4.9.13

சுபாஷிதம் -11


201.
ந ஜாது விஷயா: கேபி ஸ்வாராமம் ஹர்ஷயன்த்யமீ 
ஸல்லகீபல்லவப்ரீதமிவேபம் நிம்பபல்லவா:
-அஷ்டாவக்ர கீதை-17-3

ஈச்சங் குருத்துண்டு களிக்கும் யானையை வேப்பிலை மகிழ்விக்காது. அதுபோல தன்னுள்ளே உவப்பவனை இவ் விஷயங்கள் எவையும் என்றும் களிப்பூட்டாது.  

202.
சாந்தானி பூர்வ ரூபாணி சாந்தம் நோ அஸ்து க்ருதாக்ருதம் 
சாந்தம் பூதம் ச பவ்யம் ச சர்வமேவ சமஸ்து ந:
-சாந்தி ஸுக்தம் 

முற்பிறவி வினைகள் அமைதியாக இருக்கட்டும். செய்தவையும், செய்யாதவையும் நமக்கு அமைதியைத் தரட்டும். கடந்த, எதிர்கால வாழ்க்கையும் அமைதியாக இருக்கட்டும். எல்லாமே நமக்கு அமைதியைத் தரட்டும்.

203.
விரக்தோ விஷயத்வேஷ்டா ராகி விஷயலோலுப:
க்ரஹமோக்ஷவிஹீனஸ்து ந விரக்தோ ந ராகவான் 
-அஷ்டாவக்ர கீதை-16-6

விஷயத்தை வெறுப்பவன் விரக்தன்; விஷயத்தில் உழல்பவன் காமி. தள்ளலும் கொள்ளலும் அற்றவன் விரக்தனுமாகான்; காமியுமாகான்.

204.
அத்யாசனாததீபானாத்யச்ச உக்ராத் ப்ரதிக்ருஹாத் 
தன்னோ வருணோ ராஜா பாணினாஹ்யவமர்சது
-அகமர்ஷண ஸுக்தம்  

அளவுக்கதிகமாய் உண்ணுதல், அளவுக்கதிகமாய்ப் பருகுதல், தீயோரிடமிருந்து பரிசுகளை ஏற்றுக் கொள்ளல் ஆகியவற்றால் அடைந்த பாவங்களை வருண ராஜன் தன் கரங்களால் துடைக்கட்டும்.

205.
ச்ரவணயாபி பஹுபிர்யோ ந லப்ய: ச்ருண்வந்தோபி பஹவோ யம் ந வித்யு:
ஆஸ்சர்யோ வக்தா குசலோஸ்ய லப்தாச்சர்யோ ஞாதா குசலானுசிஷ்ட:
-கடோபநிஷத் 

எதைப் பற்றிப் பலரும் கேள்வியுற்றதில்லையோ, கேட்டிருப்பினும் அறிந்ததில்லையோ, அதைப் பற்றிக் கூறுபவனும், அதை அடைபவனும் அரிது. நிபுணனான குருவால் உபதேசிக்கப்பட்டு அதை அறிபவன் அரிதினும் அரிது.

206.
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ :
அவிக்ஞாதம் விஜாநதாம் விக்ஞாத மவிஜாநதாம் 
-கேன உபநிஷத் 

அறியப்படாதது எவன் மதமோ அவனால் அறியப்பட்டதாம். அறியப்பட்டது எவன் மதமோ அவனால் அறியப்படாததாம். அறிவாளிகளால் அது அறியப்படாதது; அறிவீனர்களால் அறியப்பட்டதாய்க் கருதப் படுவது.

207.
ராகத்வேஷௌ மனோதர்மௌ ந மனஸ்தே கதாசன 
நிர்விகல்போஸி போதாத்மா நிர்விகார:ஸுகம் சர 
-அஷ்டாவக்ர கீதை-15-5

விருப்பும் வெறுப்பும் மனத்தின் இயல்புகள். உனக்கோ என்றும் மனமில்லை. முரண்பாடுகளும், பூசல்களும் அற்ற ஞானாத்மா நீ. சுகமாய்த் திரி.

208.
சதமின்னு சரதோ அந்தி தேவா யத்ரா நச்சக்ரா ஜரஸம் தனூனாம் 
புத்ராஸோ யத்ர பிதரோ பவந்தி மா நோ மத்யாரீரிஷதாயுர் கந்தோ:
-ஆ நோ பத்ரா ஸுக்தம் 

தேவா, நூறு சரத் காலங்கள் எம் முன் உள்ளன. அதன் முடிவில் எம் உடல் மூப்படைந்து விடும். எம் பிள்ளைகளும் தந்தையாகிடுவர். அப்படி எம் ஆயுள் முடியுமுன்னே தடுத்திடாதீர்.

209.
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சிந் நாயங்குதச் சிந் ந பபூவ கச்சித் 
அஜோ நித்ய: சாச்வதோயம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே சரீரே 
-கடோபநிஷத்

ஆன்மாவுக்குப் பிறப்பு இறப்பு இல்லை; எங்கிருந்தும் உண்டாகவில்லை; இதிலிருந்தும் எதுவும் உண்டாகவில்லை; நிலையானது; அழிவற்றது; புராதனமானது; உடல் அழிந்தும் அழியாதிருப்பது.

210.
க்ரந்த-மப்யஸ்ய மேதாவீ  ஞான-விஞ்ஞான தத்வத:
பலாலமிவ தான்யார்த்தீ த்யஜேத் க்ரந்த-மசேஷத: 
-அம்ருத பிந்து உபநிஷத் 

புத்தியிற் சிறந்தவன், அறிவிலும் அனுபவத்திலுமே சித்தத்தை வைத்தவனாய் நூல்களைக் கற்றுணர்ந்து அதன்பின் தானியத்தை விரும்புபவன் வைக்கோலைத் தள்ளி விடுவது போல நூல்களை அறவே விட்டுவிட வேண்டும்.

211.
 மோக்ஷோ விஷயவைரஸ்யம் பந்தோ வைஷயிகோ ரஸ:
ஏதாவதேவ விஞ்ஞானம் யதேச்சஸி ததா குரு 
-அஷ்டாவக்ர கீதை-15-2

விஷயச் சுவை அறுதலே வீடு; விஷயச் சுவையே பற்று; ஞானம் இவ்வளவுதான்.  உன் விருப்பப்படி நட.

212.
தேஹாதி ஸம்ஸக்தி மதோ ந முக்திர் முக்தஸ்ய தேஹாத் யபிமத்யபாவ:
ஸுப்தஸ்ய நோ ஜாகரணம் ந ஜாக்ரத: ஸ்வப்னஸ் தயோர் பின்னகுணாச்ரயத்வாத் 
-விவேக சூடாமணி 

சரீரத்தில் ஆழ்ந்த பற்றுள்ளோனுக்கு முக்தியில்லை; முக்தி எய்தியவனுக்கு சரீரம் குறித்த சிந்தனை இல்லை; உறக்கத்தில் வீழ்ந்தவனுக்கு விழிப்பில்லை; விழித்திருப்போனுக்கு உறக்கமில்லை. குணங்களின் வேற்றுமையே இதன் காரணம்.


213.
நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந பஹுனா ச்ருதேன 
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் 
-கடோபநிஷத் 

ஆன்மா மொழியால் மலராது; அறிவாலோ கேள்வியாலோ செம்மையடையாது; ஆன்மாவை ஆன்மாவால் ப்ரார்த்திக்கையில் அது அடையப் படும்; அவனுக்கேற்றவாறு அது விளங்கும்.


214.
தர்க்கோ ப்ரதிஷ்ட: ச்ருதயோ விபின்னா நைகோ முனிர் யஸ்ய வச: ப்ரமாணம் 
தர்மஸ்ய தத்வம் நிஹிதங் குஹாயாம் மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:

வாதங்கள் நிலையற்றவை; சாத்திரங்கள் மாறுதலுக்குட்பட்டவை; ப்ரமாண வார்த்தைகளைப் போதித்த முனிவர்கள் பலர்; தர்மத்தின் ஆணிவேர் புத்தியின் குகையில் மறைந்துள்ளது. மஹா புருஷர்கள் வாழ்ந்து காட்டிய பாதையே நாம் செல்ல வேண்டிய வழி.

215.
யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்ரந்தய:
அத மர்த்யோம்ருதோ பவதி ஏதாவத்யனுசாஸனம் 
-கடோபநிஷத் 

மனத்தின் எல்லா முடிச்சுக்களும் அவிழும்போது மனிதன் மரணமற்றவனாகிறான். உபதேசம் இவ்வளவுதான்.

216.
வ்யாபாரே கிததே யஸ்த்து நிமேஷோன்மேஷயோரபி 
தஸ்யாலஸ்யதுரீணஸ்ய ஸுகம் நான்யஸ்ய கஸ்யசித் 
-அஷ்டாவக்ர கீதா- 16-4 

கண்ணை இமைத்துத் திறப்பதற்கும் எவன் துயரடைவானோ, சோம்பலிற் தலை சிறந்தவனாம் அவனுக்கே இன்பம். வேறெவருக்கும் இல்லை.   


217.
அசப்த மஸ்பர்ச மரூப மவ்யயந் ததா ரஸம் நித்ய மகந்தவச்ச யத் 
அனாத்யனந்தம் மஹத: பரம் த்ருவம் நிசாய்ய தன் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யதே 
-கடோபநிஷத் 

ஒலி, பரிசமில்லை; வடிவம், அழிவில்லை; ருசி, மணமில்லை; ஆதியந்தம் அற்ற நிலையான, பெரிதிலும் பெரிதானது எதுவோ அதையறிவதால் ஒருவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்.

218.
ந தாவதி ஜனாகீர்ண நாரண்யமுபசாந்ததீ:
யதாததா யத்ரதத்ர ஸம ஏவாவதிஷ்டதே 
-அஷ்டாவக்ர கீதை-18-100  

புத்தி அமைதியுற்றவன் கூட்டத்தின் மத்தியிலோ, காட்டிற்கோ ஓடமாட்டான். அவன் எங்கெங்கும் சமனாய் உள்ளபடி நிலை நிற்பான்.   

219.
அவித்யாய மந்தரே வர்த்தமானா: ஸ்வயந்தீரா: பண்டிதம் மன்யமானா:
தந்த்ரம்யமாணா: பரியந்தி மூடா அந்தேனைவ நீயமானா யதாந்தா:
-கடோபநிஷத் 

அறியாமையில் ஆழ்ந்தவர்கள் தாமே தீரர்கள், தெளிந்தவர்கள் எண்ணி, இங்குமங்கும் பார்வையற்றவனைப் பற்றிய பார்வையற்றவன் போல மயங்கிச் சுற்றுகிறார்கள்.


220.
ஸமானீ ப்ரபா ஸஹவோன்னபாக: 
ஸமானே யோக்த்ரே ஸஹ வோ யுனஜ்மி
ஸம்யஞ்சோக்னிம் ஸபர்யதாராநாபிமிவாபித:
-ஸம்மனஸ்ய ஸுக்தம் 

கிணறும் சமையலறையும் அனைவருக்கும் பொதுவாக இருக்கட்டும். அன்பெனும் கயிற்றால் அனைவரையும் கட்டுகிறேன். ஆரங்கள் அச்சில் இணைவது போல் ஒரே நோக்குடன் அக்னியை வழிபடுங்கள்.

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator