
இந்தச் செய்தியை என் கண்ணீரால் எழுதுகிறேன்.
என் ஆன்மாவின் சுகத்திற்கு ஒரு காரணமான மறக்கமுடியாத இசைக்குயில் ஸ்வர்ணலதாவை இன்று நான் இழந்தேன்.
அவர் பாடிய எத்தனையோ பாடல்கள் ஏதேதோ சூழ்நிலைகளில் என்னுடன் பயணித்திருக்கிறது.
அவற்றில் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என்னைக் கரைய வைக்கும் போறாளே பொன்னுத்தாயீ பாடலைப் பாடுவதற்காக மட்டுமே பிறந்தாயோ என் ஸ்வர்ணமே?
மாலையில் யாரோ மனதோடு பேச என்று கொஞ்ச எந்தக் குரல் வரும்?
உடல் ரீதியாக அநுபவித்த உன் வேதனைகள் நீங்கியது எங்களின் வேதனையாக.
உன் ஆன்மா உன் குரல் போன்ற இனிமையுடன் சாந்தி பெறட்டும் என் குயிலே.
8 கருத்துகள்:
செய்தி எங்களையும் சோகப்படுத்தியது. ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம்.
வருந்துகிறேன்.
மாலையில் யாரோ ... அந்த பாடலில்
//கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது//
நினைவுக்கு வருகிறது. நெஞ்சம் கனக்கிறது
ஆத்தோரம் தோப்புக்குள்ளே .......
என் ஆதர்ச பாட்டு
அத்தனையும் பொய்யாச்சு ராசா ..
ஒத்தையிலே போச்சு அந்த ரோசா ..
கலைஞர்களுக்கு மரணமில்லை
:(
மாலையில் யாரோ.. மனதோடு பேச
இந்த வரிகளை வாசிக்கும்போதே மனசுக்குள் அதன் இசை வடிவம்.
நாம் காலத்தின் கைகளில் எப்போதும்
சோகம் பகிரும்போது குறைவதை உணர்கிறேன் நிலாமகள்.
கவிதையும் இசையும் கைகோர்க்கும்போது சொர்க்கம் சமீபிக்கிறது என்பதை நினைவூட்டும் பாடல் அது.இந்த ஐஸ்க்ரீமைக் காலம் நமக்கு முன் சுவைத்துச் சென்றது வேல்கண்ணன்.
சோகத்தின் மொழி ஆத்தோரம் பாட்டு.கலைஞர்களுக்கு மரணமில்லை.பௌதீக இழப்பு சில காலம் ரணமாக்குகிறது இனி ஒரு புதிய இசைவடிவத்தை இந்தக் குரல் வடிக்காது எனும்போது.
முதல் சந்திப்பே நமக்கு ஒரு மரணத்தின் வாயிலில் நிகழ்கிறது அஷோக்.வாருங்கள் என்றும் போய்வாருங்கள் என்றும் சொல்லிக்கொள்வதில்லை நம் கலாச்சாரத்தில்.:(
உண்மைதான் ரிஷபன்.இது தெரிந்தும் ஆடுகிற ஆட்டம் மசான வைராக்யத்தை நினைவுபடுத்துகிறது.
'போ..றாளே பொன்னுத்தாயி..போகிற போக்கில் மனசைத் தொட்டு
தண்ணீரும், சோறும் தந்த ஊர விட்டு'
மனம் முழுதும் சோகத் தீ பரப்பும் சங்கீதம்.
படபடப்பு அடங்காது இனி அதைக் கேட்க்கும் ஒவ்வொரு முறையும்.
சோகத்தீ!சரியாச் சொன்னீங்க வாசன்.ஒண்ணை இழக்கும்போது அதோட வலி இன்னும் அதிகமாத் தெரியுது வாசன்.
கருத்துரையிடுக