12.7.10

வலி



எந்தச் சுவர்களில் எல்லாம் 
செருக்கின் அடர் நிறம்
பூசப்பட்டிருக்கிறதோ-
அங்கெல்லாம் 
பள்ளம் உண்டாக்குகிறது
ஓர் அபலைச் சிறுமியின் 
விசும்பல்.

எந்தப் பள்ளங்களில் எல்லாம்
அச்சிறுமியின் ஆறாத துயரம்
நிறைந்திருக்கிறதோ
அவற்றைத் தகர்த்து மூடி
மடியில் இட்டு 
அவள் தலை கோதுகிறது
கண்ணீரால் கோர்க்கப்பட்ட
என் கவிதையின் கரம்.

12 கருத்துகள்:

Vel Kannan சொன்னது…

ஜி, எல்லாவற்றையும் படித்து முடித்தேன். சுயத்திற்கு திரும்புவதற்கு பல மணி நேரம் பிடித்தது.
இவ்வளவு நாள் தவற விட்டது வருத்தம் தான் இருந்தாலும் இப்பொழுது பி(ப)டித்து விட்டேனே , அது போதும் எனக்கு.
தலைப்பே ஆயிரம் சொல்கிறது 'கைகள் அள்ளிய நீர்' நானும் எவ்வளவு அள்ளினாலும் குறையாது சுவையும் ஆழமும்.
இந்த 'வலி' பற்றி: விசும்பலின் ஒலி பெரும் சத்தத்துடன் ஓங்கி அலறுகிறது கவிதையிலும் (படத்திலும்).

சுந்தர்ஜி சொன்னது…

மிக நெகிழ்ச்சியாக இருந்தது கண்ணன்.பேருந்தைப் பிடிக்க விரையும் சென்னையின் ஒரு அலுப்பான பின் மாலைப்பொழுதிலும் சுகுமாரன் அவரின் வாழ்நிலத்தில் எனக்குப் பின்னூட்டமிட்ட தகவலைப் பகிர்ந்துகொண்டீர்கள்.சில செய்கைகள் மனதின் தடங்களை விட்டுச் செல்கின்றன. உங்கள் மனதை நான் அறிந்துகொண்டேன் கண்ணன்.உங்களையும் என் சோம்பேறித்தனத்தை விற்று விரைவில் வாசித்துமுடிக்கிறேன்.

Madumitha சொன்னது…

அச் சிறுமியின் விசும்பல்
கடவுளின் காதில்
விழக்கூடும்
உங்கள் கவிதையின்
வழியாக.

ஹேமா சொன்னது…

மனம் நெகிழ்வான கவிதை.எப்போ இந்நிலை மாறும் !

Anonymous சொன்னது…

சிறுமை கண்டு பொங்கியெழும் மனது,சிறுமியின் நினைவோடு,நெகிழ வைத்துவிட்டது மனதை.நிறைத்தது விழிகளை ஈரக்கசிவுடன்.
-தனலக்ஷ்மிபாஸ்கரன்.

Anonymous சொன்னது…

நிழல் மிரட்டியதுங்க சார்.
-கலைவாணி

Anonymous சொன்னது…

கவிதையின் நிழலில் நானும் கோர்க்கப்பட்டேன்.
-திருமதி.மீனாதேவி

Anonymous சொன்னது…

சிறுமியின் விசும்பலும் அதை மொழிந்த கவிதையும் அழகு ஜி.
-யாழி.

Anonymous சொன்னது…

ஆதங்கத்தின் பரிவும்,கனிவும் கவிதையாக.ஆனால் சட்டென எங்களைக் கவிதைக்குள் இழுக்கும் வழக்கமான உங்கள் ஈர்ப்பு மங்கலாய்....
-உஷாராணி.

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு சுந்தர்ஜி!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
-ஹேமா.
-மதுமிதா.
-தனலக்ஷ்மி பாஸ்கரன்.
-கலைவாணி.
-மீனாதேவி.
-யாழி.
-உஷா
-பா.ரா.

Harani சொன்னது…

என் குழந்தைப் பருவத்திற்குச் சென்று எச்சில் வழிய அளிக்கிறேன் கள்ளங்கபடமற்ற முத்தம் இக்கவிதைக்காக. நிறைய சுகம்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...