
நெருங்கி விட்டதாய்
நினைக்கிறாய் நீ.
உன் பயணமே
துவக்கம் கொள்ளவில்லை
என்கிறது என் மனம்.
வண்ணங்களை விரும்புகிறேன்
என்கிறாய்.
நிறங்களை விட்டுவிடு
முதலில் மனங்களை
நேசி என்கிறேன்.
இசையால் கரைகிறேன்
எனச் சொல்கிறது
உன் வார்த்தைகள்.
உன் செல்ல மகளின்
பள்ளிப் பிரதாபத்தை
ஒருமுறையேனும்
கேளேன் எனக் கசிகிறது
என் விழிகள்.
மழையை
மிக நேசிக்கிறேன் என்கிறாய்.
உன் குடையை மடக்கி
மழையில் நனை
மழையை உணர் என்கிறேன்.
நெருங்கிவிட்டதாய்
நினைக்கிறாய்.
புன்னகைக்கிறேன் நான்.
1 கருத்து:
நானும் புன்னகைக்கிறேன் .
அவரவர் பிடித்தம் அவரவர்க்கு.இல்லையா சுந்தர்ஜி
கருத்துரையிடுக