
என்னில் இருந்து விலகிச் சென்று விட்டாய்.
அறையின் கதவுகளை நிசப்தம் கொண்டு
அழுத்தமாகத் தாழிட்டிருக்கிறாய்.
நிதானத்தின் முடிச்சுகளை
ஒவ்வொன்றாய் அவிழ்க்க எத்தனிக்கையில்
சினத்தின் ஆவி பறக்க மேலும் முடிச்சுக்களால்
இறுக்கிவிட்டாய்.
அசையும் சருகுகளில்
அணிலின் கிளை தாவல்களில்
கண்மூடி உறங்கும் நாயின் வாலசைவில்
பிரிக்கப்படாத கடிதங்களில்
என் கவனத்தை நழுவவிட்டுக் காத்திருக்கிறேன்.
உன்னிலிருந்து விலகி இருக்கும்போது
உன் மிக அருகே இருப்பதாய் உணர்கிறேன்.
நீ சற்று நேரத்தில் திரும்பி விடக்கூடும்
அயரவைக்கும் உன் இதழ் மலர்ச்சியோடு.
அப்போது உன் தலை வருடி
அன்பு நிரப்பிய கோப்பையோடு
இக்கவிதையை உனக்காய் அளிப்பேன்.
9 கருத்துகள்:
அணிலின் கிளை தாவல்..
ரசனையின் உச்சம்.
"அசையும் சருகுகளில்
அணிலின் கிளை தாவல்களில்
கண்மூடி உறங்கும்
நாயின் வாலசைவில்
பிரிக்கப்படாத கடிதங்களில்"
Beautiful! :)
நல்லா இருக்குங்க.
இதற்காவே பிரிய வேண்டும் போல் இருக்கிறது அல்லது ஒவ்வொரு பிரிவுக்கு பின்னும் இப்படியான
மென்கவி இருந்தால் .... எப்படி இருக்கும் !
பிரிவு வலி தராமல் கவி தருவதே விந்தை தான் ஜி
கண்மூடி உறங்கும்
நாயின் வாலசைவில்..உறக்கத்தில் சிரிக்கும் ஒரு குழந்தையை ஞாபகமூட்டுகிறது இந்த வரிகள்..ஆனால் அந்த இதழ் புன்னகை இந்தக் கவிதையை பெற்றுக்கொள்ளும் வரை இன்னும் சில கவிதைகள் இது போல எழுதிக் கொண்டேயிருக்கலாம்...
அந்த அன்பு நிறை கோப்பையை ஒரு கேணியாக்கி விடுங்கள் .உலகம் சேந்தி கொள்ளட்டும்
class ji
காதலின் நிறைவில் எந்த அசைவும் கவிதையாகிவிடும்.தூங்கும் நாயின் வாலின் அசைவுகூட !
நன்றி
-மது.
-மாதங்கி.
-செல்வராஜ் ஜெகதீசன்.
-வேல் கண்ணன்.
-சிவா.இன்னும் உங்கள் தளத்தில் நுழைய முடியவில்லை.மோசில்லா எக்ஸ்ப்ளோரரை தடவிறக்கம் செய்ய நேரமொழியவில்லை.
-பத்மா.
-ஹேமா.
கருத்துரையிடுக