1.
’அருகில் நீயில்லை
எனும்போதுதான்
தெரிந்தது
அருகில் நீ இருந்தது’
என்றேன்.
’இல்லாத போது
இருந்ததைச் சுமக்கிறாய்;இருக்கும்போது
இல்லாததைச் சுமக்கிறாய்’
என்றான்.
2.
வழக்கமாய்
'உன்னிடத்தில்
நான் இருந்திருந்தால்
அந்தத் தவறைச்
செய்திருக்க மாட்டேன்'
என்பவன்-
'என்னிடத்தில்
நீ இருந்திருந்தால்
அந்தத் தவறைச்
செய்திருக்க மாட்டாய்'
என்றான்.
பதிலுக்கு
'உன்னிடத்தில்
நான் இருந்திருந்தால்
உன்னை
மன்னித்திருக்க மாட்டேன்'
என்பவள்-
'என்னிடத்தில்
நீ இருந்திருந்தால்
அந்தத் தவறை
மன்னித்திருப்பாய்'
என்றாள்.
2 கருத்துகள்:
உம்மிடத்தில் இது இருந்தால்
கண்டிருக்கமாட்டோம்
எம்மிடத்தில் வந்ததால் இதன்
உச்சி தனை முகர்வோம்
(நி)தர்சனங்கள் !
கருத்துரையிடுக