
நாய்களைக்
கொஞ்சிக் கட்டிவிட்டு
பாலுறைகளை எடுத்தபடி
வருகையில் நீர் நிரப்பும்
விசையை இயக்கியபடியே
துவைக்கும் இயந்திரத்தின்
விசையையும் திருப்பியபடி
பாலைக் கொதிக்க வைத்து
இடைவெளியில்
விடுபட்ட பாத்திரங்களைத்
தேய்த்துக் கழுவி பொங்கிய
பாலை இறக்கி ஆற்றிக்கொண்டே
இட்லியுடன் சட்னியோ
ப்ரெட்டுடன் சீஸோ
காய்கறியுடன் பருப்பும்
சாம்பார் கொதிக்கவிட்டு
குழந்தைகளை எழுப்பி
ட்ரிக்னாமெண்ட்ரியும்
டாகூரின் கவிதையும் கேட்டு
இடவேண்டிய கையொப்பமிட்டுக்
குளிக்கவைத்து இடைவெளியில்
சீருடை தயார் செய்து
சாப்பிட்டுக் கையசைத்து
எல்லோரும்
பறந்த பின் பொழுதில்
மெல்லக் கேட்கிறது
இரக்கமின்றி
அதிகாலை எழுப்பிய
அதே கடிகார மணியோசை.
8 கருத்துகள்:
இவ்ளோதானா ?வேலைகள்?
துரத்தும் முள்ளின் ஒரு கூறு பத்மா.ஒருநாள் முழுதுமெனில் அலுத்துவிடும் கவிதை இவ்வளவுமா என.
சரி... சரி. நீங்கள் முதலில் எழுதிவீட்டீர்கள்! கந்தர்வனின் சிறுகதை 'இரண்டாம் ஷிப்ட்' (தலைப்பு இதுதான் என்று நினைக்கிறேன்) இந்த பொருளை வலிமையாகப் பேசும். முடிந்தால் படிக்கவும்.உங்கள் கவிதையில் உள்ள துரிதம் பேசுபொருளுக்கு வெகு பொருத்தம்!
//மெல்லக் கேட்கிறது
இரக்கமின்றி
அதிகாலை எழுப்பிய
அதே கடிகார மணியோசை//
இனி......?
துரிதத்தை நுட்பமாய் உணர்ந்த உங்கள் ரசனைக்கு ஒரு சலாம் சைக்கிள்.கந்தர்வனின் கதையை எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. வாசிக்கிறேன்.
அது ஒரு இடைவேளையின் பின் மீண்டு தாக்கும் நாளெல்லாம்.தெரிந்தே கேட்கிறீர்களே வாசன்?
:)
intha ottamthaan nammai sorvadaiyaamal vaikkuthunnu naan ninaikkiren sundarji...
அப்பப்பா... என்ன ஓட்டம்...! உயிர்ப் பொருள் தீரும் வரை ஓடிக் கழிப்போம் இறையருளால்!!
கிழிக்கும் முள்ளிசை.
கருத்துரையிடுக