
இருப்பிலேயே
மிகவும்
தெளிவானதும்
உன்னதமானதும்
கடவுள் குறித்த
தத்துவங்கள்தான்.
காலங்களைக்
கடந்து நிற்பவை
எல்லாம் கடவுள்.
மதங்களின் எல்லைகள்
அற்றவை கடவுள்.
யாரும் எளிதில்
பின்பற்றமுடியாத
எளிமைதான் கடவுள்.
நேர்மை அன்பு
அர்ப்பணிப்பு-
இவையெல்லாம்
கடவுள்.
நம்பிக்கையும்
தோல்வியும்
கடவுள்.
அறியாமையும் குழந்தையும்
பெண்மையும் கடவுள்.
எல்லாவற்றையும்
விட்டுக்கொடுத்தல் கடவுள்.
பொறுத்து மறப்பது கடவுள்.
இவையெல்லாம்
உங்களிடமிருந்தால்
நீங்களே நீக்கமற
நிறைந்திருக்கும் கடவுள்.
உன்னத இசை கடவுள்.
நற்பண்பெல்லாம் கடவுள்.
மன்னிப்புக் கோர்பவரும்
மன்னிப்பவரும் கடவுள்.
எதிரில் இருப்பதை
இல்லாத பொருளில்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும்
நிரூபணங்கள் தேடுகிறோம்.
சந்தேகங்கள் எல்லாம்
அற்ற பின்போ அறாமலோ
இயற்கையின் மடியில்
மரிக்கிறோம்.
7 கருத்துகள்:
என்ன ஒரு ஒற்றுமை.. நமக்குள்.
இவையெல்லாம் உங்களிடமிருந்தால் நீங்களே நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள்.
இறை தத்துவம் மிக எளிமையாய்.
எதிரில் இருப்பதை இல்லாத பொருளில் தேடிக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் நிரூபணங்கள் தேடுகிறோம்.சந்தேகங்கள் எல்லாம் அற்ற பின்போ அறாமலோ இயற்கையின் மடியில் மரிக்கிறோம்.
வாஸ்தவமான பேச்சு. தேகம் சந்தேகமாய் இருந்தால் இப்படித்தான்.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்...
கடவுள் எங்கில்லை.அங்கிங்கெனாதபடி
நீக்கமற நிறைந்த பரம் பொருளல்லவா அவன். அழகான பதிவு நண்பரே.
எப்போது நாம் நம் அகந்தையைத் துறக்கிறோமோ அப்போது கடவுளின் வசிப்பிடத்தின் வாயில் திறக்கிறது.உருவம் பற்றியும் ஆதாரம் பற்றியும் தோற்றம் பற்றியும் மூலத்தைதேடிக் கொண்டிருப்பவர்கள் கையில் ஐஸ்க்ரீமுடன் பேசிகொண்டிருப்பவர்களை நினைவுபடுத்துகிறார்கள்.நம் ஒற்றுமை ’உடையவரின் பெருமை.அயலாரின் பொறாமை’ ரிஷபன்.
சிவவாக்கியரின் தோள்களில் கைபோட்டபடி என்னுள்ளில் வந்தமைக்கும், உங்கள் ஆழ்ந்த ரசனைக்கும் நன்றி மோகன்ஜி.அடிக்கடி வாருங்கள்.
பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு, புரியாமலேயிருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன். கண்ணதாசனை நினைவுகூர வைத்து விட்டீர்கள், சுந்தர்ஜி.
என்னளவில் கடவுள்த்தன்மையின் கூறுகளாக இவை தெரிந்தனவே தவிர பெரியோரையெல்லாம் நினைவுகூறவைக்கும் முதிர்ச்சி எனக்கில்லை வாசன்.என்னைக் குறுக வைத்துவிட்டீர்கள் வாசன்
கடவுளாய் இருப்பதை விட
கடவுளின் தன்மையுடன்
இருப்பதும் உயர்வு.
அன்பு நிறைந்தவர்கள் எல்லோருமே கடவுள்தான் சுந்தர்ஜி.நீங்கள்கூட எனக்கு !
கருத்துரையிடுக