15.3.10

அ-கவிதை



உன் சுயபுலம்பலைச் சொல்ல எழுதாதே கவிதை.

கோபம் அதிகமெனில் தோப்பில்
தனியே நின்று உரக்கக் கத்து.

சோகம் தாளவில்லை எனில்
துவைகல்லில் அமர்ந்து பாரம் கரைய அழு.

என்ன பசி என்றாலும் இரை தேடப் பழகு.

காதலிக்க வாய்த்தால் காதலி.
காதலில் தோற்றால் தாடி வளர்த்து
புல்புல்தாரா வாசி.

என்னதான் ஆனாலும்
தயவு செய்து கவிதை மட்டும் எழுதாதே
கொஞ்ச காலத்துக்கு.

2 கருத்துகள்:

பத்மா சொன்னது…

ஏனாம்?

சைக்கிள் சொன்னது…

என்ன மன உணர்வில் இந்த கவிதை எழுதப் பட்டிருக்கும் என ஊகிக்க முடிகிறது. ஆனால் பலமாகச் சிரிக்க வைத்தது கவிதை. சிரிப்பினூடே என் முகமும் தெரிந்தது தெளிவாக. பிழைச்சுபோறோம் விட்ருங்க : )

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...