தாமிரபரணியும்
குறுக்குத்துறையும்
உனக்குப் புரியாது.
காவிரியும்
கொள்ளிடமும்
எனக்குத் தெரியாது.
பாலாறு வந்தாலும்
வாராதே போனாலும்
அதுபோல வாராது.
வெட்டாறும்
சங்கராபரணியும்
அவனுக்குப் புரியாது.
நதியில்லாதவனுக்குச்
சிறுவாணி போல் அமையாது.
குளத்தின் சாகசங்கள்
ஏரிகள் அறியாது.
ஏரியின் படகுக்கோ
வேறெதுவும் ஆகாது.
கடலின் சூட்சுமங்கள்
கிணறுகள் உணராது.
கிணற்று மீனின்
ரகசியங்கள்
கடல்மீன் அறியாது.
அருவியின் உன்மத்தம்
சுனைநீர் தாங்காது.
நகரவாசிக்குக்
குழாய்நீர் போல
ஒரு நீரும் கிடையாது.
போத்தல் நீர் பயணிக்கு
பிஸ்லெரி பக்கத்தில்
அக்வா ஃபினா நெருங்காது.
நீரெல்லாம் ஒன்றானாலும்
நீரெல்லாம் ஒன்றாகாது.
குறுக்குத்துறையும்
உனக்குப் புரியாது.
காவிரியும்
கொள்ளிடமும்
எனக்குத் தெரியாது.
பாலாறு வந்தாலும்
வாராதே போனாலும்
அதுபோல வாராது.
வெட்டாறும்
சங்கராபரணியும்
அவனுக்குப் புரியாது.
நதியில்லாதவனுக்குச்
சிறுவாணி போல் அமையாது.
குளத்தின் சாகசங்கள்
ஏரிகள் அறியாது.
ஏரியின் படகுக்கோ
வேறெதுவும் ஆகாது.
கடலின் சூட்சுமங்கள்
கிணறுகள் உணராது.
கிணற்று மீனின்
ரகசியங்கள்
கடல்மீன் அறியாது.
அருவியின் உன்மத்தம்
சுனைநீர் தாங்காது.
நகரவாசிக்குக்
குழாய்நீர் போல
ஒரு நீரும் கிடையாது.
போத்தல் நீர் பயணிக்கு
பிஸ்லெரி பக்கத்தில்
அக்வா ஃபினா நெருங்காது.
நீரெல்லாம் ஒன்றானாலும்
நீரெல்லாம் ஒன்றாகாது.
நன்றி- ஆனந்த விகடன்- 04.01.2012
21 கருத்துகள்:
[புத்தாண்டு வாழ்த்துக்கள்]
31/12/2011 04:42
ஆனந்த விகடனில் வெளிவந்த நீர்த்துவம் கண்டேன். வாழ்த்துக்கள்.
எப்படி இருப்பினும்
நீரின்றி அமையாது
கவிதை.
காலங்களால் நீர்த்துப்போகாத கவிதை நீர்த்துவம்.தொடர்க.நூல் வடிவம் எப்போது?விரைவில் பார்க்க ஆசை.
வாவ்...தண்ணீரைத் தொட்டு வாழ்வின் தத்துவத்தையே அலசிட்டீங்க சுந்தர்ஜி !
itha padikkum pothu pala vishayangal thoniththu.. solli mudiyaathu...
ovvoruththarum- ennathaan onru endraalum- vevveru thaan... athilmaruppatharkku ondrum kidayaathu!
brill.... :D
அப்படி போடு ...
அப்போ தண்ணினா என்ன? :))
jokes apart
எல்லாம் ஒன்று , எல்லாம் வேறு ..
எல்லாம் தெரியும் எதுவும் தெரியாது
இப்படிதான் நானும் ...
அருமையான ,கோபமான ,வெளிப்பாடு.
மீதமில்லாமல் போகும் வாழ்க்கை.நீர்த்தத்துவம் அருமையாய்ச் சொன்’நீர்’கள் போங்கள்.நீரெல்லாம் ஒன்றில்லை.அருமை ஜி.
ஒன்றானாலும் ஒன்றில்லை.சூப்பர் தோழர்.
நீர்த்துவம் தத்துவம்.அரண்டுட்டேன் போங்க சுந்தர்ஜி சார்.இப்போ என்ன ஆயிடுச்சின்னு இப்படி பயமுறுத்தறீங்க?
விகடன் நீர்த்துவம் அருமை-பெருமை-நீருக்காய் காயாதவன்.
நீர்த்துப் போகாமல் கட்டித் தயிராய் உறைந்துவிட்டது சொல்வனத்துக் கவியருவி.
கடலின் சூட்சுமமும்-கிணற்று மீனின் ரகசியமும்-அருவியின் உன்மத்தமும் கவியுள்ளத்துக்கே வெளிச்சம்.
கடைசி வரி பன்ச் தி க்ரேட்.முனைவர்.அறிவொளியை ஞாபகப் படுத்திற்று).
வலியின் எதார்த்தமான பதிவு இந்த கவிதை
நீரெல்லாம் ஒன்றானாலும்...
எங்க சார்
குறைந்தபட்சம் அதுவாவது நிகழட்டுமேனுதான்
நானும் பார்க்கிறேன்...
மிக்க அன்புடன்
-இயற்கைசிவம்
மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.
புத்தாண்டு வாழ்த்துகள் ஜி! எல்லாத் தண்ணியும் ஒன்னுபோலக் கிடையாதுங்கறது புரியுது. :-))
நேர் பொருளாகவும் மறை பொருளாகவும் பலவாறு புரிதலை தருகின்றன ஜி
வாழ்த்துகள்
நீரெல்லாம் நீரல்ல.காற்று நீரைக் கடத்திப் போக முடியும் எனக் கண்டுகொண்டதால் விகடன் நீர் பருகத் தாமதம். B-)
நீர்த்துவம் நன்று.
சுந்தர்ஜி! கலக்கிட்டீங்க.
நீரெல்லாம் ஒன்றானாலும்
நீரெல்லாம் ஒன்றாகாது.
நச்.
//நீரெல்லாம் ஒன்றானாலும்
நீரெல்லாம் ஒன்றாகாது.//
எக்ஸெல்லண்ட்.
கருத்துரையிடுக