
எப்போது அல்லது எப்படி
வேண்டுமானாலும்
துவக்கம் கொள்ளலாம் ஒரு கவிதை.
பேருந்தின் பிடியை விட்டு
அவசரமாய்த் தரை தேய்த்து
இறங்குகையிலோ-
நின்று போன திருமணத்தின் நடுவே
சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலோ-
மோசமான திரைப்படத்தோடு
மூட்டைப்பூச்சியும் ரத்தம் உறிகையிலோ-
இரைச்சல் மிகுந்த ஒரு திருவிழாவின்
வண்ணம் ததும்பும் பீமபுஷ்டி ஹல்வாவை
அல்லது பாயசத்தை உற்று நோக்கும்போதோ-
செம்மொழி மாநாட்டில் மாட்டிக்கொண்ட அவன்
இனி ஒருபோதும் கவிதை எழுதமாட்டான்
என்றறிய நேர்கையிலோ.
அந்தக் கவிதை
எப்படி வளர்ந்து எப்படி முடியக்கூடும்
என்று யூகிப்பதில்தான் இருக்கிறது
மிச்சமிருக்கும் அடக்கமுடியா ஆர்வம்.
10 கருத்துகள்:
ஆம் சுந்தர்ஜி சில கவிதைகள்
என்றும் முடிவதில்லை.
செம்மொழி மாநாடு பற்றி
ஒர் ஊசி செருகியுள்ளீர்களே...
அதை மிகவும் ரசித்தேன்.
ahaaa ahaaaaaa
ஜி பொக்கிஷம் என நீங்கள் கூறினாலும் ஏற்க மறுக்கிறது மனது ...இருப்பினும் அன்பிற்கு மிக்க நன்றி ....
இது எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம்
சுந்தர்ஜி...இதுதான் வலிக்காமல் அடிக்கிறதோ.செம்மொழி மாநாடு !
நன்று
கவிதைக்குரிய சூழல் எதிர்ப்பார்த்து இருப்பது ஒரு முறை. இயல்பாக கிடப்பது ஒருமுறை. நீங்கள் சொன்னது போல் எப்போது , எப்படி என்று சொல்ல முடியாது தான். இருப்பினும் அந்த பொழுதை தேடி மனம் தவிக்கசெய்வது தவிர்க்க முடியாது ஆகிவிடுகிறது. (அது சரி , நடுவில் ஒரு காட்டமான விமர்சனம் வேறு வருகிறதே .... சரியான விமர்சனம் தான் ஜி. நானும் ரசித்தேன் : அதுவே தான் அவர்களின் நோக்கமோ ?)
உங்க கவிதைகளின் தொடக்கத்தையும் முடிவையும் ஊகிக்க முடிவதில்லைஎன்பதும் சுவாரஸ்யம்தான் ஜி...!
படைப்பு கவிதையோ கதையோ எப்படி வேண்டுமானாலும் துவங்கி யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்கிறது.. இந்தக் கவிதை உங்களிடம் வெளிப்பட்டதைப் போல..!
///நின்று போன திருமணத்தின் நடுவே சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலோ ///
அருமையான வீச்சு...
ரொம்ப பிடிச்சிருக்கு.
சுந்தர்ஜி..ஆனந்தமாயிருக்கு. உறரணி.
கருத்துரையிடுக