
பிணந்தின்று
பறக்கும் பறவையாய்
நீயும்
இடமறியாது வீழும்
எச்சங்களாய் உன்
நீயும்
இடமறியாது வீழும்
எச்சங்களாய் உன்
அரசியலும்.
புகட்டப்படுகிறது
நாட்காட்டியின்
தாளைக் கிழிப்பதான
அலட்சியத்துடன்
உளுத்துப்போன சட்டங்கள்.
எதிர்பார்த்து எதிர்பார்த்துப்
புளித்து நுரைக்கிறது
என்றோ அரைத்த
மதியற்ற உன்
பேதலிக்கும் திட்டங்கள்.
கவணுக்கும் இலக்குக்கும்
இடையே சிக்கிய கல்லாய்த்
தத்தளிக்கிறது
வாழும் காலம்.
புகட்டப்படுகிறது
நாட்காட்டியின்
தாளைக் கிழிப்பதான
அலட்சியத்துடன்
உளுத்துப்போன சட்டங்கள்.
எதிர்பார்த்து எதிர்பார்த்துப்
புளித்து நுரைக்கிறது
என்றோ அரைத்த
மதியற்ற உன்
பேதலிக்கும் திட்டங்கள்.
கவணுக்கும் இலக்குக்கும்
இடையே சிக்கிய கல்லாய்த்
தத்தளிக்கிறது
வாழும் காலம்.
முட்டாள்!
யுகத்தைச் சுட்டெரிக்கும்
புரட்சியின் கொடுந்தீக்காய்
பெருமலை உச்சிக்கும்
அதல பாதாளத்துக்கும்
இடையே காத்திருக்கிறது
சபிக்கப் பட்ட எம்
குடிமக்களின் எதிர்காலம்.
யுகத்தைச் சுட்டெரிக்கும்
புரட்சியின் கொடுந்தீக்காய்
பெருமலை உச்சிக்கும்
அதல பாதாளத்துக்கும்
இடையே காத்திருக்கிறது
சபிக்கப் பட்ட எம்
குடிமக்களின் எதிர்காலம்.
மறைந்த பின்னும்
சாகாது வாழ
மீதமிருக்கிறது
உன் முடைநாற்ற
சவத்து வாழ்க்கை.
4 கருத்துகள்:
//மறைந்த பின்னும்
சாகாது வாழ
மீதமிருக்கிறது
உன் முடைநாற்ற
சவத்து வாழ்க்கை.//
இதுதான் நகரா நரக வாழ்க்கையின் வாயிலா? சுந்தர்ஜி
இதுதான் அரசியல் சுந்தர்ஜி.நடுவில் அகப்பட்ட அப்பாவி ஜென்மங்கள் மக்கள்தான் பகடைக்காய்கள் இவர்களுக்கு !
உண்மை உண்மை ..
கைலாகாத்தனம் மனதை கீறுகிறது
நாட்காட்டியின்
தாளைக் கிழிப்பதான
அலட்சியத்துடன்
உளுத்துப்போன சட்டங்கள்.
இது.. இது
ஒன்றே போதும் சுந்தர்ஜி.
கருத்துரையிடுக