
தூண்டில்புழுவுக்கும்
கொத்த வரும் மீனுக்கும்
நடுவில் மிதக்கிறது மரணம்.
தூவிய விதைக்கும்
விருட்சத்துக்கும் இடையில்
கூர் தீட்டப்படுகிறது கோடரி.
நெடுநாள் வாழ்தலுக்கும்
இளமையில் இறத்தலுக்கும்
இடையே சிதறிக்கிடக்கிறது வாழ்க்கை.
கொடுத்ததை மறந்தவனுக்கும்
பெற்றதை நினைப்பவனுக்கும்
மத்தியில் திறந்திருக்கிறது
சொர்க்கத்தின் கதவு.
10 கருத்துகள்:
//கொடுத்ததை
மறந்தவனுக்கும்
பெற்றதை
நினைப்பவனுக்கும்
மத்தியில்
திறந்திருக்கிறது
சொர்க்கத்தின் கதவு//
ஆஹா ... ஆஹா...
எழுதியவனுக்கும், படிப்பவனுக்கும் இடையே படபடக்கிறது அதன் அர்த்தம்.
இறுதி வரிகளின் கருத்து மிக அழகு,மேன்மை.
சந்தோஷம்.
சின்ன சின்ன வரிகளில் பெரிய பெரிய தத்துவம்
சின்னதுக்கும் பெரியதுக்கும் நடுவிலே நிஜம்
மௌனத்தை அவிழ்க்க வைக்கும் உங்கள் திறமைக்கு ஒரு பலே :)
வாழ்வுக்கும் மரணத்துக்கும் இம்மியளவு இடைவெளிதான்.எதிர்பாராமல் அதற்குள் ஏமாந்தும்போகிறோம் !
சொல்வதற்கும்
சொல்லாமல் விட்டதற்கும்
இடையே
புன்னகைக்கும்
ஒரு கவிதை.
கதவு(கவிதை) எனது மனதில் ஒரு வெளிச்சத்தை தருகிறது ஜி
nallaayirukku....:)
மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி நிலாமகள்.
படபடக்காமல் வாசித்த வாசனுக்கு நன்றி.
உறுதியாய் இறுதி வரியைப் பாராட்டிய சைக்கிளுக்கு நன்றி.
நன்றி பத்மா நிஜத்தை கண்ட பார்வைக்கும், மௌனத்தை அவிழ்த்த ரசனைக்கும்.
கவனமாயிருப்பவர்கள் கவிதை எழுதிவிடுகிறார்கள்.இல்லையா ஹேமா?
அதைச் சொன்ன மதுமிதாவுக்கு ஒரு ஜே.
வெளிச்சத்தின் வழி மற்றொரு கவிதையைப் படிக்கலாமா கண்ணன்?சீக்கிரமா எழுதுங்க.
இத மட்டும் சொல்லிட்டுக் காணாம பொயிடுறீங்க.நியாயமா ரசிகை?
கருத்துரையிடுக