்னது…

அந்த ரயில் எப்போ கிளம்பும்!நேரம் சொல்லுங்க .எனக்கும் ஒரு டிக்கெட் போடணும்

நிலாமகள் சொன்னது…

அந்த‌ நான்கு குழ‌ந்தைக‌ளும் அவ‌ர்க‌ள‌து ர‌யில் விளையாட்டும் த‌ங்க‌ள் க‌விதை வ‌ரிக‌ளும் ச‌ற்றும் ச‌ளைத்த‌த‌ல்ல‌ அழ‌கிய‌ல் ர‌ச‌னையோடான‌ குழ‌ந்தைமை நிறைவுக்கு!

வ‌ண்ண‌தாச‌ன் ப‌க்க‌த்தில் த‌ங்க‌ள் ப‌திவு இரு ஆசான்க‌ள் க‌ண்டு ம‌கிழ்வு.

http://vannathasan.wordpress.com/2012/02/03/

ரிஷபன் சொன்னது…

மழலை ரயில் மனசைக் கவ்வுகிறது

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...