24.2.12

வற்றாத குளம்


”நாம எங்க போறோம்”
”வெளீல போறோம்”
”வெளீல எங்க?”
:”குளத்துக்கு”
”ஏன் குளத்துக்கு?”
“ குளத்துல மீனைப் பாக்கலாம்”
“ஏன் மீனைப் பாக்கணும்?”
”சரி. வாத்தைப் பாப்போம்?”
“ஏன் வாத்தைப் பாக்கணும்?”
“ம்.ம்.வாத்தைப் பாத்தா ..
 சந்தோஷமா இருக்கும்”
”ஏன் சந்தோஷமா இருக்கணும்?”

சிரித்தபடி
குழந்தை
கேள்விகளைப் பிடித்து
மேலேறிக்கொண்டிருக்க
விழி பிதுங்கும்
பதில்களில்
ஆனந்தமாய்
சறுக்கி
கீழிறங்கிக் கொண்டிருந்தேன்
நான்.

10 கருத்துகள்:

சக்தி சொன்னது…

ஏற்றமும் இறக்கமும் கூட ..குழந்தைக்கில்லை
நமக்குத்தான்..

Vel Kannan சொன்னது…

எனது சொந்த அனுபவம் போல் இருக்கிறது ஜி
//சறுக்கி கீழிறங்கி// ஆனால் இதில் அலாதி சந்தோஷம் இருக்கு ஜி

G.M Balasubramaniam சொன்னது…

வற்றிய குளம் ! உங்கள் கற்பனைக் குளம் என்றும் வற்றாது சுந்தர்ஜி.தற்போதெல்லாம் குழந்தைகள் உள்ளத்தில் குடி வந்திருக்கிறீர்கள் போலத் தோன்றுகிறது. எல்லாம் இன்ப மயம்தான்.GOOD.

ரிஷபன் சொன்னது…

நம்மை நமக்கு அறிமுகப்படுத்துவது குழந்தைகள் தான் !

நிலாமகள் சொன்னது…

அலாதி அழ‌குதான் குழ‌ந்தைக‌ள்... அவ‌ர்க‌ளின் கொஞ்சு ம‌ழ‌லைக‌ள்! அவ‌ர்க‌ளின் சிந்தை கூர்மைக்கு எதிரில் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை.

vasan சொன்னது…

ச‌ந்தோசமென்ப‌து நாம் பார்ப்‌ப‌திலில்லையோ,
நம்மையே பார்ப்ப‌திலா?
இது கேள்வியா? ப‌திலா?

அப்பாதுரை சொன்னது…

விளம்பரம் பிரமாதம்! (செய்தி சொன்ன விதத்துல செய்தி தொலைஞ்சு போச்சுனும் தோணுது..)

கீதமஞ்சரி சொன்னது…

திருவிழாக்களில் வேடிக்கைப் பார்க்கக் குழந்தைகளைத் தோள்மேல் ஏற்றிக்கொள்ளும்போது வலிபற்றி துளியும் யோசிப்பதில்லை. இன்றும் கேள்விகள் பிடித்து மேலேறும் குழந்தை கண்டு, சறுக்கலில் ஆனந்தமடையும் பித்துமனம். அழகா யோசிக்கிறீங்க. பாராட்டுகள்.

கூகிள்சிறி .கொம் சொன்னது…

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

பத்மா சொன்னது…

ஹையா

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...