16.7.13

சுபாஷிதம் -III

41.
ஸர்வோபநிஷதோ காவ: தோக்தா கோபாலநந்தன:
பார்தோ வத்ஸ: ஸுதீ: போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்

உபநிடதங்கள் அத்தனையும் பசுக்கள்; கண்ணனே  மேய்ப்பன்; புத்திமான் அர்ஜுனனே கன்று; அவன் அருந்திய பாலெனும் அமுதமே கீதை.

(எல்லா உபநிடதங்களின் சாரமே பகவத் கீதை எனக் கருதப்படுகிறது.)
  
42.
ஹம்ஸ: ஷ்வேதோ பக: ஷ்வேதோ கோ பேதோ பகஹம்ஸ்யோ:
நீரக்ஷீரவிவேகே து ஹம்ஸ: ஹம்ஸோ பகோ பக:

அன்னம், கொக்கு இரண்டும் வெண்மையானவை. நீரோடு கலந்த பாலைப் பிரித்துப் பருக அன்னம் அறியுமேயன்றி கொக்கல்ல. 

43.
காக: க்ருண்ணோ பிக: க்ருண்ணோ கோ பேதோ காகபிகயோ:
வஸந்தஸமயே ப்ராப்தே காக: காக: பிக: பிக:

காகம், குயில் இரண்டும் கரியவைதான். எது காகம், எது குயில் என்பதை வசந்தகாலம் அடையாளம் காட்டுகிறது.    

44.
அஹம் ச த்வம் ச ராஜேந்ர லோகநாதாவுபாவபி
பஹுவ்ரீஹிரஹம் ராஜன் ஷஷ்டிதத்புருஷோ பவான்

"மன்னா! நாமிருவருமே மக்களின் நாயகர்கள்தான் ; ஒரே வித்தியாசம். நான் மக்களைச் சார்ந்திருக்கிறேன். மக்கள் உன்னைச் சார்ந்திருக்கிறார்கள்." 

(ஒரு யாசகனின் குரல் இது; லோகநாதன் - மக்களின் நாயகன்.)

45.
ஸுலபா: புருஷா: ராஜன் ஸததம் ப்ரியவாதின:
அப்ரியஸ்ய ச பத்யஸ்ய வக்தா ச்ரோதா ச துர்லபம்

”மேன்மைக்குரியோய்; இனிமையான புகழுரை கூறும் மக்களை எளிதில் கண்டுகொள்ளலாம்; உவர்ப்பான வார்த்தைகளைப் பேசுபவனையும், அதைக் காது கொடுத்துக் கேட்பவனையும் காண்பதுதான் அரிது.”

(மஹாபாரதத்தில் விதுரர் திருதராட்டினனிடம் நிகழ்த்திய உரையாடலில் உதிர்ந்த முத்து இது)   

46.
துர்ஜன: ப்ரியவாதீதி நைதத் விஷ்வாஸ்காரணம்
மதுதிஷ்டதி ஜிவ்ஹார்கே ஹ்ருதயே து ஹலாஹலம்

உன் சார்பாய் இனிய வார்த்தைகள் பேசினாலும், தீயோரை நம்பாதே; அவர்கள் நாவில் தேனும், மனதில் விஷமும் தடவப் பெற்றவர்கள்.

47.
ஸர்பதுர்ஜனோர்மத்யே வரம் ஸர்போ ந துர்ஜனம்
ஸர்ப: தம்ஷதீ காலேன துர்ஜனஸ்து பதே பதே

பாம்பையும், தீயவர்களையும் ஒப்பிட, பாம்பே மேலானது; ஏனெனில், எப்போதாவதுதான் நச்சு மிகுந்த பாம்பு தீண்டும்.

48.
வரம் ஏகோ குணீ புத்ரோ ந ச மூர்க்கஷதான்யபி
ஏகஷம் சந்த்ரஸ்தமோ ஹந்தி ந ச தாராகணோபி ச

நூறு மூடர்களிலும் ஒரு புத்திசாலி மேலானவன்; இருளை விரட்ட வானெங்கும் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைக் காட்டிலும் ஒரு நிலா போதுமானது. 

49.
கராக்ரே வஸ்தே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ
கரமூலே து கோவிந்த: ப்ரபாதே கரதர்ஷனம்

கரங்களின் நுனியில் தனமகளும், கரங்களின் மத்தியில் கலைமகளும், கரங்களின் மூலையில் திருமாலும் வசிப்பதால், தினமும் அதிகாலை கரங்களைத் தரிசியுங்கள்.    

50.
விதேஷேஷு தனம் வித்யா வ்யஸநேஷு தனம் மதி:
பரலோகே தனம் தர்ம: ஷீலம் ஸர்வத்ர வை தனம்

அயல் நாட்டில் செல்வம் கல்வி; சோதனைக் காலங்களில் செல்வம் கூர்மதி; பரமண்டலத்தையும் வெல்லும் செல்வம் தர்மம். எல்லா இடங்களிலும் எப்போதும் செல்வம் நேர்மை.  

51.
ந சோரஹார்யம் ந ச ராஜஹார்யம் ந ப்ராத்ருபாஜ்யம் ந ச பாரகாரி
வ்யயே க்ருதே வர்தத் ஏவ நித்யம் விகாதனம் ஸர்வதனப்ரதானம்

கள்வரால் அபகரிக்க முடியாததும், அரசனால் கைப்பற்ற முடியாததும், சகோதர்களால் பங்கிட முடியாததும், தோள்களுக்குச் சுமையாய் இல்லாததும், செலவழித்தால் தினமும் பெருவதும், அனைத்துச் செல்வங்களிலும் மேலானதும் கல்வி ஒன்றே. 

52.
யதா ஹி மலினை: வஸ்த்ரை: யத்ர குத்ர உபவிஷயதே
வ்ருதத: சலிதோபி ஏவம் சேஷம் வ்ருதம் ந ரக்ஷதி

எப்படிக் கறை படிந்த ஆடை அணிந்தவன் உட்காரும் இடத்தின் தூய்மை குறித்துத் கவலை கொள்வதில்லையோ, அப்படியே ஒருமுறை நடத்தை தவறியவன், மேலும் தீய செயல்கள் புரியத் தயங்குவதில்லை.

53.
ந தேவா தண்டமாதாய ரக்ஷந்தி பஷுபாலவத்
யம் து ரக்ஷிதுமிச்சந்தி புதத்யா ஸம்விபஜந்தி தம்

கடவுள் ஒருவனைக் காக்கத் தன் கையில் கழி ஏந்துவதில்லையே தவிர, எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தேவையான அறிவை அவனுக்குத் தருகிறார்.

54.
கார்யார்த்தீ பஜதே லோகம் யாவத்கார்யம் ந ஸித்ததி
உத்தீர்ணே ச பரே பாரே நௌகாயாம் கிம் ப்ரயோஜனம்

பிறரால் ஒரு காரியம் நிறைவேறும் வரை அவரை உபயோகித்துக் கொள்கிறோம்- ஒரு நதியைக் கடந்த பின் படகால் என்ன பயன்? 

55.
அல்பாநாமபி வஸ்துனாம் ஸம்ஹதி: கார்யஸாதிகா
த்ருணைர்குணத்வமாபன்னைர்பத்யந்தே மந்தஸந்தின:

சிறு பொருட்களும் பெரிய காரியங்களைச் சாதிக்க வல்லவை - சிறுகயிற்றால் பின்னப்பட்ட வடக்கயிறு மதயானையைக் கட்டி அடக்குவது போல. 

56.
அதிபரிசயாதவஞ்ஞா ஸம்தத்கமனாத் அநாதரோ பவதி
மலயே பில்லா புரந்த்ரீசந்தனதருகாஷ்தம் இம்தனம் குருதே

அளவு கடந்த நெருக்கம் அவமதிப்பை உண்டாக்கும் - மலைப்புறத்துப் பெண் அடுப்பெரிக்கச் சந்தனக் கட்டைகளை உபயோகிப்பது போல்.

57.
ஸர்ப: க்ரூர: க்ரல: க்ரூர: ஸர்பாத் க்ரூரதர: க்ரல:
ஸர்ப ஷாம்யதி மந்த்ரைஷ்ச துர்ஜன: கேன ஷாம்யதி

ஒரு பாம்பு, நற்குணமற்றோன் இருவரிலும் பாம்பே ஆபத்தற்றது; ஒரு நச்சுப் பாம்பை மந்திர உச்சாடனத்தால் வசப் படுத்தி விடலாம்.

58.
லால்யேத் பஞ்ச வர்ஷாணி தஷ வர்ஷாணி தாடயேத்
ப்ராப்தே து ஷோஇஷே வர்ஷே புத்ரே மித்ரவதாசரேத்

ஒரு பிள்ளையை ஐந்து வயது வரை கொஞ்சலாம்; பத்து வயது வரை கண்டிக்கலாம்; அதே பிள்ளை பதினாறு வயதைக் கடந்த பின் நண்பன் ஆகிறான்.

59.
ஸம்பூர்ணகும்போ ந கரோதி ஷப்தம் அர்த்தோகடோ கோஷமுபைதி நூனம்
வித்வான் குலீனோ ந கரோதி கர்வ குணைர்விஹீனாபஹு ஜல்ப்யந்தி

நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும். கற்றோரும், கல்லாதோரும் அப்படியே.

60.
அஹன்யஹனி பூதானி கச்சந்தி யமாலயம்
ஷேஷா: ஸ்தாவரமிச்சந்தி கிமாஷ்ச்சர்யமத: பரம்

“பிறந்தவரெல்லாம் இறந்தேயாக வேண்டிய இந்த பூமியில், யாரொருவரும் இறக்க விரும்பாமையே வியப்பளிக்கக் கூடியது”.

(மஹாபாரதத்தில் யுதிஷ்டிரரிடம் கந்தர்வன், “ இந்த பூமியில் வியப்பளிக்கக் கூடியது எது?” என்று கேட்ட கேள்விக்கான பதில் இது.)

4 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

ஒவ்வொரு சுபாஷிதமும் அனுபவ பூர்வ உண்மைகள்.என் மனைவி என் பேரக் குழந்தைகளுக்கு 49-வது சுலோகம் சொல்லிக் கொடுக்கக் கேட்டிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.

sury siva சொன்னது…



திருச்சி இ.ர.உயர்னிலைப்பள்ளியில் எனது சம்ஸ்க்ருத ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்கள் தமது
வகுப்பு துவங்குகையிலே சுபாஷிதானியில் ஒரு கப்ளெட் சொல்லிவிட்டுத்த்டான் பாடங்களைத் துவங்குவார்.

அவரது மகன் என்னுடன் சக ஊழியராக வேலை பார்த்து வந்த திரு ஆராவமுதனும் அவ்வாறே. பேசும்பொழுதெல்லாம் அந்த பேச்சுக்கேற்றவாறு ஒரு சுபாஷிதானிதன்யில் ஒரு ச்ளோகம் சொல்லி தெளிவு படுத்துவார்.

சுபாஷிதானி சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் சாஹித்யம்.

அதை எளிய தமிழில் எடுத்துரைத்ததற்கு நும்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நிற்க.

அந்த ஒரு ச்லோகம். வரம் ஏகோ குண்ஃ புத்ரோ

நூறு மூர்க்கத்தனமுள்ள புத்ரர்களை விட ஒரு குணவான் புத்ரனுக்காக வரம் யாசிப்பது மேலானது என்ற
பொருள் கொள்ளலாமோ ?

பை டிடக்ஷன், நூறு தீய செயல்களால் பெறும் செல்வத்தை விட, ஒரு நல்ல செயலால் அடையும் செல்வம்
விரும்பத்தக்கது

எனவும் பொருள் கொள்ளலாம்.

மிக்க நன்றி.

தங்கள் தளத்திற்கு அடிக்கடி வரவேண்டும் என நினைப்பேன். இன்று ஒரு நல்ல முகமன் கூறி வரவேற்றமைக்கு
நன்றி.

சமஸ்த மங்களானி பவந்தி.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

முன்னமே நீங்கள் வந்திருப்பதாய் - மறதி அதிகம் உள்ளவனான - என் நினைவு. ஒருமுறை நாம் தொலைபேசியிலும் உரையாடியிருக்கிறோம்.( காதம்பரியின் கதை தொடர்பாக).

நீங்கள் சொன்ன பொருள்தான் சரியானது. நான் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க விரும்பாமல், அதன் த்வனியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முயற்சித்திருக்கிறேன். என் சொல்ப சமஸ்க்ருத அறிவால் மலையை இழுக்கிறேன்.

உங்கள் வார்த்தைகளில் இந்தப் பேரன் வாழ்கிறேன்.

நன்றி சுப்பு தாத்தா.

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி.

வணக்கம்.

அனுபவிக்கிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...