301.
ரவிரபி ந தஹதி தாத்ருக் யாத்ருக் ஸந்தஹதி வாலுகானிகர:
அன்யஸ்மால்லப்தபதோ நீச: ப்ராயேண து:ஸஹோ பவதி
பாலை மணல் நம் பாதங்களைப் பொசுக்குவது போல அதற்குக் காரணமான சூரியன் கூடப் பொசுக்குவதில்லை. அதுபோல் பிறரால் புகழடையும் கீழ்மக்களின் ஆரவாரங்களும் அப்படித்தான்.
302.
சோசந்தி ஜாமயோ யத்ர விநச்யத்யாசு தத்குலம்
யத்ரைதாஸ்த்து ந சோசந்தி வர்ததே தத்தி ஸர்வதா
பெண்கள் துயர் உற்றிருக்கும் குடும்பம்/வீடு சீக்கிரம் அழிவைச் சந்திக்கும். பெண்கள் மகிழ்ச்சியுற்றிருக்கும் குடும்பம் வளமுற்றிருக்கும்.
303.
அப்ரகடீக்ருதசக்தி: சக்தோபி ஜனஸ்திரஸ்க்ரியாம் லப்தே
நிவசன்னந்தர்தாருணி லங்க்யோ வநஹிர் ன து ஜ்வலித:
வலியவனின் வலிமை அறியாதோருக்கு வெளிப்படுத்தப் படாது போனால் அது மறக்கப்பட்டுவிடும். விறகில் மறைந்திருக்கும் சக்தியை, அது எரியாத வரை யாரும் லட்சியம் செய்வதில்லை.
304.
யதா வாயும் ஸமாச்ரித்ய வர்த்தந்தே ஸர்வஜந்தவ:
ததா க்ருஹஸ்தமாச்ரித்ய வர்த்தந்தே ஸர்வ ஆச்ரமா:
-மநு
உலகின் உயிரினங்கள் எல்லாம் எப்படிக் காற்றை நம்பி வாழ்கின்றனவோ, அதுபோல வாழ்வின் எல்லா தர்மங்களும் இல்லற தர்மத்தைச் சார்ந்தே அமைகின்றன.
305.
அதீத்ய சதுரோ வேதான் ஸர்வசாஸ்த்ராண்யநேகச:
ப்ரம்ஹதத்வம் ந ஜானாதி தர்வீ ஸூபரஸம் யதா
நான்கு வேதங்களையும், சகல சாத்திரங்களையும் திரும்பத் திரும்ப வாசிப்பதால் மெய்ஞானத்தை அடைய முடியாது. சட்டுவம் கறிச்சுவை அறியாது.
306.
யஸ்ய சிந்தம் நிர்விஷயம் ஹ்ருதயம் யஸ்ய சீதளம்
தஸ்ய மித்ரம் ஜகத்ஸர்வம் தஸ்ய முக்தி: கரஸ்திதா
யாரின் சித்தம் விஷயப் பற்றற்று இருக்குமோ, மனம் தண்மையாய் இருக்குமோ, அவனுக்கு அகில உலகமும் நட்பு பாராட்டும். வீடுபேறு கை வசப்படும்.
307.
க்ஷமா சஸ்த்ரம் கரே யஸ்ய துர்ஜன: கிம் கரிஷ்யதி
அத்ருணே பதிதோ வன்ஹி: ஸ்வயமேவோபசாம்யதி
மன்னிப்பு என்னும் ஆயுதத்தின் முன்னே தீயோரால் என்ன செய்ய இயலும்? புற்களற்ற தரையில் நெருப்பு பரவாது.
308.
புதாக்ரே ந குணான் ப்ரூயாத் ஸாது வேத்தி யத: ஸ்வயம்
மூர்க்காக்ரேபி ச ந ப்ரூயாத் தத்ப்ரோக்தம் ந வேத்தி ஸ:
உன் நற்குணத்தைச் சான்றோரிடம் சொல்லாதே; அவர்களே சுயமாய் அறிந்து கொள்வார்கள். மூர்க்கர்களிடம் சொல்லாதே; அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
309.
ந காலோ தண்டமுதம்ய சிர: க்ருந்ததி கஸ்யசித்
காலஸ்ய பலமேதாவத் விபரீதார்த்ததர்சனம்
-மஹாபாரத்
காலம் ஒருவன் தலையை ஆயுதங்களால் கொய்வதில்லை; ஆனால் சிந்தையைக் கெடுத்து விபரீதமான முடிவுகளை எடுக்கச் செய்து தவறான பாதைக்குத் தள்ளுவது அதன் வலிமை.
310.
மாத்வீ வ மன்யதே பாலோ யாவத் பாபம் ந பச்யதே
யதா ச பச்யதே பாபம் துக்கம் சாத் நிகச்சதி
-தம்மபதம்
செய்த வினை பழுக்காத வரை அறியாத மூடனுக்குத் தேனாய் இனிக்கிறது. பழுத்த பின், அதன் கசப்பை அவன் சுவைக்கத்தான் வேண்டும்.
311.
தாவஜ்ஜிதேந்த்ரியோ ந ஸ்யாத் விஜிதான்யேந்த்ரிய: புமான்
ந ஜயேத் ரஸனம் யாவத் ஜிதம் ஸர்வம் ஜிதே ரஸே
ஸ்ரீமத் பாகவதம்
நாவடக்கம் இல்லாத ஒருவனைப் புலன்களை வென்றவனாகக் கருத முடியாது; உணவின் மீதான இச்சையற்றவனே எல்லாப் புலன்களையும் வென்றவனா கிறான்.
312.
யோ யமர்த்தம் ப்ரார்த்தயதே யதர்த்தம் கடதேபி ச
அவச்யம் ததவாப்னோதி ந சேச்ச்ராந்தோ நிவர்த்ததே
ஏதொன்றையோ விரும்பும் ஒருவன், அதையடைய அயர்வின்றி விடாது முயல்வானேயானால் சந்தேகமின்றி அதை அடைவான்.
313.
யதர்ஜிதம் ப்ராணஹரை: பரிச்ரமை: ம்ருதஸ்ய தத் வை விபஜந்தி ரிக்தின:
க்ருதம் ச யத் துஷ்க்ருதமர்த்தலிப்ஸயா ததேவ தோஷாபகதஸ்ய கௌதுகம்
-கருடபுராண்
ஒருவன் கடும் உழைப்பினால் அடைந்த செல்வத்தை, இறந்த பின் அவன் சந்ததி பங்கிட்டுக் கொள்கிறது. செல்வத்தை அபகரிக்கச் செய்த தீவினைகளின் பயன்களை, இறந்தவன் தன்னுடன் எடுத்துச் செல்கிறான்.
314.
த்யஜேத் க்ஷுதார்த்தா ஜனனீ ஸ்வபுத்ரம்
காதேத் க்ஷுதார்த்தா புஜகீ ஸ்வமண்டம்
புபுக்ஷித: கிம் ந கரோதி பாபம்
க்ஷீணா ஜனா நிஷ்கருணா பவந்தி
-சாணக்ய
பஞ்சத்தில் வாடும் தாய் மகனையே கைவிட்டு விடுவாள்; கொடும் பட்டினியால் வாடும் பாம்பு தன் முட்டைகளையே உண்ணும்;
வாழ்வா சாவா எனும் விளிம்பு நிலையில், எந்தப் பாவத்தைத்தான் செய்ய மக்கள் தயங்குவார்கள்?
315.
யத்ர நார்ய: து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
யத்ர ஏதா: து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அ ஃ பலா: க்ரியா:
-மநு
எங்கு பெண்கள் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரியவர்களாய்க் கருதப் படுகிறார்களோ அங்கு இறைவன் உறைகிறான்; பெண்கள் போற்றப் படாத இடங்களில் எதுவும் உருப்படுவதில்லை.
316.
கதோதோ தோததே தாவதே பவன்னோதயதே சசீ
உதிதே து சஹஸ்ராம்சௌ ந கதோதோ ந சந்த்ரமா:
நிலவு மலராத இரவுகளில் மின்மினிப்பூச்சி ஒளிர்கிறது; ஆயிரம் கரங்களுடன் கதிரவன் உதயமான பின் மின்மினிப் பூச்சியோ, நிலவோ இருக்குமிடம் தெரிவதில்லை.
317.
ஸ்வபாவம் ந ஜஹாத்யேவ ஸாதுராபத்கதோபி ஸன்
கற்பூர: பாவகஸ்ப்ருஷ்ட: ஸௌரபம் லப்தேதராம்
கற்பூரம் நெருப்பால் சுடப்படுகையிலும் நறுமணத்தையே உமிழ்வது போல்,
பேரிடர்களிலும் சான்றோர் தம் சுபாவத்திலிருந்து பிறழ்வதில்லை;
318.
ச்ரமேண துக்கம் யத்கிஞ்சித்கார்யகாலேநுபூயதே
காலேன ஸ்மர்யமாணாம் தத் ப்ரமோத்
கடின உழைப்புக்கிடையே இடர்பாடுகளால் உண்டாகும் மனச் சோர்வுடன் முழுமையுற்ற செயலை, எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கையில் மனநிறைவளிக்கும்.
319.
ஆஸ்தே பக ஆஸீனஸ்ய ஊர்த்வம் திஷ்டதி திஷ்டத:
சேதே நிஷதமானஸ்ய சரதி சரதோ பக:
அதிர்ஷ்டம் அமர்ந்திருப்பவனுடன் அமர்ந்தபடியும், நிற்பவனுடன் நின்று கொண்டும், உறங்குபவனுடன் உறங்கிக் கொண்டும், நடப்பவனுடன் நடந்த படியும் இருக்கிறது.
320.
யாவத் ப்ரியதே ஜடரம் தாவத் ஸத்வம் ஹி தேஹீனாம்
அதிகம் யோபிமன்யேத ஸ ஸ்தேனோ தண்டமர்ஹதி
மஹாபாரத் / மநு
தன் தேவைகளுக்கேற்ப ஒருவன் செல்வத்தை ஆளலாம்; தேவைக்கு அதிகமாய் செல்வத்துக்கு உரிமை கொள்பவன் கள்வன்; தண்டனைக்குரியவன்.
2 கருத்துகள்:
சபாஷ் !
சுபாஷிதம்-16 இல் அனைத்தும் அருமை.
315 முதல் 320 வரை மிகவும் பிடித்துள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
சுபாஷிதம்சொல்லும்விஷயங்கள் வாழ்க்கை நெறியை ஓதுகின்றன. கொள்வார் எண்ணிக்கை கூடினால் மகிழ்ச்சி. சு. 305, 314, 320 மனம் கவர்ந்தன. மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு கேட்டிருக்கிறேன்” தனிக்கி சுட்டால் குட்டி தாழே” வெயிலில் குழந்தையுடன் நடக்கும் தாய் காலில் சூடு மிகுந்தால் குழந்தையைக் கீழே போட்டு அதன் மீது நிற்பாள் என்பது பொருள். கடைசி அறவுரை காந்தியின் வாக்கை நினைவூட்டுகிறது. ”தன் தேவைக்கு மீறி பொருள் சேர்ப்பவன் எங்கோ ஒரு ஏழையையோ திருடனையோ உருவாக்குகிறான்” பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.
கருத்துரையிடுக