16.7.10

அவிழ்



பூவொன்று காயாகும்
அறியாத இடைவெளியாய்-
ஈரத் துணியொன்று உலரும்
காணாப் பொழுதாய்-
பிடியை விட்டு மிதக்கும்
வித்தைக்காரன் கைமுன்னே  
நீளும் வெளியாய்-
சுடருக்கும் திரிக்கும் நடுவாய்-
பாறைக்கும் உளிக்கும் இடையாய்-
காற்று சுமக்கும் பஞ்சாய் அலைக்கழித்து
இப்படி வந்து முடிகிறது
அந்தக் கவிதை.

11 கருத்துகள்:

Vel Kannan சொன்னது…

அதற்கும் இதற்கும் நடுவில் பயணத்தை மேற்கொள்ளும் கவிதை அருமை ஜி

பத்மா சொன்னது…

அந்த நேரம் தான் தானே மொட்டவிழும் நேரம் ..பிடித்து வைத்துக்கொள்ளுங்கள் சுந்தர்ஜி ,

பிடியை விட்டு மிதக்கும்
சர்க்கஸ்வீரனின்
கைமுன் நீளும் வெளியாய்-

படிக்கும் போதே சொரேர் என்கிறது ..

அப்பா

Anonymous சொன்னது…

ஓ ஹையென்று ஆச்சர்யத்தில் கூவிவிட்டேன்.காய் பிடிக்கும் கணங்களையும்,ககண வெளியையும் ஊடுருவி அண்டம் துளைக்கும் அமானுஷ்ய வரிகள்!இதுபோன்ற கவிகள் ஜனிக்கும் கணங்களில் கவிஞனுக்கும் கடவுளுக்கும் அதிக தூரமிருப்பதாய் நான் உணரவில்லை.
-தனலக்ஷ்மி பாஸ்கரன்.

Anonymous சொன்னது…

ஏதோ வரம் பெற்று வந்திருக்கிறேன் உன் கவிதை வரம் பெற்றுக்கொள்ள.
-திருமதி.மீனாதேவி

Anonymous சொன்னது…

அலைக்கழித்து வந்த கவிதை என்னையும் அசைத்துப் பார்த்தது.அருமை ஜி.
-யாழி.

Anonymous சொன்னது…

மிக மிக அற்புதமாகவே முடிந்திருக்கிறது தங்களின் கவிதை.எப்போதுமே உங்கள் கவிதை வரிகள் உங்கள் உணர்வுகளைத் தெளிவாகவே பேசுகின்றன.இக்கவிதை அதில் ஒரு வைரக்கல்.வாழ்த்துக்கள் வானளவு.
-விநாயகமூர்த்தி.

Anonymous சொன்னது…

அலைக்கழித்த அக்கவிதை அடைந்த லட்சியத்தில் மிளிர்கிறது சுந்தர்ஜி ஸார்.கவிதை கள்.
ப.தியாகு.

நிலா மகள் சொன்னது…

ஜி'வ்வென்று உயர உயர எழும்பிப் பறக்குது மனசு ... அற்புதம் !

ஹேமா சொன்னது…

கனவில் வந்து போகும் வார்த்தைகள்கூட காலையின் நினைவில் நழுவித்தான் நிற்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
-வேல்கண்ணன்.
-பத்மா.பிடித்து வைக்க முடியலியே.
-தனலக்ஷ்மி
-மீனாதேவி
-யாழி.
-விநாயகமூர்த்தி.
-தியாகு.
-நிலாமகள்.
-ஹேமா.

Anonymous சொன்னது…

//காற்று சுமக்கும்
பஞ்சாய் அலைக்கழித்து//
-மிகக் கச்சிதமான உவமை.பஞ்சின் மேன்மை அல்லவா கவிதையும்.

கவிதை முகிழ்க்கும் கணத்திற்கும், முழுமையாகும் கணத்திற்கும் இடையேயான வினாடிகளாய் தவித்தலையும் மனதை எண்ணிக்கொண்டேன்.

பிடியை விட்டு மிதக்கும் சர்க்கஸ்வீரனின் கைகள் நீளும் வெளியாய்....பிரமித்துப் போகவைத்த உவமைக்காய் ஓர் சலாம்.
-உஷா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...