
இருப்பதில் ஒப்பற்ற ஆடை.
வெட்கம் பூசிய ஒப்பனை.
பரபரக்கும் ஆர்வம்.
மொடமொடக்கும்
தடுக்கும் மொழி.
பரவசம் தளும்பும் வசீகரம்.
காற்றில் கரையும் சுகந்தம்.
நன்றாகத்தான் இருக்கிறது
ஒரு நிகழ்வுக்கு முந்தைய உன் பரபரப்பு
மழைக்கு முந்தைய பத்து நிமிஷம் போல.
II
ஒப்பனை என்பது ஒரு பாவனை
என்றுணர்.
ஒப்பனை நிலையற்றது.
மேலும் ஒப்பனையை
மெருகேற்ற முடியும்.
கலைத்தல் உருவாக்குதலை
விட மிக எளிது.
உனக்கான ஒப்பனையும்
பிறருக்கான ஒப்பனையும்
வேறு வேறு எனும்போது
ஒப்பனை ஒரு பாவனை
என்றுணர்.
1 கருத்து:
கவிதையின் தளம்,சொல்ல வந்ததை நளினமாக சொல்லும் மொழி இரண்டுமே உயர்வாக இருக்கிறது. படிக்கச் சொல்லத் தூண்டுவதாக இருக்கிறது.நன்றி.
கருத்துரையிடுக