26.8.13

சுபாஷிதம் - 9

161.
அஷ்வப்லவம் சாம்புதகர்ஜனஞ்ச ஸ்த்ரீணாஞ்ச சித்தம் புருஷஸ்ய பாக்யம்
அவர்ஷணஞ்சாப்யதிவர்ஷணஞ்ச தேவோ ந ஜானாதி குதோ மனுஷ்ய:

குதிரையின் துள்ளலையும், மேகங்களின் முழக்கத்தையும், பெண்களின் மனதையும், ஆண்களின் பேற்றையும், மழையின் குறைநிறையையும் கடவுளும் அறியமாட்டார். பின் ஒரு மனிதன் எப்படி அறிவான்?

162.
ச்ரேயஸ்ச ப்ரேயஸ்ச மனுஷ்யமே தஸ்தௌ, ஸம்பரீத்ய விவிநக்தி தீர:
ச்ரேயோ ஹி தீரோபி ப்ரேயஸோ வ்ருணீதே ப்ரேயோ மந்தோ யோகக்ஷேமா வ்ருணீதே
-கடோபநிஷத்.

புனிதமானது, விருப்பமானது என இரு பாதைகள் பூமியில் விரிந்து செல்ல, ஞானியானவன் பிரியமானதை விட்டுப் புனிதமானதை பற்றிச் செல்வான்.    
-கடோபநிஷதம் 

163.
மத்ரஸ்ய மா சக்ஷுஷா ஸர்வாணி பூதானி ஸமீக்ஷந்தாம்
மித்ரஸ்யாம் சக்ஷுஷா ஸர்வானி பூதானி ஸமீக்ஷே
மித்ரஸ்ய சக்ஷுஷா ஸமீக்ஷாமஹே 
-யஜுர்வேத

இவ்வுலகின் சகல உயிர்களும் நட்பால் கனிந்த பார்வை கொண்டு எனைக் காண, நானும் அப்படியே அதைப் பிரதிபலிப்பேன்.
-யஜுர்வேதம்

164.
ச்ருயதாம் தர்மஸர்வஸ்வம் ச்ருத்வா சைவாவதார்யதாம்
ஆத்மன: ப்ரதிகூலானி பரேக்ஷாம் ந சமாசரேத்.

தர்மத்தின் சாரத்தைக் கேட்டு மனதில் இருத்திக் கொள்ளுங்கள். நமக்கு எது சாதகமற்றதோ, அதைப் பிறருக்குச் செய்யாதிருப்போமாக.

165.
இந்த்ரம் மித்ரம் வருணமக்னிமாஹுரதோ திவ்ய: ஸ ஸுபர்ணோ கருத்மான்
‘ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ அக்னிம் யமம் மாதரிஷ்ரவானமாஹு:

ஞானிகள் ஒரே மெய்ப்பொருளின் வெவ்வேறு தோற்றங்களை இந்திரன், சூரியன், வருணன், அக்னி, கருடன், காலன், வாயு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.


166.
ஆதித்யசந்த்ராவனிலோனலஷ்ச்சதௌர்பூமிராபோ ஹ்ருதயம் யமஷ்ச்ச
அஹஷ்ச்ச ராத்ரிஷ்ச்ச உபேச ஸந்தயே தர்மோபி ஜானாதி நரஸ்ய வ்ருத்தம் 
-மஹாபாரத்

சூரியனும், சந்திரனும், காற்றும், நெருப்பும், ஆகாயமும், பூமியும், நீரும், இதயமும்,  காலனும், உதய அஸ்தமனங்களும், தர்ம தேவதையும் மனிதர்களின் செயல்களைச் சாட்சிகளாகக் கண்டு கொண்டிருக்கின்றன. 
 -மஹாபாரதம்.   

167.
பூர்வஜன்மக்ருதம் கர்ம தத் தைவமிதி கத்யதே
தஸ்மாத் புருஷகாரேண யத்னம் குர்யாததந்த்ரித:  
-ஹிதோபதேஷ

முற்பிறப்பின் வினைகள் நம் கையை மீறிய தெய்வாதீனமாக இருப்பினும், இப்பிறப்பின் அயராத கடும் முயற்சியால் வெல்லப் படவேண்டும். 
​-ஹிதோபதேசம்.  

168.
ஷட தோஷா: புருஷேணேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா 
நித்ரா தந்த்ரா பயம் க்ரோத: ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா 
-பஞ்சதந்த்ரா

ஒருவன் வாழ்வில் வளம் பெறப் பின்வரும் ஆறு தோஷங்களை நீக்க வேண்டும்.உறக்கம், அசிரத்தை, அச்சம், முன்கோபம், சோம்பேறித்தனம், ஒத்திப்போடும் தன்மை. 
-பஞ்ச தந்திரம்

169.
யே கேசித் துக்கிதா லோகே ஸர்வே தே ஸ்வஸுகேச்சயா
யே கேசித் ஸுகிதா லோகே ஸர்வே தேன்யஸுகேச்சயா

தன்னுடைய மகிழ்ச்சிக்காக ஏங்குபவர்களைக் காலமெல்லாம் துயர் பீடிக்க, பிறர் நலனுக்காகத் துயரடைபவர்களை மகிழ்ச்சி தயக்கமின்றித் தழுவுகிறது.    

170.
அப்தி: காத்ராணி ஷுத்யந்தி மன: ஸத்யேன ஷுத்யதி
வித்யாதபோப்யாம் பூதாத்மா புத்திர்ஞானேன ஷுத்யதி 
-மநு ஸ்ம்ருதி

புற உறுப்புகள் நீராலும், மனம் நேர்மையாலும், ஆன்மா கல்வி மற்றும் தவத்தாலும், அறிவு ஞானத்தாலும் தூய்மையடைகிறது.  
-மநு ஸ்ம்ருதி

171.
அபிவாதனஷீலஸ்ய நித்யம் வ்ருத்தோபஸேவின:
சத்வாரி தஸ்ய வர்தந்தே ஆயுர்வித்யா யஷோ பலம்

முதியவர்களைப் பணிந்து மரியாதை செலுத்துபவர்களின் வாழ்வில் ஆயுள், கல்வி, வெற்றி, வலிமை என்னும் நான்கு செல்வங்கள் பெருகுகின்றன.


172.
ஷட் குணா: புருஷேணேஹ: த்யக்தவ்யா ந கதாசன:
ஸத்யம் தானம் அநாலஸ்யம் அநஸூயா க்ஷமா த்ருதி:

ஒருவன் வாய்மை, தானம், சுறுசுறுப்பு, பொறாமையின்மை, சகிப்புத்தன்மை, உறுதி என்னும் ஆறு குணங்களையும் ஒரு போதும் கைவிடக்கூடாது.

173.
சாயாமன்யஸ்ய குர்வந்தி ஸ்வயம் திஷ்டந்தி சாதபே
ஃபலான்யபி பரார்தாய வ்ருக்ஷா: ஸத்புருஷா இவ

தான் வெயிலில் காய்ந்த போதும் நிழலும் கனியும் தனக்கன்றிப் பிறர்க்கென வாழும் மரங்கள் புனிதர்களை ஒத்தவை.

174.
பாத்ரே த்யாகீ குணே ராகீ ஸம்விபாகீ ச பந்துஷு
ஷாஸ்த்ரே போத்தா ரணே யோத்தா ஸ வை ’புருஷ’ உச்யதே

பாத்திரமறிந்து கொடுப்பவனும், பிறரின் நிறைகளைக் காண்பவனும், சுகதுக்கங்களை நண்பர்களுடன் பகிர்பவனும், மெய்ஞ்ஞான அறிவை விடாது கற்பவனும், போர்முனையில் முன்னிற்பவனுமே ஆண்மகன்.  

175.
சுசித்வம் த்யாகிதா சௌர்யம் ஸாமான்யம் ஸுகதுகயோ:
தாக்ஷிண்யஞ்சானுரக்திஷ்ச ஸத்யதா ச ஸுஹ்ருத்குணா:

தூய்மை, தாராள மனம், தியாகம், இன்பதுன்பங்களில் சமநிலை, பணிவு, அன்பு, வாய்மை இவையே ஒரு உண்மையான நண்பனின் குணம்.

[ இக்குணமுள்ளவர்களைத் தேடி நண்பர்களாக்குதல் அல்ல இதன் உட்பொருள். இவை அனைத்தும் நம் ஒவ்வொருவரிடமும் அமையுமானால் நாம் பிறரின் நண்பனாகி விடலாம்.]    

176.
ஆதானஸ்ய ப்ரதானஸ்ய கர்தவ்யஸ்ய ச கர்மண:
க்ஷிப்ரம் அக்ரியமாணஸ்ய கால: பிபதி தத்ரஸம்
-ஹிதோபதேஷ

பிறருக்குச் செய்ய வேண்டியதாயினும் , உங்களுடையதாயினும் பணியைக் குறித்த காலத்திற்குள் முடிக்காவிடில், பலனின் ரசத்தைக் காலம் பருகி மறைந்து விடும்.  
-ஹிதோபதேசம் 

177.
மா வனம் சிந்தி ஸவ்யாக்ரம் வ்யாக்ரா: நீனஷன் வனாத்
வனம் ஹி ரக்ஷ்யதே வ்யாக்ரௌ: வ்யாக்ரான் ரக்ஷதி கானனம்
-மஹாபாரத்

புலிகள் உலவும் வனத்தையும், புலிகளையும் அழிக்காதீர்; புலிகளை வனமும், வனத்தைப் புலிகளும் பரஸ்பரம் காக்கின்றன.
-மஹாபாரதம் 

178.
ந து அஹம் காமயே ராஜ்யம் ந ஸ்வர்கம் ந அபுனர்பவம்
காமயே துக்க தப்தானாம் ப்ராணினாம் ஆர்தினாஷனம்
-பாகவத

"ஆள்வதற்கு ஓர் அரசோ, அனுபவிக்க சொர்க்கமோ, வீடுபேறோ எனக்கு வேண்டாம்; என் ஒரே வேண்டுதல் உலகெலாம் துயருறும் உயிர்களின் வாதையை நீக்கு இறைவா என்பதுதான்."      
-பாகவதம்

[ பாகவதத்தில் ரந்தி தேவன் எனும் மன்னன் இறைவனிடம் வைத்த பிரார்த்தனை இது. இதே ச்லோகம் பாரதத்தில் த்ரோணபர்வத்தில் இடம்பெற்றிருக்கிறது.]

179.
லக்ஷ்மீ சந்த்ராத் அபேயாத் வா ஹிமவான் வா ஹிமம் த்யஜேத்
அதீயாத் ஸாகரோ வேலாம் ந ப்ரதிக்ஞாம் அஹம் பிது:

"நிலவின் ஒளி மறையலாம்; இமயத்தின் பனி கரையலாம்; கடல் தன் மட்டத்தை மீறலாம்; என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்கு ஒருபோதும் மாறாது." 

[பதினான்கு ஆண்டுகள் வனவாசம் கிளம்ப எத்தனிக்கும் போது ஸ்ரீ. ராமன் உதிர்த்த அமுத மொழி இது.]

180.
தீபோ பக்ஷ்யதே த்வாந்தம் கஜ்ஜலம் ச ப்ரஸூயதே
யாத்ரஷம் பக்ஷயேதன்னம் ஜாயதே தாத்ரஷீ ப்ரஜா

ஒளிரும் விளக்கு இருளைத் தின்பதால் கரும் புகையை வெளியிடுகிறது; எதை உண்கிறோமோ அதைப் போலத்தான் விளைவும்.

4 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

தர்மத்தின் சாரத்தைக் கேட்டு மனதில் இருத்திக் கொள்ளுங்கள். நமக்கு எது சாதகமற்றதோ, அதைப் பிறருக்குச் செய்யாதிருப்போமாக.

அருமை...

சுபாஷிதம் அறியவில்லை என்றாலும் இப்போது உங்களது விளக்கக் கருத்துக்களைப் படித்து தெரிந்து கொண்டோம் சுபாஷிதத்தின் அருமையை....

அப்பாதுரை சொன்னது…

ரந்தி தேவன் ஆச்சர்யம்.

எங்கே போகிறீர்கள் நண்பரே?

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நன்றி குமார். நானும் அப்படியே உணர்கிறேன்.

நன்றி அப்பாதுரை. உங்கள் அருகில் நெருங்குகிறேன்.

லட்சக் கணக்கான சுபாஷிதங்களில் ஒரு 400ன் தேர்ந்தெடுத்த தொகுப்பு கையில். பொக்கிஷமாய் உணர்ந்தேன்.பாதிக் கிணறு தாண்டி அந்தரத்தில்.

நிலாமகள் சொன்னது…

தூய்மை, தாராள மனம், தியாகம், இன்பதுன்பங்களில் சமநிலை, பணிவு, அன்பு, வாய்மை இவையே ஒரு உண்மையான நண்பனின் குணம்.

[ இக்குணமுள்ளவர்களைத் தேடி நண்பர்களாக்குதல் அல்ல இதன் உட்பொருள். இவை அனைத்தும் நம் ஒவ்வொருவரிடமும் அமையுமானால் நாம் பிறரின் நண்பனாகி விடலாம்.]

விளக்கம் வெகு அருமை.

லட்சக் கணக்கான சுபாஷிதங்களில் ஒரு 400//

அம்மாடி! கையளவில் கசிந்ததை ருசித்ததே சிலாகிப்பு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...