பாரதிக்குத் திதி

இன்றைக்கு பாரதியின் நினைவு நாள். எல்லா நேரமும் அவன் நம்முள் கலந்திருக்கையில் பிறப்பேது இறப்பேது பாரதிக்கு. 

பாரதியின் எழுத்துக்களில் இருக்கும் அடிப்படைச சீர்திருத்தங்கள் கூட இன்னமும் கண்முன்னே காண இயலாது, நினைவு நாளில் அவர் கழுத்தில் சுமத்தப்படும் மாலைகள் சுமையாகவே தெரிகின்றன. 

தினமும் பாரதியை, அவனின் காலத்துக்கு முந்தைய சிந்தனைகளைச்  செயலாயக் காணும் திறனின்று, பாரதியின் சிலைகளுக்கும் படங்களுக்கும் முன்னே இன்றைக்குப் பிதற்றப்பட இருக்கும் உதிர்ந்த சொற்களைக் கொண்டு என்ன செய்யப்போகிறோம் நாம்? 

சிக்கனம் குறித்துப் பேசியபின், 20 கார்களில் சாலைகளில் செல்லும் அரசியல்வாதிகளை நினைவு படுத்தும் செயல் இல்லையா இது? அது புதிதாய் எந்தப் பாதைக்கு நம்மை இட்டுச் சென்று விடும்? யாருக்கு நினைவு நாளையும் பிறந்த நாளையும் நினைவு படுத்த ஆசைப்படுகிறோம்?

இரண்டு நினைப்புகள் தோன்றுகிறது. 

மக்கள் இந்தச் சடங்குகளின் ஜுரத்தில் இருந்து இன்னமும் மீளாதிருப்பது நம் மரபு சார்ந்த மரபு. இந்த அழுகல்களிலிருந்துதான் புதிய விதை முளைக்க இருக்கிறது. 

தன்னளவில் பாரதியின் சிந்தனைகளைச் சொல்லிலும் செயலிலும் சுமப்பவன் இந்த நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நாட்டை விட முக்கியமானவன்.

கருத்துகள்

sury Siva இவ்வாறு கூறியுள்ளார்…

உண்மை.

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
/ பாரதியின் எழுத்துக்களில் இருக்கும் அடிப்படைச சீர்திருத்தங்கள் கூட இன்னமும் கண்முன்னே காண இயலாது, நினைவு நாளில் அவர் கழுத்தில் சுமத்தப்படும் மாலைகள் சுமையாகவே தெரிகின்றன./சொல்லிப் போகும் பொருளைவிட சொல்லாத பலவற்றைச் சூல் கொண்டு நிற்கும் வரிகள். நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் சுந்தர்ஜி.

நிலாமகள் இவ்வாறு கூறியுள்ளார்…
தன்னளவில் பாரதியின் சிந்தனைகளைச் சொல்லிலும் செயலிலும் சுமப்பவன் இந்த நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நாட்டை விட முக்கியமானவன்.//

நலம்தானே... ஜி!!
vasan இவ்வாறு கூறியுள்ளார்…
தன்னளவில் பாரதியின் சிந்தனைகளைச் சொல்லிலும் செயலிலும் சுமப்பவன் தான்,
இந்த அழுகல்களிலிருந்து முளைக்க இருக்கிற புதிய விதை (From your words..just cut & paste)

(A real tribute to our ever HERO)

பிரபலமான இடுகைகள்