9.11.12

அக்ஷீப்யாம் தே ஸூக்தம் - நிவாரணத்தின் ஆதிவேர்.

”இப்போது உனக்கு ஆச்சர்யமானதொரு விஷயம் சொல்கிறேன். உங்களுள் யாராவது நோயுற்றிருந்தால், அவரோ மற்றவரோ நோயுற்றவரைத் தன் மனத்தில் நினைக்க வேண்டும். அவர் நலமாக உள்ளார் என்று மனத்திற்குள் உறுதியாகச் சொல்ல வேண்டும்; திடமாக பாவனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர் விரைவில் குணமடைவார். இதை அவருக்குத் தெரியாமலே நீ செய்யலாம். உங்களுக்கிடையே ஆயிரம் மைல் தூரம் இருந்தாலும் சரி; இதை நினைவில் வைத்துக்கொள். இனிமேல் உடல்நலம் குன்றவிடாதே”.

மேலே மேற்கோட்களுக்கு மத்தியில் இருப்பவை விவேகானந்தரால் தமது சகோதரத் துறவி ஸ்வாமி சாரதானந்தருக்கு எழுதப்பட்டவை.

”நாம் நோயற்றவ்ர்கள். என் நோய்கள் எல்லாம் விலகிவிட்டன” என்று மீண்டும் மீண்டும் மனதிற்குச் சொல்வதன் மூலம் நோயை விரட்டிவிட முடியும். இன்றைக்கு விஞ்ஞானம் இதை சுய தூண்டுதல் (Auto Suggestion) என்று சொல்லுகிறது.

”அக்ஷீப்யாம் தே ஸூக்தம்” ரிக் வேதத்தின் ஒரு பகுதியைச் சார்ந்தது. (ரிக் வேதம் 10.163). இதன் மொழிபெயர்ப்பையும் அதன் மூலத்தையும் இன்றைக்கு நாம் பார்க்கலாம். காலங்களைக் கடந்த நம் வேதங்களின் அக்கறை எப்படிப்பட்ட நாகரீகம் சார்ந்ததாய் இருந்திருக்கின்றது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த ஸூக்தம்.

அக்ஷீப்யாம் தே ஸூக்தம்.
=====================

1.
ஓம் அக்ஷீப்யாம் தே நாஸிகாப்யாம் கர்ணாப்யாம் சுபுகாததி
யக்ஷ்மம் சீர்ஷண்யம் மஸ்திஷ்காத் ஜிஹ்வாயா விவ்ருஹாமி தே

உனது கண்களிலிருந்து, மூக்கிலிருந்து, காதுகளிலிருந்து, கன்னத்திலிருந்து, தலையிலிருந்து, மூளையிலிருந்து, நாக்கிலிருந்து நோயை விரட்டுகிறேன்.

2.
க்ரீவாப்யஸ்த உஷ்ணிஹாப்ய: கீகஸாப்யோ அனூக்யாத்
யக்ஷ்மம் தோஷண்ய (அ) மம்ஸாப்யாம் பாஹூப்யாம் விவ்ருஹாமி தே

உனது கழுத்திலிருந்து, தலையிலிருந்து, எலும்புகளிலிருந்து, மூட்டுகளிலிருந்து, தோள்களிலிருந்து, கைகளிலிருந்து, முன் கைகளிலிருந்து நோயை விரட்டுகிறேன்.

3.
ஆந்த்ரேப்யஸ்தே குதாப்யோ வனிஷ்டோர் ஹ்ருதயாததி
யக்ஷ்மம் மதஸ்னாப்யாம் யக்ன: ப்லாசிப்யோ விவ்ருஹாமி தே

உனது குடலிலிருந்து, குதத்திலிருந்து, அடிவயிற்றிலிருந்து, இதயத்திலிருந்து, சிறுநீரகங்களிலிருந்து, கல்லீரலிலிருந்து, வயிற்றிலுள்ள உறுப்புக்களிலிருந்து நோயை விரட்டுகிறேன்.

4.
ஊருப்யாம் தே அஷ்டீவத்ப்யாம் பார்ஷ்ணிப்யாம் ப்ரபதாப்யாம்
யக்ஷ்மம் ச்ரோணிப்யாம் பாஸதாத்பம்ஸஸோ விவ்ருஹாமி தே

உனது தொடைகளிலிருந்து, மூட்டுகளிலிருந்து, குதிகால்களிலிருந்து, அடிக்கால்களிலிருந்து, இடுப்புப் பகுதிகளிலிருந்து, பின்புறங்களிலிருந்து, உள்ளுறுப்பிலிருந்து நோயை விரட்டுகிறேன்.

5.
மேஹனாத்வனம் கரணால்லோம ப்யஸ்தே நகேப்ய:
யக்ஷ்மம் ஸர்வமாதாத்மனஸ்தமிதம் வி வ்ருஹாமி தே

உனது பிறப்புறுப்பிலிருந்து, சிறுநீர்ப்பையிலிருந்து, முடியிலிருந்து, நகங்களிலிருந்து, உன்னுள்ளேயுள்ள எல்லா அவயவங்களிலிருந்தும் நோயை விரட்டுகிறேன்.

6. அங்காதங்கால்லோம்னோ லோம்னோ ஜாதம் பர்வணி பர்வணி
யக்ஷ்மம் ஸர்வஸ்மாதாத்மனஸ்தமிதம் விவ்ருஹாமி தே

உனது ஒவ்வோர் அங்கங்களிலிருந்தும், ஒவ்வொரு முடியிலிருந்தும், நோய் தோன்றுகின்ற ஒவ்வொரு மூட்டிலிருந்தும், உனது எல்லா அவயவங்களிலிருந்தும் நோயை விரட்டுகிறேன்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

*************

சாதகமான நம்பிக்கையால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தும் வேதங்களின் குரல் உரத்து ஒலிக்கிறது.

இதுபோலவே அபூர்வமான நாஸதீய ஸூக்தம், பூமி ஸூக்தம், பிக்ஷூ ஸூகதம், ஸம்மனஸ்ய ஸூக்தம், ராத்ரி ஸூக்தம், கால ஸூக்தம் போன்ற ஒவ்வொன்றும் வாழ்வின் மேன்மைக்கு மாவிலைத் தோரணங்களாய்க் காலமெல்லாம் அசைகின்றன.

அவற்றைப் பற்றியும் தனித்தனி இடுகைகளில் மற்றுமொரு நாளில்.

8 கருத்துகள்:

பி சுவாமிநாதன் சொன்னது…

இன்று ஒரு நல்ல தகவல்

அனைவருக்கும் பயன்படும். நன்றி.

எஸ்.கே. சொன்னது…

வேத மந்திரங்களை அதன் கிரமமான ஸ்வரத்துடன் ஒலிக்க (ஓத) வேண்டும். மேலும் அவை சமஸ்கிருதத்தில் (தேவநாகரி அல்லது கிரந்தம்) அமைந்திருந்தால்தான் உச்சரிப்பு சரியாக இருக்கும்.

ஆர்.கே. சொன்னது…

இதை இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் வேதா வாத்யார் சொல்லி கொடுத்தார்.

தினமும் தவறாமல் படம் செய்ய சொன்னார்.

அடிக்கடி சொல்கிறேன்.இனி தினமும் சொல்லவேண்டும்.

க்ரேஸி மோகன் சொன்னது…

நோய்நாடி நோய்முதல் நாடி நலிந்திடாது
போயோடி ரிக்வேதப் பாடலை -வாய்மூடி
வேண்டி ஜபித்து, வெகுதூரம் துஷ்டனாம்
தீண்டிய நோயைத் துரத்து"

சே. குமார் சொன்னது…

நல்ல தகவல் பகிர்வு,
பகிர்வுக்கு நன்றி அண்ணா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு பயன் தரும் தகவல்...

நன்றி...

vasan சொன்னது…

இந்த‌ப் பாடத்தைத் தான் பைவ் ஸ்டார் ஹோட்ட‌லில்
ஹால் புக் ப‌ண்ணி, மூன்று தின‌ங்க‌ள் 'மைண்ட் க‌ன்ட்ரோல்'
என்ற‌ பேனரில் சில‌ ஆயிர‌ங்க‌ளை வாங்கிக் கொண்டு அமெரிக்கார‌ன்
சொன்ன‌துன்னு சொல்லி வியாப‌ர‌ம் ப‌ண்ணுகிறார்க‌ள்.

அப்பாதுரை சொன்னது…

interesting.. சைனாவில் இது போல் ஒரு healing பயிற்சி செய்கிறார்கள்.

க்ரேசி மோகனுக்கு தடுக்கி விழுந்தா வெண்பா வருதே?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...