19.11.11

சேருமிடம்


























சேருமிடத்துக்கு
வழிகேட்டேன்.

மிக அருகில் 
வந்துவிட்டாய்.
இன்னும் சிறிது
நடந்தால்
சேருமிடம்
என்றார்
அந்தப் பெரியவர்.

சிறிது தொலைவுக்குப்
பின் குழம்பி
மீண்டும்
விசாரித்தேன்

அந்த இடத்துக்கு
நடந்தா?
இப்போதைக்குப்
போகமுடியாது.
வாகனம்
அமர்த்திக்
கொள்ளுங்கள்
என்றான் 
மறு இளைஞன்.

சேருமிடம்
அங்கேயே இருக்க
நானிருக்கும் இடம்
மட்டும்
மாறியபடி இருக்க

வெகுநாட்களாக
நடந்து கொண்டிருக்கிறேன்
சேருமிடம் நோக்கி.

7 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

மலையாளத்தில் “இதா, இவிடம் வரெ” என்று ஒரு திரைப்படம் வந்தது. வழி கேட்கும் நமக்குப் போகுமிடம் ஏதென்று தெரிகிறதா. நமக்கே தெரியாததால்தானே வழி கேட்கிறோம். வழி சொல்பவர்களும் நம்மை அலைக்கழிக்கிறார்கள் சேருமிடம் அங்கேயே இருக்க நாமும் எங்கேயோ இருக்கிறோம். பதில் தெரியாத கேள்விகள் விடை தேடிக் கொண்டே இருக்கிறோம். கேள்வி கேட்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதன் குறியீடோ.காரணமில்லாமல் தேர்ந்தெடுக்க மாட்டீர்களே சுந்தர்ஜி.

raji சொன்னது…

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஜி.வாழ்வில் நாம் எங்கு சேர வேண்டும்
என்பது புரியாமல்தான் நாம் அலைகின்றோம்.ஆனால் எங்கு சேர வேண்டுமோ அது சரியாக அங்கேயேதான் உள்ளது.நாம்தான் அறியாமைப் பாதையில் அலைந்து கொண்டிருக்கின்றோம்.பகிர்விற்கு நன்றி ஜி!

ரிஷபன் சொன்னது…

கவிதை சரியான இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டது.

ஹ ர ணி சொன்னது…

சேருமிடம் எனும் ஒற்றைச்சொல்லில் ஒளிந்துகொண்டிருக்கும் பொருண்மைகள் எண்ணிலடங்காதவை சுந்தர்ஜி.

Ramani சொன்னது…

சேருமிடம் என்று ஏதுமில்லை
சேர்ந்த இடம்தாம் சேருமிடம்
இது கூட சேர்ந்த பின்புதான் தெரிகிறது
முடியும் இடம் என்று ஏதுமில்லை
முடிந்த இடம் தான் முடியும் இடம்
இது கூட முடியும் போதுதான் புரிகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நிலாமகள் சொன்னது…

//அந்த இடத்துக்குநடந்தா?இப்போதைக்குப்போகமுடியாது.//

//நானிருக்கும் இடம்
மட்டும்
மாறியபடி இருக்க//

இளைஞ‌ர்க‌ள் எளிதாய் இல‌க்கைய‌டைவ‌திலேயே ப‌ழ‌கிவிட்ட‌ன‌ர்.ச‌ட்டை சின்ன‌தாகிப் போன‌து என்ப‌து போல் சென்ற‌டைய‌ வேண்டிய‌ இட‌த்தை 'இன்னும் வ‌ர‌லை' என்கிறோம் நாம்.

ஸ்ரீராம். சொன்னது…

//சேருமிடம்அங்கேயே இருக்க நானிருக்கும் இடம்மட்டும் மாறியபடி இருக்க//

ரசித்த வரிகள்.

பயணம் மாற்றிய பாதைகள்?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...