LIFE IN A METRO.
அநுராக் பாசுவால் 2007ல் இயக்கப்பட்ட இந்தப் படம் [ ஈயடிச்சான் காப்பியாக இருந்தாலும் ] வழக்கமான படங்களிலிருந்து விலகி சிக்கலான உறவுகள் குறித்துப் பேசியது. ஆனால் நான் எழுத நினைப்பது அந்தப்படத்தைப் பற்றியல்ல.
தோராயமாக 1500 நாட்களுக்கு முன்னால் ப்ரீதம் சக்ரபொர்த்தியால் (தமிழில் சக்கரவர்த்தி) இசையமைக்கப்பட்டு சய்யீத் காதிரி எழுதிய இன் தினோ பாடலைப் பற்றித்தான் மிகவும் சுறுசுறுப்பாய் இந்த வியாக்யானம்.
இடைவெளிகளை மாற்றி மாற்றி நிரப்பும் கிடாரின் குழைவும் மௌத் ஆர்கனின் நெளிவுகளும் நிரம்பிய மென்மையான ராக் வடிவப் பாடலான இப்பாடலை சோஹம் சக்ரபொர்த்தி பாட நமக்கு சந்தோஷம் வருகிறது. உற்சாகம் வருகிறது. யாருடைய தவறையும் மன்னிக்க வைக்கிறது. யாரிடமும் மன்னிப்புக் கோர வைக்கிறது.மொத்தத்தில் ஈகோவை விரட்டி போகோ பார்க்கும் குழந்தையாய்க் கிடத்தி விடுகிறது. நல்ல இசையும் எழுத்தும் செய்யும் மாயம் இவை. காலையில் காதில் பட்டுவிட்டால் குளியலறையிலோ சாலையின் போக்குவரத்து நிறுத்தத்திலோ அந்த நாள் முழுதும் முணுமுணுக்கவைக்கும் உத்தரவாதம் கொண்டது.
பாடலின் நடுவே வரும் மெல்லிய குறும்புகள் கொண்ட உரையாடலுக்கு மொழிபெயர்ப்புத் தேவையில்லை. இருந்தாலும் பெயர்க்காமல் இருக்கமுடியவில்லை.
ஆ: நானும் ஒன்னோட இன்னிக்கி அந்தேரிக்கு வர்றேன்.போலாமா?
பெ: ம்ம். ஆனா நா லேடீஸ் கம்ப்பார்ட்மெண்ட்ல போறேன்.
ஆ: நோ ப்ராப்ளம்.
பெ: என்ன நோ ப்ராப்ளம்? அதுல வரணும்னா நீ பொண்ணா மாறணும்.
ஆ: ஆனா ஜெனரல் கம்ப்பார்ட்மெண்ட்ல வர்றதுக்கு நீ ஆணா மாற வேண்டியதில்ல.
வழமை போல முழுமையாய் ரசிக்க என்னாலான வரைக்கும் மொழிபெயர்த்திருக்கிறேன்.
in dino, dil mera, mujhse hai keh raha
இப்போதெல்லாம் என் மனது சொல்கிறது
Tu khwaab saja, tu ji le jaradesign
இப்போதெல்லாம் என் மனது சொல்கிறது
Tu khwaab saja, tu ji le jaradesign
கனவு காணவும் நேர்த்தியாய் வாழவும்.
Hai tujhe bhi ijaazat, karle tu bhi mohabbat
Hai tujhe bhi ijaazat, karle tu bhi mohabbat
உனக்காக நீ காதலிக்கவேண்டும்
அதற்குரிமையுண்டு உனக்கு
Berang si hai badi zindagi, kuch rang toh bharoon
Berang si hai badi zindagi, kuch rang toh bharoon
என் வாழ்க்கை வெளிறிப்போய்விட்டது
அவற்றை ஏதோ வண்ணங்களால் நிரப்புகிறேன்
Main apni tanahaayi ke waaste ab kuchh toh karoon
என் தனிமைக்கும் ஏதாவது செய்யவேண்டும்
Main apni tanahaayi ke waaste ab kuchh toh karoon
என் தனிமைக்கும் ஏதாவது செய்யவேண்டும்
jab mile thodi fursat , khud se karle mohabbat
நேரம் வாய்க்கையில் உன்னை நீ நேசி
நேரம் வாய்க்கையில் உன்னை நீ நேசி
Hai tujhe bhi izaazat, karle tu bhi mohabbat
உனக்காக நீ காதலிக்கவேண்டும்
உனக்காக நீ காதலிக்கவேண்டும்
அதற்குரிமையுண்டு உனக்கு
Usko chhupaakar main sabse kabhi le chaloon kahin door
Usko chhupaakar main sabse kabhi le chaloon kahin door
அவளை ஒளித்துவைத்து எங்காவது
தொலைதூரத்துக்குக்
கொண்டுசெல்ல வேண்டும்
Aankhon ke pyaalon se pita rahoon uske chehre ka noor
Aankhon ke pyaalon se pita rahoon uske chehre ka noor
என் பார்வையால் அவளின் வசீகரத்தைப் பருக விரும்புகிறேன்
Is zamaane se chhupakar , puri karloon main hasrat
Is zamaane se chhupakar , puri karloon main hasrat
இந்த சமூகத்திலிருந்து மறைந்து என் துயரத்தைத்
தணிக்க விரும்புகிறேன்.
Hai tujhe bhi ijaazat, karle tu bhi muhabbat
Hai tujhe bhi ijaazat, karle tu bhi muhabbat
உனக்காக நீ காதலிக்கவேண்டும்
அதற்குரிமையுண்டு உனக்கு.
பிடித்தவர்களுக்கு மறுபடியும் கேட்கத் தோன்றும் .
பிடிக்காதவர்களுக்கும்தான்.
7 கருத்துகள்:
படம் கேள்விப்பட்டதில்லை. பாடல் காட்சியிலிருந்து யூகிக்க முடிகிறது (ஒரு இங்லிஷ் படத்தைக் கூட விட்டு வைக்க மாட்டாங்க போலிருக்கே?).
பாடலின் இசை ரசித்துத் தாளம் போட வைக்கிறது. தொடக்கத்தில் கிடார் மணிகளை உருட்டியதுபோல கிண்கிணி. nice selection. இப்போ படத்தைப் பார்க்க வேண்டும் போலிருக்கு.
என் வாழ்க்கை வெளிறிப்போய்விட்டது
அவற்றை ஏதோ வண்ணங்களால் நிரப்புகிறேன்//
சமூகத்திலிருந்து மறைந்து என் துயரத்தைத்தணிக்க விரும்புகிறேன்.//
சுக ராகம் சோகம்தான் எனக் கொண்டாடுவதால் தானோ சில நேரம் வாழ்வெனும் பாடலில் சோகரசம் ததும்பத் ததும்ப சில அடிகள்...! இதுவும் கடந்து போகும்!
நேரம் வாய்க்கையில் உன்னை நீ நேசி
இதைத்தான்.. இதைத்தான் சொல்லத்தெரியாமல்.. அல்லது தெரிந்தோ சொல்லிக் கொண்டிருக்கிறோம்..
When I watched this movie for the 1st time-- I thought it was a damn brilliant movie... But one fine day, I happened to watch an old Hollywood movie- "The Apartment". I realized that the entire "Sharman Joshi-Kangna Raunat" track was ripped off from this movie! But a good movie nevertheless... I esp. like Konkona-Irfan track...
Anyway... இந்த post அந்த படத்த பத்தி இல்ல! So we'll leave it there.. :)
This is a brilliant song! Pritam is a really good composer. He has a unique combination of 'Old Bengali Rock band' and 'classical' touch...
But there is one other song in this movie..."ristey toh nahi rishton ki parchaayiyaan mile
" have you heard it? the lyrics is brilliant in this one! kind of an oxymoron.. Depicting the contradictions in the Metro-life... I am sure, you'll appreciate it...Elaborates so well about the fine threads of fabric falling apart in -a life in a metro...please do listen to it, if you haven't done before...
The translation is superb!
அன்பு சுந்தர்ஜி,
நீண்ட இடைவெளிக்கு பின் உள்ளே வருகிறேன்... சூரிய வெளிச்சம் கூசுகிறது எல்லாம் புதிதாய்த் தோன்றுகிறது... மஞ்சு மூடிய கண்ணாடி வழி காண்பதாய் இருக்கிறது எல்லாமும். அதனால் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கலாம் சொல்லவருவதில்...
அழகான படம் ரொம்பவும் பொயட்டிக் ஃப்ரேம்ஸ் இருக்கும் படம்... எனக்கு ஷில்பா...ஷைனி அஹுஜாவின் கதை பிடித்திருந்தது... ஆனால் தைர்யம் இல்லாத முடிவு... இர்ஃபான் மற்றும் கொங்கொனா... அழகு...
ப்ரீதம்மின் இசை சொல்லத்தகுந்தது... ஆனால் பாடல் இத்தனை பொருள் நிறைந்தது என்பது எனக்குத் தெரியவில்லை... ஹிந்தியில் பூசிய தார் என் முகத்திலும்... அற்புதமான பாடலாய், நிறைய படிமங்களாய் கொண்டதாய் இருக்கிறது... மொழி பெயர்ப்பிற்கு அன்பும் நன்றியும்...
துயரம் தணிக்க சமூகமற்ற தனிமை தேவைப்படுகிறது வாஸ்தவம் தான்... காணவும் நேர்த்தியாய் வாழவும்... அழகான வரிகள்...
அன்புடன்
ராகவன்
பிடித்தவர்களுக்கு மறுபடியும் கேட்கத் தோன்றும் .பிடிக்காதவர்களுக்கும்தான்.
:)
paatu already kettirukiren.
meaning ippothaan theriyum.
azhakaana varikal..
voice yaarudaiyathu??
sorry sorry...
padiyavarai solliyirukkeenga.
naanthaan sariya note pannala.
:)
கருத்துரையிடுக