
I
எழுதியிருக்கலாம்
தோன்றுகிறது ஒரு நேரம்.
எழுதாமல்
இருந்திருக்கலாம்
தோன்றுகிறது இன்னொரு நேரம்.
ஏதாவதொன்று
தோன்றியபடித்தான்
இருக்கிறது எந்நேரமும்.
II
அவள் வந்தால் இப்படி-
வராது போனால்
அப்படி என்றும்
யூகிக்க முடிகிறது.
என்னவானது
என்று சொல்லவாவது
வரத்தான்
வேண்டியிருக்கிறது அவள்.
III
எங்கேயோ பார்த்ததாகத்
தோன்றாத வரையிலும்
இவளை
அமைதியாகப் பார்க்க முடிகிறது
பின்னொரு முறை
அவளைப் பார்க்கும் வரை.
9 கருத்துகள்:
முதல் பார்வைக்கும், அடுத்த பார்வைக்கு(ம்)மிடையில், அப்படியென்ன நடந்து விடுகிறது, சுந்தர்ஜி....?
தவிப்பு,தவிப்பும் - நிலைபெறுதலும்,ஊசலாட்டத்தின் கண நேர அமைதி-பின்-நிலைஇழப்பு?
அவள் வந்தால்
இப்படி-
வராது போனால்
அப்படி என்றும்
யூகிக்க முடிகிறது.
என்னவானது
என்று சொல்லவாவது
வரத்தான்
வேண்டியிருக்கிறது
அவள்.
ஆஹா அஹா..
படிக்கும் போதே கண்ணு சொருகுது.
முதல்
என் அநேக நேரத்து நிலையை
அப்படியே கவிதையாக
இரண்டாவது
கமலேஷ் சொன்னது போல்...
//கண்ணு சொருகுது//
அப்படியே ... கிடக்கிறேன்
மூன்று
அப்படி பார்த்தாலும் சொல்ல முடியவில்லை ஜி
சொன்னாலும் நம்மை ஏற இறங்க பாக்குறாங்க .. ஜி
(சொந்த அனுபவம் தான் ஹி ஹி.. )
சுந்தர்ஜி...வார்த்தைகளைக் கட்டியாள்கிறீர்கள் !
வெவ்வேறு சூழ்நிலைகள் பார்வையின் கோணத்தையும் மாற்றுகின்றன வாசன்.
சரியாய்ச் சொன்னீர்கள் சைக்கிள்.நன்றி.
களிப்பூட்டுது கமலேஷ் உங்கள் கண் சொருகல்.தொடரட்டும் ரசனை.
வேல்கண்ணன்!கொஞ்சம் வித்யாசமா இருந்தா அப்பிடித்தான் பாப்பாங்கப்பூ.கண்டுக்கிடாம கவிதய எளுதிட்டே போங்க.
கட்டிப்போடுவது உங்கள் எழுத்தும் ரசனையும்தான் ஹேமா.
:)
yellaame nallaayirukku...
இப்படி அப்படின்னு எதோ ஒன்று தோன்றியும் தோன்றாமலும் ,அவளை வராது வரச்சொல்லி பாராமல் பார்த்து விடுவீர்கள் தானே ?
சும்மா கிண்டல் ஜி
பின்னே நான் நினைப்பதை எல்லாம் அனைவரும் எழுதிய பின் எனக்கு ஏதும் மிச்சம் வைக்க வில்லையே ....பின் இப்படித்தான் கிண்டல்
சுந்தர் முத்திரை பலே
வசீகரப் புதிர்.
கருத்துரையிடுக