
மிக மங்கிய வெளிச்சத்துடன்
கொட்டிக் கொண்டிருக்கிறது பனி.
எந்த இயக்கமும் இல்லை.
எந்த ஓசையும் இல்லை.
நாய்களைக் காணவில்லை தெருக்களில்.
எங்கோ உறைந்து கிடக்கிறார்கள் இரவுக் காவலாளிகள்.
கூடவே மயங்கித் திளைக்கிறது என் நகரம்.
உறக்கமின்றி நின்றிருந்தேன்
தெருவின் நிசப்தத்தைச் சுவைத்தபடி.
அப்போது நறுமணங்கள் பரவ
மிதந்து சென்றார் கடவுள் தெருவின் நடுவே.
இமைத்துத் திறந்தேன் மறுபடியும்.
தெருவில் நன்றாகக் கொட்டியபடி
இருந்தது பனி.
3 கருத்துகள்:
இயற்கையே கடவுள் .அதிர்ஷ்ட்டகாரர் நீங்கள்
அமைதி ததும்கிற படம். நல்ல வரிகள்.
//அப்போது நறுமணங்கள் பரவ
மிதந்து சென்றார் கடவுள்
தெருவின் நடுவே.//
என்பதோடு முடித்திருந்தால் உருவ அழகு கூடியிருக்குமோ எனத் தோன்றுகிறது.
சில கவிதைகளில் எழுதிய பின் கைவைக்கத் தோன்றுவதில்லை.இதுவும் அப்படித்தான்.ஆனாலும் வடிவம் பற்றிய உங்கள் எண்ணம் ஏற்புடையதுதான் சைக்கிள்.13 வருஷங்களுக்கு முந்தைய என் மனம் அது.
கருத்துரையிடுக