2.7.10

கண்ணாடி


வகிடெடுக்கவும்
பொட்டுவைத்துக்கொள்ளவும் போதும்
கைதவறி நழுவவிட்ட
கண்ணாடியின் பெரிய துண்டு.
வரும்போதெல்லாம்
சொல்லாமல் இருப்பதில்லை
பக்கத்துவீட்டு மருமகள்
”ஒடஞ்ச கண்ணாடியில
முகம் பார்த்தா குடும்பத்துக்காவாது”
ஆகாமல் போவதற்கு
ஒன்றுமில்லை என்பதறிந்தும்
சரி என்னதான் இருக்கிறது
எனக்கும் அவளுக்கும் பேசிக்கொள்ள
இருந்துவிட்டுப் போகட்டுமே
ஓர் உடைந்த
கண்ணாடித்துண்டாவது.
-இளம்பிறை

4 கருத்துகள்:

பத்மா சொன்னது…

தேடித் தேடி கண்டு பிடிக்கிறீர்கள் ..
இதற்கே ஒரு பெரிய நன்றி

கவிதை அழகு சொட்டுகிறது

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பத்மா.உங்கள மாதிரில்லாம் வராது.

ஹேமா சொன்னது…

உடைஞ்ச கண்ணாடிக்கும் கவிதை !

Harani சொன்னது…

பலரின் வாழ்க்கையும் உடைந்த கண்ணாடியிலிருந்துதான் தொடங்குகிறது சுந்தர்ஜி. அருமை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...